கேகாலை – தேவலகம பகுதியில் கடந்த 26-ஆம் திகதி மனிதாபிமானமற்ற முறையில் தாயொருவர் தனது மகனாலேயே கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் பாவனைக்குத் தீவிரமாக அடிமையாகியுள்ள 20 வயதுடைய இளைஞன், தனது நண்பர்களுடன் போதைப்பொருள் நுகர்வதற்காகத் தாயிடம் 5,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார். மகனின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி தாய் அவ்வப்போது பணம் கொடுத்து வந்த நிலையில், இம்முறை தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மகன், கையில் கிடைத்த பொருட்களால் தாயைத் தாக்கியதுடன், இறுதியாக ஒரு தடியை எடுத்து அவரது இரு கால்களிலும் பலமாக அடித்துள்ளார். இந்தத் தாக்குதலில் அந்தப் பெண்ணின் இரு கால்களிலும் எலும்பு முறிவு (Fracture) ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த 46 வயதான அந்தத் தாய், முச்சக்கர வண்டி மூலம் கேகாலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பாகத் தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான மகனைக் கைது செய்ய கேகாலை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply