நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் ”கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்ட கேட்டு வாரியா..” என்ற பாடலுக்கு மேடையில் நடனமாடிய பள்ளி தலைமையாசிரியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவருக்கு வயது 58. இவர் கிராமத்தை கிருஷ்ணவேணி.
சங்கரநாதர் குடிகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் ஓரத்தநாட்டில் தவெகவின் மகளிர் தினவிழா கொண்டாட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் கிருஷ்ணவேணி பங்கேற்றார்.
அதுமட்டுமின்றி மேடையில் விஜய் பாடலுக்கு நடனமாடினார். ‘சிவகாசி’ என்ற திரைப்படத்தில் விஜய், நடிகை நயன்தாராவுடன் ”கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா” என்ற பாடலுக்கு நடனமாடியிருப்பார்.
அந்த பாடலுக்கு தலைமையாசிரியை கிருஷ்ணவேணியும் நடனமாடினார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அவரை சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டனர்.
பொதுவாக அரசு பணியில் இருப்போர் கட்சி சார்ந்த விழா, கூட்டங்கள் உள்பட பிற அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க கூடாது. அதை மீறினால் அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி (Conduct Rules)படி குற்றமாக கருதப்படும்.
இந்த குற்றத்தில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக பணி நீக்கம் வரை செய்யலாம். அந்த வகையில் தற்போது தலைமையாசிரியை கிருஷ்வேணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
தற்குறிகளால் பதவி இழந்த அரசு பள்ளி ஆசிரியை 😡
தஞ்சை: ஒரத்தநாடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய விழாவில் நடனம் ஆடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையை பணியிடைநீக்கம் செய்து கல்வி அதிகாரி உத்தரவு#Thanjavur | #Dance | #TVK | #GOVTTeacher pic.twitter.com/1MDy5oFp9H
— குமார் ஆரியன் – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@ARI_KumarDMK) March 26, 2026

