மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த சில மாதங்களாகத் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வந்தது. குறிப்பாக, மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலரைத் தாண்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. எனினும், போர்ச் சூழலில் ஏற்பட்ட சிறிய தளர்வுகள் மற்றும் அமெரிக்க டொலரின் வலுவான நிலைப்பாடு காரணமாகத் தற்போது விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 25), சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 4,708 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. அத்துடன், வெள்ளி விலையும் வீழ்ச்சியடைந்து ஒரு அவுண்ஸ் வெள்ளி 75.69 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையின் இந்த மாற்றங்கள் காரணமாக, இலங்கையிலும் ஆபரணத் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் 24 கரட் தங்கம் சுமார் 49,360 ரூபாவுக்கும், 22 கரட் தங்கம் 45,250 ரூபாவுக்கும் விற்பனையான நிலையில், இன்று இந்த விலையில் மேலும் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version