இலங்கையின் லொத்தர் வரலாற்றில்

– காசோலைகள் வழங்கி வைப்பு

அபிவிருத்தி லொத்தர் சபையினால் (DLB) முன்னெடுக்கப்படும் ‘கப்ருக்க’ (Kapruka) அதிர்ஷ்ட லாபச் சீட்டு இழுப்பில், இலங்கையின் லொத்தர் வரலாற்றில் ஒருவருக்கு வழங்கப்பட்ட அதிகூடிய பரிசுத்தொகையான ரூ. 629,855,919.60 (சுமார் 63 கோடி) மெகா ஜொக்பொட் வெற்றியாளர் உள்ளிட்ட 51 பேருக்கு இன்று காசோலைகள் கையளிக்கப்பட்டன.

கடந்த 2026.02.19 அன்று நடைபெற்ற ‘கப்ருக்க’ இழுப்பில் இந்த மாபெரும் ஜொக்பொட் வெற்றி பதிவாகியது.

இன்றைய நிகழ்வில் சுப்பர் ஜொக்பொட் வெற்றியாளர், 25 இலட்சாதிபதிகள், 20 இலட்சாதிபதிகள் மற்றும் 10 இலட்சாதிபதிகள் என மொத்தம் 51 வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இந்த வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்ட மொத்தப் பரிசுத்தொகையின் பெறுமதி 707,463,606 ரூபா ஆகும்.

அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டுக்களை விற்பனை செய்த முகவர்களுக்கும் இதன்போது காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் சட்டத்தரணி ஹேமந்த ஸ்வர்ணதிலக்க மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version