நாட்டின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை யாரிடமாவது ஒப்படைப்பது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லை என இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாபி திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

பிபிசி பாரசீக சேவையின் தகவலின்படி, இஸ்மாயில் பகாபி கூறுகையில், “தற்போதைய அல்லது கடந்த கால பேச்சுவார்த்தைகளின் எந்தவொரு கட்டத்திலும், இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டிற்கும் மாற்றுவது குறித்த திட்டம் எதுவும் இல்லை.” என்றார்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பைப் பெறுவதற்கும், பின்னர் அதை அமெரிக்காவிற்கு மாற்றுவதற்கும் இரானுடன் இணைந்து அமெரிக்கா செயல்படும் என்று தெரிவித்திருந்தார்.

 

 

Share.
Leave A Reply