இலங்கையில் காத்தான்குடி – குருக்கள்மடம் பகுதியில் யுத்தக் காலத்தில் படுகொலை செய்து புதைக்கப்பட்டதாக கூறப்படும் 170 பேரின் உடல்களை தோண்டும் நடவடிக்கைகள் மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளில் எந்த ஒரு மனித உடல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. மூன்றாம் நாளில் அகழ்வு பணிகள் தொடர்கின்றன.

குருக்கள்மடத்தில் 170 முஸ்லிம்களை விடுதலை புலிகள் படுகொலை செய்து, புதைத்ததாகக் கூறப்படும் இடமே இவ்வாறு தோண்டப்படுகின்றது. நீதிமன்ற உத்தவின் பேரில் – நேற்று முன்தினம் (30) ஆரம்பித்த இந்த அகழ்வு நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.

1990ஆம் ஆண்டு ஹஜ் கடமையை முடித்து விட்டு, காத்தான்குடி திரும்பியவர்கள் உள்ளிட்ட 170 பேரை குருக்கள்மடத்தில் வழிமறித்த விடுதலை புலிகள், கொலை செய்து புதைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version