இந்தியா ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கத்தை வென்று இந்திய அணி பெருமை சேர்த்திருக்கிறது.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஹாக்கி அணி ஜெர்மனி அணியுடன் ஆடியது போட்டி தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே ஜெர்மனி முதல் கோலை அடித்து முன்னிலைக்குச் சென்றது.
எனினும் இரண்டாவது கால்பகுதி ஆட்டம் தொடங்கியதும் 17-ஆவது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்து சமன் செய்தது. நீலகண்ட சர்மா அளித்த பந்தை சிம்ரஞ்சித் அருமையாக கோலாக்கினார்.
ஜெர்மனி வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கினார். இரண்டாவது கால் பகுதி ஆட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து வலுவான நிலைக்குச் சென்றது.
இதே போல் இந்திய அணியும் இரண்டு கோல்களை அடித்தது. இதனால் இரு அணிகளும் 3-3 என்ற கோல்கணக்கில் மீண்டும் சமநிலை பெற்றன.
மூன்றாவது கால் பகுதி ஆட்டம் தொடங்கியதுமே இந்திய அணி பெனால்ட்டி கார்னர் மூலம் இன்னொரு கோலை அடித்தது.
அடுத்த மூன்றாவது நிமிடத்தில் இந்திய வீரர் சிம்ரஞ்சித் சிங் மற்றொரு கோலை அடித்தார் இதனால் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.
பரபரப்பான கடைசி கால் பகுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்களால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 5-4 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றது.