Author: owner

“அரியலூர், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வி (45). இவர்களுடைய மகள்கள் ரஞ்சனி (19), சந்தியா (17). இதில், ரஞ்சனி பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். சந்தியா சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார். இந்த நிலையில் ரவி அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் செல்வி, மகள் ரஞ்சனி ஆகியோர் வீட்டு வேலைகளை கவனித்து வந்தனர். இளைய மகள் சந்தியா வீட்டில் சமையல் செய்து தனது தந்தை மூலம் தாயார் மற்றும் அக்காளுக்கு அனுப்பி வந்துள்ளார். நேற்று மதியம் வெகுநேரமாகியும் வீட்டிலிருந்து உணவு வராததால் செல்வியும், ரஞ்சனியும் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது சந்தியா கயிற்றால் கழுத்தை இறுக்கியும், ரவி தூக்கில் தொங்கியவாறும் பிணமாக கிடந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அலறி துடித்தனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த…

Read More

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலுடன், பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சருவேலி ரயில் கடவைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 46 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். ரயில்வே சிக்னல்கள் செயலில் இருந்தபோது விபத்து நிகழ்ந்ததாகவும், எச்சரிக்கையை மீறி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர் பளையைச் சேர்ந்தவர் எனவும் அடையாளங் காணப்பட்டுள்ளது. பளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Read More

சிலருக்கு நாக்கில் வெள்ளையாகப் படியக்கூடும். இதற்கு முக்கியக் காரணம் வாய் சுகாதாரமின்மை தான். நாக்கின் மேல்புறத்தில் சிறுசிறு இழை போன்ற அமைப்பு இருக்கும். இதனால்தான் நாக்கு சொரசொரப்பாக இருக்கும். இழை போன்ற சுவை அரும்புகள்தான் நாம் சாப்பிடும் உணவின் சுவையை நமக்குத் தெரிவிக்கும். வாய்ப்பகுதி சுத்தமில்லாமல் இருப்பது, நோய்த்தொற்று, நாக்கில் அழுக்குப் படிவது போன்ற காரணங்களால் அந்த இழை போன்ற அரும்புகள் அளவுக்கு அதிகமாக வளரும். இதனை ‘ஹைப்பர்டிராபி’ (Hypertrophy) என்பார்கள். இவை அதிகமாக வளர்வதால் என்ன சாப்பிட்டாலும் நாக்கில் சென்று படியத் தொடங்கும். சிலருக்கு நாக்கின் சில இடங்களில் மட்டும் திட்டுத் திட்டாக வெள்ளை நிறத்தில் படிந்திருக்கும். அது பார்ப்பதற்கு வரைபடம் (Map) போல இருக்கும். இதனை ‘ஜியோகிராஃபிக் டங்’ (Geographic Tongue) என்பார்கள். விட்டமின் பி குறைபாட்டினால் இது ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது, நிறைய மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது, அறுவை சிகிச்சை செய்திருக்கும்போது உள்ளிட்ட…

Read More

பதுளை – மஹியங்கனை, யல்வெல பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மகளின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பதுளை , ரிதிமாலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய காதலனே கொலைசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொலைசெய்யப்பட்டவர் சந்தேக நபரின் மகளுடன் நீண்ட நாட்களாக காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட சந்தேக நபரான தந்தை தனது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பின்னர் சந்தேக நபரின் மகள் தனது காதல் உறவை முறித்துக்கொண்டு வேலை நிமித்தம் கொழும்பு பிரதேசத்திற்கு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த காதலன் நேற்று சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்று சந்தேக நபரை பொல்லால் தாக்கியுள்ளார். காயமடைந்த சந்தேக நபரான தந்தை, மகளின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து 57 வயதுடைய சந்தேக நபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read More

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தனது ஒன்பது மாத குழந்தையுடன் பஸ்ஸின் இடிபாடுகளுக்கள் சிக்கியிருந்த தாய் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் காப்பாற்றியுள்ளார். குழந்தையை காப்பாற்றிய  45 வயதுடைய தாய் பின்னர்  உயிரிழந்துள்ள துயரம் சம்பவம் பதிவாகியுள்ளது. கடுமையான காங்களுடன் பஸ்ஸிற்குள் சிக்கியிருந்த குறித்த தாய் மற்றும் அவரது குழந்தை பாதுகாப்பு பிரிவினர் கடும் பிரயத்தனத்துக்கு பின்னர் மீட்டுள்ளனர். இதனை அடுத்து தாயும் குழந்தையும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 45 வயதுடைய தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும்,  9 மாதங்களேயான குழந்தை காப்பாற்றப்பட்டதுடன் குறித்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மே மாதம் 11 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அன்னையர் தினம் கொண்டப்பட்ட வேளையில் இந்த துயரச் சம்பவத்தின் புகைப்படம் அனைவரின்…

Read More

கள்ளக்காதலி தாக்கியதில் ஒருவர் மரணமடைந்த சம்பவமொன்று பேருவளை, வலத்தர பகுதியில் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (11) இரவு உயிரிழந்துள்ளார். அந்த வீட்டில் இருந்த இருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை (11) இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த ஒருவர் விழுந்துவிட்டதாக பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், காயமடைந்த நபரை உடனடியாக பேருவளை மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், அவர் மரணமடைந்துவிட்டார் என பொலிஸார் தெரிவித்தனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை அடுத்தே, அந்த நபரின் கள்ளக்காதலி தாக்கியதில், அந்த நபர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் வலத்தர, பேருவளை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என்றும், 42 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பௌத்த மதத்தைப் பின்பற்றும் உலக மக்கள் அனைவரும் புனித வெசாக் தினத்தை மே மாதம் இருபத்து மூன்றாம் திகதி அனுஷ்டிக்கின்றனர். வெசாக் பௌர்ணமி போயா தினமானது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானமடைதல், (பரிநிர்வாண நிலை) இறப்பு ஆகியவற்றைக் குறித்து நிற்கும் ஒரு தினமாக, கருதப்படுகின்றது. இவ்வாறானதொரு பௌர்ணமி நாளிலேயே சித்தார்த்த கௌதமர் ‘லும்பினி’ (இன்றைய நேபாளம்) என்னுமிடத்தில் பிறந்ததுவும், ‘புத்தகயா’ எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்ததுவும், இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ‘குஷிநகர்’ என்னும் இடத்தில் புத்த பெருமான் பரிநிர்வாணம் அடைந்ததுவும் இந்தப் புனித தினத்திலேயே ஆகும். உலகம் உன்னதமான நிலையை அடையவும், உலகில் காணப்படுகின்ற பல்வேறுபட்ட துன்பங்கள், துயரங்கள், வேதனைகள் அகல்வதற்காக, இறைவனின் அவதாரமாக பல்வேறுபட்ட மகான்களும், ஞானிகளும், ரிஷிகளும், தோன்றிய நாடு பாரதம் ஆகும். மனிதனுக்கு ஏற்படுகின்ற அனைத்து துன்பங்களுக்கும் காரணம் அவனது ஆசையே என்ற உண்மையை உணரச் செய்து, அவர்களின் ஆசைகளையும், பற்றுக்களையும்…

Read More

ஐபிஎல்லில் கலக்கும் இலங்கை வீரர்கள் இலங்கை வீரர்கள், ஐபிஎல் பட மூலாதாரம், chennaiipl/ instagram கட்டுரை தகவல் எழுதியவர், க. போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 5 மே 2025 ஐபிஎல் டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே, இலங்கை வீரர்களுக்கு குறிப்பிட்ட அளவு இடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. சமாந்தா வாஸ், முத்தையா முரளிதரன், ஜெயவர்த்தனே, ஜெயசூர்யா என ஏராளமான நட்சத்திரங்கள் ஐபிஎல் டி20 தொடருக்கு அழகுகூட்டியுள்ளனர். ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்தின்போதும் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்களுக்கென தனி கிராக்கி ஏற்பட்டு அணிகள் போட்டிபோட்டு வாங்கியதுண்டு. 2025 ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 19 இலங்கை வீரர்கள் பங்கேற்றனர். ஏலத்தில் பங்கேற்ற இலங்கை வீரர்கள் • வனிந்து ஹசரங்கா(ரூ. 2 கோடி), •மகீஷ் தீக்சனா (ரூ. 2 கோடி), • விஜயகாந்த் வியாசகாந்த் (ரூ. 75 லட்சம்), • குஷால் மென்டிஸ்…

Read More

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் 10ஆம் திகதி சனிக்கிழமை உறவினர்களின் வீட்டுக்கு சென்று திருமண விருந்து உண்டு விட்டு திரும்பிய கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது சுழிபுரம் – பெரியபுலோ மேற்கு பகுதியைச் சேர்ந்த பரஞ்சோதி ததீஸ்கரன் (வயது 29) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கு கடந்த 09.04.2025 அன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தம்பதிகள் இருவரும் சனிக்கிழமை (10) உறவனர் ஒருவரின் வீட்டிற்கு சென்று திருமண விருந்து உண்டுவிட்டு வீடு வந்தவேளை வாந்தி ஏற்பட்டது. இந்நிலையில் வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றும் வாந்தி குணமாகவில்லை. பின்னர் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில்…

Read More

இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தில் முக்கியத் திருப்பமாக, இரு நாடுகளுக்கும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமையன்று சமூக ஊடகங்களில் தெரிவித்தார். நான்கு நாட்கள் தொடர்ந்த பதற்றமான எல்லை தாண்டிய மோதல்களுக்குப் பிறகு “முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்திற்கு” இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன. அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இரு நாடுகளுக்கும் இடையில் சமாதனத்தை ஏற்படுத்துவதில் பல்வேறு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும், சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அது மீறப்பட்டதாக இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டன. இது உடன்பாட்டின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. பாகிஸ்தான் “தொடர்ந்து அத்துமீறல்கள்” செய்வதாக இந்தியா குற்றம் சாட்டும் நிலையில், தனது படைகள் “பொறுப்பையும் கட்டுப்பாட்டையும்” காட்டி சண்டை நிறுத்தத்தில் உறுதியுடன் இருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. சண்டை நிறுத்தம் தொடர்பாக டிரம்பின் அறிவிப்பு வருவதற்கு முன்பு, இரு அண்டை நாடுகளுக்கு இடையிலான சண்டை முழு போராக…

Read More