இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) டிஜிட்டல் கட்டண முறைகளில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட வரம்புக்குள் நடைபெறும் ஆட்டோ டெபிட் பரிவர்த்தனைகளுக்கு இனி OTP தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறையின்படி, மாதாந்திர சந்தா கட்டணங்கள், SIP முதலீடுகள், OTT சந்தாக்கள், DTH ரீசார்ஜ், ஜிம் கட்டணங்கள் போன்ற தானியங்கி கட்டணங்களில் ₹15,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு OTP verification நீக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் ஒவ்வொரு முறையும் OTP உள்ளிட வேண்டிய அவசியம் இருக்காது.

அதே நேரத்தில் ₹15,000-ஐ கடந்த பரிவர்த்தனைகளுக்கு OTP கட்டாயமாக தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காப்பீடு பிரீமியம் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் போன்றவற்றுக்கு அதிகபட்சம் ₹1 லட்சம் வரையிலும் auto-debit வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த மாற்றத்தின் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மேலும் எளிதாகவும் விரைவாகவும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு டெபிட் முன்பும் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே SMS அலர்ட் அனுப்பப்படும் என்றும் RBI தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version