-2025 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்­கப்­பட்ட, 5.7 பில்­லியன் ரூபாய் ( 570 கோடி)  நிதி திறை­சே­ரிக்கு திருப்பி அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தி­ருக்­கி­றது.

-8 பில்­லியன் ரூபா (800 கோடி (800 Crores) நிதி ஒதுக்­கப்­பட்ட நிலையில் அதில் பெரும்­ப­குதி பயன்­ப­டுத்­தப்­ப­டாமல் திரும்­பி­யி­ருக்­கி­றது.

கணக்­காய்வு அறிக்கை ஒன்றை ஆதாரம் காட்டி யாழ். மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழு கூட்­டத்தில் வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே. சிவ­ஞானம் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

8 பில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீட்டில் 5.7 பில்­லியன் ரூபா திருப்பி அனுப்­பப்­பட்­டது என்­பது பார­தூ­ர­மான ஒரு விடயம்.

வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்­கீடு செய்­யப்­படும் நிதி பயன்­ப­டுத்­தப்­ப­டாமல் திருப்பி அனுப்­பப்­ப­டு­கி­றது என்ற குற்­றச்­சாட்டு, நீண்­ட­கா­ல­மா­கவே முன்­வைக்­கப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது.

வடக்கு மாகாண சபைக்கு குறைந்­த­ளவு நிதியே ஒதுக்­கப்­ப­டு­வ­தாக ஒவ்­வொரு வரவு செலவு திட்­டத்தின் போதும் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­வது வழக்கம்.

2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை தெரிவு செய்­யப்­பட்ட பின்னர் அதன் பத­விக்­காலம் முடி­வ­டையும் வரை ஒதுக்­கப்­பட்ட நிதியை செல­வி­டாமல் வடக்கு மாகாண சபை திருப்பி அனுப்­பி­யுள்­ள­தாக குற்­றச்­சாட்­டுகள் கூறப்­பட்­டன.

அதனை அப்­போது ஆட்­சியில் இருந்த வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.விக்­னேஸ்­வரன் மற்றும் அமைச்­சர்கள் நிரா­க­ரித்து வந்­தி­ருந்­தார்கள். இது ஓர் அர­சியல் பிர­சா­ர­மாக வடக்கு மாகாண சபைக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்டு வந்­தது.

தமிழர் பிர­தி­நி­தி­களால் வடக்கு மாகா­ணத்தை முன்­னேற்ற முடி­ய­வில்லை, அதற்­காக ஒதுக்­கப்­படும் நிதியை கூட சரி­யாக செல­விடத் தெரி­யாமல் அதற்கு திட்­ட­மிடத் தெரி­யாமல் இருக்­கி­றார்கள் என்ற ஒரு விம்பம் உரு­வாக்­கப்­பட்டு வந்­தது.

இது வடக்கு மாகாண நிர்­வா­கத்தை மத்­திய அரசின் கீழ் வைத்­தி­ருப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட ஒரு முயற்சி என்றும் கூட சொல்­லலாம்.

தற்­போது கூட வடக்கு மாகாணம் மத்­திய அரசின் மேற்­பார்­வையின் கீழேயே -ஆளு­நரின் நிர்­வா­கத்தில் உள்­ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு 4 பில்­லியன் ரூபா மாத்­தி­ரமே வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது.

எனினும், தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர், 2025 ஆம் ஆண்டு இந்த நிதி ஒதுக்­கீடு இரண்டு மடங்­காக அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக பர­வ­லான பிர­சாரம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

இது வடக்கின் மீது தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் அதிக கரி­சனை கொண்­டி­ருக்­கி­றது என்ற பிர­சா­ரத்­திற்கு வழி­வ­குத்­தது.

ஆனால் அதில் 5.7 பில்­லியன் ரூபா நிதி திருப்பி அனுப்­பப்­பட்­டி­ருக்­கி­றது. இது பற்றி எங்கும் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

2026ஆம் ஆண்டின் கட­மையை ஆரம்­பிக்கும் விசேட நிகழ்வு, ஆளுநர் செய­ல­கத்தில் கடந்த ஜன­வரி 1ஆம் திகதி நடை­பெற்ற போது, உரை­யாற்­றிய வடக்கு மாகாண பிரதிப் பிர­தம செய­லாளர் (நிதி) ஆர்.சிவ­ரூபன், 2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்­டத்தின் ஊடாக வடக்கு மாகா­ணத்­துக்கு ஒதுக்­கப்­பட்ட நிதியில், 98 சத­வீ­தத்­துக்கும் அதி­க­மான நிதியைத் வினைத்­தி­ற­னாகச் செலவு செய்து, ஏனைய மாகா­ணங்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் வடக்கு மாகாண சபை முத­லி­டத்தைப் பிடித்­துள்­ள­தாக கூறி­யி­ருந்தார்.

“வடக்கு மாகா­ணத்­துக்கு ஒதுக்­கப்­பட்ட நிதியின் நூறு சத­வீதக் கட்டு நிதி­யையும் நாம் திறை­சே­ரி­யி­ட­மி­ருந்து பெற்­றுள்ளோம்.

டிசெம்பர் 30ஆம் திகதி நள்­ளி­ரவு வரையில் 98 சத­வீ­தத்­துக்கும் அதி­க­மான நிதியைச் செலவு செய்­துள்ளோம்” என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.

ஆனால் அதற்கு மாறாக, மத்­திய அரசின் கணக்­காய்வு அறிக்­கையில் 5.7 பில்­லியன் ரூபாய் நிதி திருப்பி அனுப்­பப்­பட்­ட­தாக கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

இது மொத்­த­மாக அனுப்­பப்­பட்ட நிதியில் 71 சத­வீதம் ஆகும்.

இது வடக்கு மாகாண நிர்­வா­கத்தின் வினைத்­தி­ற­னின்­மையை மாத்­திரம் வெளிப்­ப­டுத்­த­வில்லை, வெளிப்­ப­டைத்­தன்­மை­யற்ற நிலை­யையும் எடுத்­துக்­காட்­டு­கி­றது.

இந்த ஆண்டின் தொடக்­கத்தில் வடக்கு மாகாண நிர்­வாகம், 100 சத­வீத நிதி­யையும் திட்­டங்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கிறோம் என உரிமை கோரி­யி­ருந்­தது.

இந்த நிலையில், 70 வீதத்­திற்கும் அதி­க­மான நிதியை திறை­சே­ரிக்குத் திருப்பி அனுப்பி விட்டே இந்தத் தகவல் வெளி­யி­டப்­பட்­டி­ருப்­பது பார­தூ­ர­மான விடயம். இது உண்­மையை திட்­ட­மிட்டு மறைக்கும் நோக்கம் கொண்ட கருத்து.

கடந்த காலங்­களில் வடக்கு மாகாண சபை வினைத்­தி­ற­னற்­றது என்ற குற்­றச்­சாட்டு கூறப்­பட்­ட­தற்கு, அதனை மத்­திய அரசின் நிர்­வா­கத்தின் கீழ் கொண்டு வரு­வ­தற்­கான முனைப்புத் தான், அடிப்­படைக் காரணம்.

தற்­போ­தைய அர­சாங்­கத்­திற்கு கூட, வடக்கு மாகாண சபையை மாத்­தி­ர­மல்ல, ஏனைய மாகா­ண­ச­பை­க­ளையும் சுயா­தீ­ன­மாக இயங்க அனு­ம­திக்கும் நோக்கம் இல்லை.

அவற்­றுக்கு தேர்­தலை கூட நடத்­தாமல் இழுத்­த­டித்து வரு­கி­றது. மாகாண சபை­களை வெள்ளை யானை என்றும் அவற்­றுக்கு வீண் செல­வி­னங்கள் ஏற்­ப­டு­வ­தா­கவும் கூறப்­படும் கருத்­துக்­க­ளுடன் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் கொள்கை வேறு­பட்­ட­தல்ல.

மாகாண சபை­களை ஒழிக்­கின்ற வேண்டும் என்ற கருத்தை கடந்த காலங்­களில் கூறிய கட்­சியே இப்­போது ஆட்­சியில் இருக்­கின்­றது.

இந்தச் சூழலில், வடக்கு மாகாண நிர்­வாகம், மத்­திய அர­சாங்­கத்­தினால் கையா­ளப்­ப­டு­கின்ற சூழலில் அதற்கு அனுப்­பப்­பட்ட பெருந்­தொகை நிதி திருப்பி அனுப்­பப்­பட்­ட­தா­னது மத்­திய அரசின் நிர்ப்­பந்­தத்தின் ஊடாக இடம்­பெற்­றதா அல்­லது அதன் இர­க­சிய நிகழ்ச்­சி­களில் ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட்­டதா அல்­லது மாகா­ணத்தின் வினைத்­தி­ற­னற்ற தற்­போ­தைய நிர்­வாக கட்­ட­மைப்பின் தோல்­வியின் விளைவா என ஆரா­யப்­பட வேண்டும்.

ஏனென்றால், 2025 ஆம் ஆண்டு வடக்கு மாகா­ணத்­திற்கு இரட்­டிப்பு நிதி ஒதுக்­கப்­பட்­டது என்ற பிர­சாரம் செய்­யப்­பட்­டது. தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் அதனை ஒரு முக்­கிய பிர­சா­ர­மாக்­கி­யது. இந்தச் சூழலில் அந்த நிதியின் பெரும் பகுதி மீண்டும் மத்­திய அரசின் துறை­சே­ரிக்கு அனுப்­பப்­பட்­ட­தா­னது சாதா­ரண விட­ய­மாக ஒதுக்கித் தள்ளக் கூடி­ய­தல்ல.

கடந்த கால­கட்­டங்­களில், மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட ஆட்­சி­யா­ளர்­களும் அதி­கா­ரி­களும் இதனை ஒரு குற்­றச்­சாட்­டாக கூறி வந்­தி­ருக்­கி­றார்கள்.

அந்த குற்­றச்­சாட்டு தற்­போ­தைய நிலை­யிலும் நீடிக்­கி­றது என்றால், அதற்குப் பின்னால் ஒரு சக்தி இருக்­கி­றது என்­பதை புரிந்து கொள்­வது கடினம் அல்ல.

இப்­போ­தைய ஆளுநர் நீண்­ட­காலம் நிர்­வாக துறையில் அனு­பவம் கொண்­டவர்.

ஆனாலும் அவர் அர­சியல் நிகழ்ச்சி நிர­லுக்கு உட்­பட்­ட­வ­ராக உள்­வாங்­கப்­பட்­டுள்ள சூழலில், நிதி ஒதுக்­கீடு செல­வி­டப்­ப­டாமல் திரும்­பி­யுள்­ளது.

இந்த விட­யத்தில் வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் செயற்­பட வேண்­டி­யது முக்­கியம்.

கடைசி நேரம் வரை திட்­டங்­க­ளுக்கு நிதி ஒதுக்­கீ­டு­களை செய்­யாமல் இழுத்தடிப்பது வாடிக்கையான விடயம்.

கடைசி நேரத்தில் எஞ்சிய நிதியை செலவிட்டு முடிக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதும், அவை தரமற்றதாக குறைபாடுகள் கொண்டதாக இருப்பதும் வழக்கமானது. வடக்கு மாகாண நிர்வாகத்தில் மாத்திரமன்றி ஏனைய நிர்வாகங்களிலும் இந்த குறைபாடு உள்ளது.

தற்போதைய அரசாங்கம் இவ்வாறான குறைபாடுகளை களைவதாக கூறிக் கொண்டா லும் அதன் நேரடி கவனிப்பில் உள்ள வடக்கு மாகாணத்தில் கூட பெருந்தொகை நிதி திருப்பி அனுப்பப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசியல்மயமாக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு களை குற்றம் சாட்டிய தரப்புக்களே இப்போது சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

-கபில்-

Share.
Leave A Reply