அண்மையில் அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா அந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியை “சுத்தப்படுத்தும்” பணியைத் தொடங்கியுள்ளதாகக் கூறிய நிலையில், ஈரான் போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போருக்குப் பிறகு, முதல் முறையாக இரண்டு அமெரிக்க போர் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில், அந்த முக்கியமான கடல் பாதையை “சுத்தப்படுத்தும்”பணியை தொடங்கியுள்ளோம்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை கூறினார்.
அமெரிக்க கடற்படையின் ஏவுகணை தாங்கி அழிக்கும் கப்பல்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் அந்த நீரிணையை கடந்ததாக, மூன்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டது.
இந்த நடவடிக்கை ஈரான் அதிகாரிகளுடன் இணைந்து செய்யப்படவில்லை என்று ஆக்சியோஸ் (Axios ) ஊடகம் தெரிவித்தது.
“நாங்கள் இப்போது ஹார்முஸ் நீரிணையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளோம்,” என்று ட்ரம்ப் தனது Truth Social தளத்தில் கூறினார்.
இது சீனா, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்காக “செய்யும் உதவி” என்றும், அவர்கள் இதைச் செய்யத் துணிவோ மனவலிமையோ இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
இந்த மோதலில் ஈரான் “பெரிதாக தோல்வியடைகிறது” என்றும் அவர் கூறினார். ஆனால் அந்த நீரிணையில் ஈரான் வைத்துள்ள கடல் கன்னிவெடிகள் (வெடிகுண்டுகள்) இன்னும் அபாயமாக உள்ளன என்றும் ஒப்புக்கொண்டார்.
“அவர்கள் வைத்திருக்கும் ஒரே அச்சுறுத்தல் என்னவென்றால், ஒரு கப்பல் அவர்கள் வைத்துள்ள கடல் மைனில் மோதிவிடும் என்பதே,” என்று ட்ரம்ப் கூறினார்.
இந்த தகவல்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் உடனடியாக பதில் அளிக்கவில்லை.
ஈரான் கடற்கரைக்கு அருகிலுள்ள இந்த முக்கியமான கப்பல் போக்குவரத்து பாதை, பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானால் பெரும்பாலும் மூடப்பட்டு இருந்தது.
இந்த வாரம் ஏற்படுத்தப்பட்ட பலவீனமான சமாதான ஒப்பந்தத்தில், அந்த நீரிணையை மீண்டும் திறப்பது ஒரு நிபந்தனையாக இருந்தது.
இதற்கிடையில், இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர முயற்சியாக, மூத்த ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் பாகிஸ்தானில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன.
முன்னதாக, உலகின் பல பகுதிகளிலிருந்து காலியான எண்ணெய் கப்பல்கள் அமெரிக்காவுக்கு எண்ணெய் வாங்க வருகிறன என்றும் ட்ரம்ப் கூறினார்.

