Tamil Nadu மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 3 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்கள் முன்கூட்டியே மதுபானங்களை அதிக அளவில் வாங்கியதால் விற்பனை திடீரென உயர்ந்துள்ளது.

Tamil Nadu Election 2026 முன்னிட்டு, ஏப்ரல் 21 முதல் 23 வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ஆம் தேதியும் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், ஒரே நாளில் சுமார் ரூ.400 கோடி மதிப்பிலான மதுபான விற்பனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது சுமார் ரூ.80 கோடி அதிகமாகும் என கூறப்படுகிறது.

தேர்தல் கால கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட இந்த முன்கூட்டிய கொள்முதல், மதுபான விற்பனையில் புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளதாக வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version