ஞாயிற்றுக்கிழமை நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 37 பேர் காயமடைந்ததாகவும் லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்ட நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் தனது பாதுகாப்புக்காக எந்த நேரத்திலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உரிமை கொண்டுள்ளது.

தாக்குதலுக்கு முன்பு, தெற்கு லெபனானில் உள்ள பல கிராமங்களில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், அங்கு தங்கியிருப்பது அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் எச்சரித்திருந்தார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தீவிரமாகவும் வீரியமாகவும் செயல்பட்டு வருவதாகக் கூறினார். போர் நிறுத்தத்தை ஹெஸ்பொலா மீறியதாக அவர் குற்றம் சாட்டினார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version