குருந்தூர்மலை அடிவாரத்தில் தமது பூர்வீக விவசாய நிலங்களில் பயிற்செய்கை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த 10.05.2025 அன்று தமிழ் விவசாயிகள் மூவர் பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டபோது, தொல்லியல் பகுதிக்குள் பண்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். பௌத்த பிக்குகள் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிசார் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இந் நிலையில் குறித்த நிலங்கள் முழுவதும் தமிழ் மக்களின் நிலங்கள் எனக்குறிப்பிட்டுள்ள வன்னிமாவட்டாநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தொல்லியல் பகுதிக்குள் குறித்த விவசாயிகளால் பண்படுத்தல் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தால்கூட, அதுதொடர்பில் தொல்லியல் திணைக்களமே முறைப்பாடு செய்திருக்கவேண்டும்மெனவும், இது தொடர்பில் பௌத்த பிக்குகள் முறைப்பாடு செய்வார்களானால் தொல்லியல் திணைக்களம் பௌத்த பிக்குகளது கூடாரமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அத்தோடு இனவாதத்தைத் தூண்டுகின்றவகையில் செயற்படுகின்ற இவ்வாறான பௌத்த பிக்குகளுக்கெதாராக தற்போதைய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேட்டுக்கொண்டுள்ளார். குருந்தூர்மலைப் பகுதியில் தமிழ் விவசாயிகள் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில் பௌத்த…
Author: owner
ஹிட்லரின் ராணுவத்திற்கு ராக்கெட் செய்து கொடுத்த விஞ்ஞானிதான், நிலவில் கால் பதித்த அமெரிக்காவின் சாதனைக்கு பின்னால் இருந்தவர். அவரின் பெயர் வார்னர் வான் ப்ரான். ஹிட்லரின் ஜெர்மனியில், ராக்கெட் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தவராக இருந்த அவரின் ஆராய்ச்சியில்தான் வி2 என்ற ஏவுகணை உருவானது. இந்த ஏவுகணையை பயன்படுத்திய ஹிட்லரின் படை, இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கர்களையும் சோவியத் படைகளையும் கதி கலங்க செய்தது. இந்த விஞ்ஞானி போருக்கு பின் அமெரிக்காவில் தஞ்சமடைந்தார். அவரின் வாழ்க்கை பல வியத்தகு சாதனைகளை உள்ளடக்கியது. வார்னர் வான் ப்ரான், மனித குலம் ஒரு நாள் நட்சத்திரங்களை அடையும் என்று உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், நடைமுறையில் அவர் போருக்கான ராக்கெட் தயாரிக்க தொழில்நுட்பம் வகுத்துக் கொடுத்தார். நாஜி ஜெர்மனியிலிருந்து நாசா வரையிலான அவரது வாழ்க்கைப் பயணம் இலக்கும், அறநெறியும், புவிசார் அரசியலும் சந்திக்கும் முரண்பாட்டின் வெளிப்பாடாகும். நாஜி பொறியாளர் ஜெர்மனியின் விர்சிட்ஸ் நகரில் 1912 ஆம் ஆண்டு…
காசாவில் இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் அங்கு தொடர்ந்து இடம்பெற்று வரும் உக்கிர தாக்குதல்களில் நேற்றும் (11) பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு நகரான கான் யூனிஸில் இரு கூடாரங்கள் மீது இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதல்கள் ஒவ்வொன்றிலும் தலா இரு குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோன்று ஆடவர் மற்றும் சிறுவர் ஒருவர் சென்று கொண்டிருந்த சைக்கிள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த இருவரும் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏ.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக கடந்த சனிக்கிழமை காசா நகரின் சப்ரா பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றுள்ள கூடாரம் ஒன்றின் மீது இஸ்ரேலிய போர் விமானம் நடத்திய தாக்குதல் ஒன்றில் திலைப் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா கூறியது. ‘கூடாரத்திற்குள் மூன்று குழந்தைகள், அவர்களின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் உறங்கிக் கொண்டிருந்தபோது…
“அரியலூர், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வி (45). இவர்களுடைய மகள்கள் ரஞ்சனி (19), சந்தியா (17). இதில், ரஞ்சனி பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். சந்தியா சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார். இந்த நிலையில் ரவி அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் செல்வி, மகள் ரஞ்சனி ஆகியோர் வீட்டு வேலைகளை கவனித்து வந்தனர். இளைய மகள் சந்தியா வீட்டில் சமையல் செய்து தனது தந்தை மூலம் தாயார் மற்றும் அக்காளுக்கு அனுப்பி வந்துள்ளார். நேற்று மதியம் வெகுநேரமாகியும் வீட்டிலிருந்து உணவு வராததால் செல்வியும், ரஞ்சனியும் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது சந்தியா கயிற்றால் கழுத்தை இறுக்கியும், ரவி தூக்கில் தொங்கியவாறும் பிணமாக கிடந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அலறி துடித்தனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த…
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலுடன், பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சருவேலி ரயில் கடவைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 46 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். ரயில்வே சிக்னல்கள் செயலில் இருந்தபோது விபத்து நிகழ்ந்ததாகவும், எச்சரிக்கையை மீறி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர் பளையைச் சேர்ந்தவர் எனவும் அடையாளங் காணப்பட்டுள்ளது. பளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
சிலருக்கு நாக்கில் வெள்ளையாகப் படியக்கூடும். இதற்கு முக்கியக் காரணம் வாய் சுகாதாரமின்மை தான். நாக்கின் மேல்புறத்தில் சிறுசிறு இழை போன்ற அமைப்பு இருக்கும். இதனால்தான் நாக்கு சொரசொரப்பாக இருக்கும். இழை போன்ற சுவை அரும்புகள்தான் நாம் சாப்பிடும் உணவின் சுவையை நமக்குத் தெரிவிக்கும். வாய்ப்பகுதி சுத்தமில்லாமல் இருப்பது, நோய்த்தொற்று, நாக்கில் அழுக்குப் படிவது போன்ற காரணங்களால் அந்த இழை போன்ற அரும்புகள் அளவுக்கு அதிகமாக வளரும். இதனை ‘ஹைப்பர்டிராபி’ (Hypertrophy) என்பார்கள். இவை அதிகமாக வளர்வதால் என்ன சாப்பிட்டாலும் நாக்கில் சென்று படியத் தொடங்கும். சிலருக்கு நாக்கின் சில இடங்களில் மட்டும் திட்டுத் திட்டாக வெள்ளை நிறத்தில் படிந்திருக்கும். அது பார்ப்பதற்கு வரைபடம் (Map) போல இருக்கும். இதனை ‘ஜியோகிராஃபிக் டங்’ (Geographic Tongue) என்பார்கள். விட்டமின் பி குறைபாட்டினால் இது ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது, நிறைய மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது, அறுவை சிகிச்சை செய்திருக்கும்போது உள்ளிட்ட…
பதுளை – மஹியங்கனை, யல்வெல பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மகளின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பதுளை , ரிதிமாலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய காதலனே கொலைசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொலைசெய்யப்பட்டவர் சந்தேக நபரின் மகளுடன் நீண்ட நாட்களாக காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட சந்தேக நபரான தந்தை தனது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பின்னர் சந்தேக நபரின் மகள் தனது காதல் உறவை முறித்துக்கொண்டு வேலை நிமித்தம் கொழும்பு பிரதேசத்திற்கு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த காதலன் நேற்று சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்று சந்தேக நபரை பொல்லால் தாக்கியுள்ளார். காயமடைந்த சந்தேக நபரான தந்தை, மகளின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து 57 வயதுடைய சந்தேக நபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தனது ஒன்பது மாத குழந்தையுடன் பஸ்ஸின் இடிபாடுகளுக்கள் சிக்கியிருந்த தாய் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் காப்பாற்றியுள்ளார். குழந்தையை காப்பாற்றிய 45 வயதுடைய தாய் பின்னர் உயிரிழந்துள்ள துயரம் சம்பவம் பதிவாகியுள்ளது. கடுமையான காங்களுடன் பஸ்ஸிற்குள் சிக்கியிருந்த குறித்த தாய் மற்றும் அவரது குழந்தை பாதுகாப்பு பிரிவினர் கடும் பிரயத்தனத்துக்கு பின்னர் மீட்டுள்ளனர். இதனை அடுத்து தாயும் குழந்தையும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 45 வயதுடைய தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், 9 மாதங்களேயான குழந்தை காப்பாற்றப்பட்டதுடன் குறித்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மே மாதம் 11 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அன்னையர் தினம் கொண்டப்பட்ட வேளையில் இந்த துயரச் சம்பவத்தின் புகைப்படம் அனைவரின்…
கள்ளக்காதலி தாக்கியதில் ஒருவர் மரணமடைந்த சம்பவமொன்று பேருவளை, வலத்தர பகுதியில் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (11) இரவு உயிரிழந்துள்ளார். அந்த வீட்டில் இருந்த இருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை (11) இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த ஒருவர் விழுந்துவிட்டதாக பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், காயமடைந்த நபரை உடனடியாக பேருவளை மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், அவர் மரணமடைந்துவிட்டார் என பொலிஸார் தெரிவித்தனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை அடுத்தே, அந்த நபரின் கள்ளக்காதலி தாக்கியதில், அந்த நபர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் வலத்தர, பேருவளை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என்றும், 42 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பௌத்த மதத்தைப் பின்பற்றும் உலக மக்கள் அனைவரும் புனித வெசாக் தினத்தை மே மாதம் இருபத்து மூன்றாம் திகதி அனுஷ்டிக்கின்றனர். வெசாக் பௌர்ணமி போயா தினமானது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானமடைதல், (பரிநிர்வாண நிலை) இறப்பு ஆகியவற்றைக் குறித்து நிற்கும் ஒரு தினமாக, கருதப்படுகின்றது. இவ்வாறானதொரு பௌர்ணமி நாளிலேயே சித்தார்த்த கௌதமர் ‘லும்பினி’ (இன்றைய நேபாளம்) என்னுமிடத்தில் பிறந்ததுவும், ‘புத்தகயா’ எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்ததுவும், இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ‘குஷிநகர்’ என்னும் இடத்தில் புத்த பெருமான் பரிநிர்வாணம் அடைந்ததுவும் இந்தப் புனித தினத்திலேயே ஆகும். உலகம் உன்னதமான நிலையை அடையவும், உலகில் காணப்படுகின்ற பல்வேறுபட்ட துன்பங்கள், துயரங்கள், வேதனைகள் அகல்வதற்காக, இறைவனின் அவதாரமாக பல்வேறுபட்ட மகான்களும், ஞானிகளும், ரிஷிகளும், தோன்றிய நாடு பாரதம் ஆகும். மனிதனுக்கு ஏற்படுகின்ற அனைத்து துன்பங்களுக்கும் காரணம் அவனது ஆசையே என்ற உண்மையை உணரச் செய்து, அவர்களின் ஆசைகளையும், பற்றுக்களையும்…