முல்லைத்தீவு கடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை (02.05.2026) மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள், நடுக்கடலில் மாயமான நிலையில் இன்று காலை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கள்ளப்பாடு தெற்கு பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள், தொழிலுக்குச் சென்றபோது படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகக் கரை திரும்ப முடியாமல் கடலில் தத்தளித்துள்ளனர். மீனவர்கள் வீடு திரும்பாததை அடுத்து, உறவினர்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில் இன்று தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இருவரையும் சக மீனவர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர். இரண்டு நாட்களாக உணவும் நீரும் இன்றி கடலில் சிக்கியிருந்த போதிலும், தற்போது அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயந்திரக் கோளாறே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மீனவர்கள் பாதுகாப்பாகக் கரை திரும்பியதையடுத்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மீட்புச் சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version