“தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தன.
பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்படுகின்றன.தமிழகத்தில் இம்முறை திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நடந்தன..
இதில், வெற்றிப்பெறபோவது யார் என வாக்கு எண்ணிக்கை அன்று அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.
இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தரப்பில் எடுக்கப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது..
மொத்த தொகுதிகள்- 234
பெரும்பான்மை- 118
அதன்படி, தமிழ்நாட்டில் திமுக தான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என என்டிடிவி-ன் PEOPLE’S PULSE கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது..
NDTV- PEOPLE’S PULSE
திமுக கூட்டணி – 125 – 145 தொகுதிகள்
அதிமுக கூட்டணி – 65 – 80 தொகுதிகள்
தவெக\t\t\t – 18 – 24 தொகுதிகள்
நாம் தமிழர் t – 0 தொகுதிகள்.
திமுக கூட்டணி 122 முதல் 132 தொகுதிகள் வரை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என ரீபப்ளிக் டிவி-ன் P MARQ கணித்துள்ளது.
REPUBLIC TV P MARQ
திமுக கூட்டணி – 125 – 154 தொகுதிகள்
அதிமுக கூட்டணி – 65 – 85 தொகுதிகள்
தவெக\t\t\t – 16- 26 தொகுதிகள்
நாம் தமிழர் – 0.
MATRIZE
திமுக கூட்டணி – 122 – 132 தொகுதிகள்
அதிமுக கூட்டணி – 87 – 110 தொகுதிகள்
தவெக -10- 12 தொகுதிகள்
நாம் தமிழர் – 0

