– திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு
– திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள்
-10 தொகுதிகள்’ – திமுக – தேமுதிக இடையே ஒப்பந்தமானது தொகுதிப் பங்கீடு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன.
இதில் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என எல்லாரிடமும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டது. பெரிய கட்சிகளில் மீதமிருந்தது மக்கள் நீதி மய்யமும், தேமுதிகவும் மட்டுமே.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக – தேசிய முற்போக்கு திராவிட கழகம் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
தேமுதிக இரட்டை இலக்க தொகுதிகள் கேட்டு வந்த நிலையில், 10 தொகுதிகளை திமுக ஒதுக்கி இருக்கிறது.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மார்ச் 24) இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 6 தனித்தொகுதிகள் மற்றும் 2 பொதுத்தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று நடைபெற்ற விசிக-வின் உயர்நிலைக் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இரட்டை இலக்கத்தில் சட்டமன்ற தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் கேட்டுப்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு கூட்டணியில் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பித்தக்கது.
தொகுதிப் பங்கீட்டிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “வலது சாரி கூட்டணி தமிழகத்தில் தடம் பதிக்கக் கூடாது என்ற கொள்கையை மனதில் வைத்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை முன்னிறுத்தி அனைத்தையும் சீர்தூக்கி முடிவு எடுத்துள்ளோம்” என்றார்.
மேலும் விடுத்லை சிறுத்தைகள் கட்சியின் நலனை போல கூட்டணியின் நலனும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது, இதில் நாங்கள் மனநிறைவோடு இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள்
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறைந்தது 6 தொகுதிகள் வேண்டும் என கோரிக்கை வைத்ததால் தாமதம் ஏற்பட்டது.
பின்னர் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, திமுக வழங்க முன்வந்த 5 தொகுதிகளை ஏற்க அந்தக் கட்சியின் மாநில செயற்குழு முடிவு செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் பெ. சண்முகம், “திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ள சூழலில், நாங்கள் கேட்ட கூடுதல் தொகுதிகளை வழங்க இயலாது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
6க்கு பதிலாக 5 தொகுதிகளை ஏற்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். எங்களின் முடிவு, எந்த வகையிலும் பாஜக அல்லது அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக அமையக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு 5 தொகுதிகளை ஏற்கிறோம்,” என்று கூறினார்.