Uttar Pradesh மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழாவில் ஒரு வயது குழந்தை மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த குழந்தை திடீரென காணாமல் போனதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குழந்தை தூங்கிய நிலையில் ஒரு அறையில் வைத்துவிட்டு பெற்றோர் நிகழ்ச்சியில் இருந்த போது, அந்த குழந்தை மர்மமாக காணாமல் போயுள்ளது. உடனடியாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில் வெள்ளை உடை அணிந்த ஒரு பெண் குழந்தையை தூக்கிச் செல்வது தெரியவந்துள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு போலீசார் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.

விசாரணையில், ஒரு நர்ஸ் உட்பட சிலர் சேர்ந்து குழந்தையை கடத்தி, குழந்தையில்லாத தம்பதியருக்கு பணத்திற்கு விற்க திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. கடத்தலுக்காக முன்பணம் வழங்கப்பட்டதும் உறுதியாகியுள்ளது.

மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட குழந்தை 72 மணி நேரத்தில் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version