தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் என்பதை தாண்டி சமந்தாவும், கீர்த்தி சுரேசும் நல்ல தோழிகளும் கூட. இருவரும் எங்கு சந்தித்தாலும் இருக்கும் வேலையை மறந்து ஜாலியாக பேசிக்கொண்டிருப்பதை அடிக்கடி காணலாம்.

இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் குறித்து சமந்தா தெரிவித்துள்ள விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளன.

“கீர்த்தி சுரேஷ் பற்றி அடிக்கடி சில வதந்திகள் வெளியாகும். அவருக்கு குடிப்பழக்கம் இல்லை. ஆனால் கீர்த்தி சுரேசுக்கு இன்னொரு பக்கம் உண்டு. ‘ஹைப்பர் மேக்ஸ்’ என்று சொல்லக்கூடிய அதீத நகைச்சுவை உணர்வு அவருக்கு உண்டு.

அவர் அருகில் இருந்தால் நேரம் போவதே தெரியாது. நள்ளிரவு தாண்டியும் சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் அளவு தொடர்ந்து நகைச்சுவையாக பேசிக்கொண்டே இருப்பார்.

ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் ரைமிங் வசனம் பேசி, நம்மை டேமேஜ்-ம் செய்துவிடுவார். எனக்கு தெரிந்தவர்களில் அதிகம் சிரிக்க வைக்கும் பெண்மணி அவர்தான்”, என்கிறார் சமந்தா.

Share.
Leave A Reply

Exit mobile version