ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அருகே குவைத் கொடி ஏந்திய கப்பல் ஒன்று “அடையாளம் தெரியாத ஏவுகணையால்” தாக்கப்பட்டுள்ளது. அல்-சால்மி என்கிற கப்பல் துபை அருகே கடலில் தாக்குதலுக்கு உள்ளானதாக கடற்சார் உளவு நிறுவனமான வான்கார்ட் தெரிவிக்கிறது.

கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பதாக இருப்பதாகவும் எந்த சுற்றுச்சூழல் தாக்கமும் காணப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்த தகவல்களை துபை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர், ஆனால் கப்பலின் பெயரை அவர்கள் குறிப்பிடவில்லை.

2011-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அல்-சால்மி கப்பல் குவைத் அரசு எண்ணெய் கப்பல் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

மற்றுமொரு கடற்சார் உளவு நிறுவனமான டாங்கர்ட்ராக்கர்ஸ் தரவுகளின்படி, அந்த கப்பல் 1.2 மில்லியன் பேரல் சௌதி கச்சா எண்ணெயும் 8 லட்சம் பேரல் குவைத் கச்சா எண்ணெயையும் சுமந்து சென்றது. இந்தக் கப்பல் சீனாவில் உள்ள கிங்டாவோவை நோக்கிச் சென்றதாக மரைன்டிராஃபிக் என்கிற தளத்தில் உள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply