யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தி சமிக்ஞை விளக்குப் பகுதியில், நல்லூர் பிரதேச சபையினரால் சாக்குத் துணிகளைக் கொண்டு தற்காலிக நிழற்பந்தல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கடும் வெயிலுக்கு மத்தியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் துவிச்சக்கரவண்டிப் பயணிகளுக்கு தற்காலிக நிழல் வழங்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இரவு அமைக்கப்பட்ட இந்த தற்காலிக நிழற்பந்தலை தற்போது பயணிகள் பயன்படுத்தி வருவதுடன், இது குறித்த செய்திகள் இன்றைய தினம் சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு பேசுபொருளாக மாறியுள்ளன

Share.
Leave A Reply

Exit mobile version