2026-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத இறுதியில் இலங்கை ரூபாயின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகராக 2.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாத இறுதியில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர்ப் பதற்றங்கள் மற்றும் அரசியல் மோதல் சூழல்கள் காரணமாக, வெளிநாட்டுத் துறையில் (External Sector) ஏற்பட்ட கடும் அழுத்தங்களே இந்த வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டுக் கையிருப்பு 2026 மார்ச் மாத இறுதியில் 7.0 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. இதில் சீனாவின் மக்கள் வங்கியுடனான (PBoC) பரிமாற்ற வசதியும் உள்ளடங்கும். சந்தையிலிருந்து மத்திய வங்கி வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவு செய்த போதிலும், அந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய வெளிநாட்டு கடன் சேவை கொடுப்பனவுகள் (Debt Servicing) காரணமாக, ஒட்டுமொத்த கையிருப்பில் சரிவு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version