ilakkiyainfo

கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது? – செல்­வ­ரட்னம் சிறி­தரன் (சிறப்பு கட்டுரை)

 

இர­ணை­மடு  குளத்து நீர் தொடர்­பா­கவும், ஜனா­தி­பதி ஆணக்­குழு தொடர்­பா­கவும் இரண்டு முக்­கிய தீர்­மா­னங்­களைத் தமிழ்த்­தே­சிய கூட்­ ட­மைப்பு யாழ்ப்­பா­ணத்தில் கூடி நிறை­வேற்­றி­ யி­ருக்­கின்­றது. இரண்­டுமே மிகவும் முக்­கி­ய­மான தீர்­மா­னங்கள்.   கூட்­ட­மைப்பின்  தலைவர்  ஆர்.சம்­பந்தன் தலை­மையில்  இரண்டு  தீர்­மா­னங்­களும்  ஏக­ம­ன­தாகத் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இந்த கூட்­டத்தில் கூட்­ட­மைப்பின் பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள், வட­மா­காண முத­ல­மைச்சர், மாகாண அமைச்­சர்கள், வட க்கு மற்றும் கிழக்கு மாகாண சபை­களின் உறுப்­பி­னர்கள் கலந்துகொண்டு இர­ணை­மடு குளத்து நீர் தொடர்­பாக விரி­வாக விவா­தித்­தி­ருக்­கின்­றார்கள். மூன்­றரை  மணித்­தி­யா­லங்க­ளுக்கு மேலாக வாதிட்­டதன் பின்னர்,  ஏக­ம­ன­தாக ஒரு முடிவு எடுக்­கப்­பட்­டி­ருப்­பது வர­ வேற்­கத்­தக்­கது.

இர­ணை­மடு குளத்­தி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்­திற்குக் குடிநீர் வழங்கும் திட்டம்

பல மில்­லியன்  ரூபா செலவில் ஆசிய அபி­வி­ருத்தி வங்­கியின் நிதி­யு­த­வி­யுடன் முன்­ வைக்­கப்­பட்­டுள்ள இந்தத் திட்­டத்தின் கீழ் இர­ணை­மடுக் குளத்தைப் புன­ர­மைத்து, அதன் அணைக்­கட்டை உயர்த்தி குளத்தின் நீர் கொள்ள­ளவை அதி­க­ரித்து, விவ­சா­யி­க­ளுக்கு நீர் வழங்­கு­கின்ற அதேநேரம்  யாழ்ப்­பா­ணத்­திற்­ கான குடி­நீரைக் கொண்டு  செல்­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஆனால், கால­போ­கத்­தி­லேயே ஆயி­ரக்­க­ணக்கான ஏக்கர் வயல் காணி­க­ளுக்கு குளத்தில் இருந்து நீர் கிடைக்­க­வில்லை. சிறு­போ­கத்­ தின்­போது குளத்தில் தண்ணீர் இருந்­தா­லும்­ கூட, குறைந்த அள­வி­லான நிலப்­ப­ரப்­பி­லேயே வேளாண்மை செய்­யப்­ப­டு­கின்­றது.

ஆகவே, சிறு­போ­கத்தின் செய்கை நிலப்­ப­ரப்பை அதி­க­ ரிப்­ப­தற்கு ஏற்றவகையில் தண்ணீர் கொள்­ள ளவைப் பேணு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்கப்பட வேண்டும் என்­பது விவ­சா­யி­களின் கோரிக் கையாகும்.

ஆனால், தங்­க­ளு­டைய கோரிக்­கைகள் நிறை­ வேற்­றப்­ப­டா­மலும், தங்­க­ளுக்குத் தேவை­யான நீர் குளத்தில் பேணப்­படும் என்­ப­தற்கு உத்தரவாதமற்ற நிலை­யிலும் யாழ்ப்­பா­ணத்­திற்கு இந்தக் குளத்தில் இருந்து நீரைக் கொண்டு சென்றால், தங்­க­ளு­டைய விவ­சாயம் பாதிக்கப்படும் என்­பது அவர்­க­ளு­டைய தீர்க்­கப்­ப­டாத அச்­ச­மாக இருக்­கின்­றது.

இதன் அடிப்­ப­டை­யி­ லேயே இர­ணை­மடு கமக்­காரர் அமைப்­புக்கள் யாழ்ப்­பா­ணத்­திற்கு, இர­ணை­மடு குளத்தில் இருந்து குடிநீர் வழங்­கு­வதை முழு­மை­யாக எதிர்த்து வரு­கின்­றார்கள்.

Iranaimad11
விவ­சா­யி­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­ப­ட­மாட்­டாது என்று இர­ணை­மடு குளத்து நீர் திட்­டத்­ துடன் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் உத்­த­ர­வா­த­ ம­ளித்­துள்ள போதிலும், அதனை நம்­பு­வ­தற்கு அவர்கள் தயா­ராக இல்லை. இத­னால்தான் இர­ணை­மடு குளத்து குடிநீர்த் திட்டம் இழு­பறி நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருந்­தது.

இந்தத் திட்­டத்தின் உண்­மை­யான நிலை என்ன என்­பதை ஆராய்ந்­த­றி­வ­தற்­கா­கவும், இதில் தொடர்ந்து என்ன செய்­வது என்­பதைத் தீர்­மா­னிப்­ப­தற்­கா­கவும், வட­மா­காண முத­ல­ மைச்­ச­ரினால் 15 பேர் கொண்ட அறிஞர் குழு ஒன்று நியமிக்­கப்­பட்­டி­ருந்­தது.

கள ஆய்­வு­களை மேற்­கொண்ட, அந்தக் குழு­வினால் முத­ல­மைச்­ச­ருக்குக் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்த அறிக்கை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் இந்த உயர் மட்ட கூட்­டத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு, விரி­வாக ஆரா­யப்­பட்­டதன் பின்பே தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அந்தக் குழுவில் ஐந்து பேர் இர­ணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்­பா­ணத்­திற்குக் குடிநீர் வழங்­கு­வ­தற்கு சாத­க­மா­கவும், பத்துப் பேர் பாத­க­மா­கவும் தமது கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்­ததாக கூட்­டத்தில் தெரி­விக்­கப்­ப ட்­டி­ருந்­தது.

இந்தக் கருத்­துக்­க­ளையும், அறிக்­ கைக்கு வெளியில் இருந்து விவ­சா­யிகள் தர ப்­பிலும், ஏனைய ஆர்­வ­முள்­ள­வர்­ களின் தரப்­ புக்­களில் இருந்தும் தெரி­விக்­கப்­பட்ட கருத்­து க்­க­ளையும் உள்­வாங்­கிய இந்த உயர் மட்ட கூட்டம் விவ­சா­யி­க­ளுக்கு எந்­த­வி­த­மானபா திப்பும் ஏற்­ப­டாத வகையில் முடி­வெடுக்க முனைந்­தி­ருந்­தது.

விவ­சா­யி­க­ளுக்கு எற்­பட்­டுள்ள சந்­தேகம், அச்சம் என்­ப­வற்றைப் போக்கும் வகையில், விவ­சா­யி­க­ளுக்கு எந்­த­வி­த­மான பாதிப்பும்ஏற்படாமலும், அதே­நேரம் இந்தத் திட்­டத்­திற்­ கென ஒதுக்­கப்­பட்ட நிதியைத் திரும்பிச் செல்­ ல­வி­டாமல் தடுத்து, அதனை நன்­மை­யான முறையில் பயன்­ப­டுத்திக் கொள்­ளத்­தக்க வகையில் இந்தத் திட்­டத்தில் மாற்­றங்­களை மேற்­கொள்ள வேண்டும்.

முத­ல­மைச்­சரின் தலை­மை­யி­லான  ஐந்து பேர் கொண்ட குழு­ வொன்று இது தொடர்பில் ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யுடன் பேச்­சுவார்த்தைகளை நடத்­து­வது என்றும், அதே­நேரம், யாழ்ப்­பா­ணத்­திற்குக் குடிநீர் வழங்கக் கூடிய ஏனைய நீர் நிலைகள் குறித்து ஆய்­வு­களை மேற்­கொள்­வது என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

யாழ்ப்­பா­ணத்தில் கூடிய தமிழ்த்­தே­சிய கூட்­ ட­மைப்பின் உயர்மட்ட கூட்­டத்தில் இப்­போது எடுக்­கப்­பட்­டுள்ள தீர்­மானம் நிலை­மையில் சிறிய மாற்­றத்தை உண்­டு­பண்­ணி­யி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. ஆயினும், விவ­சா­யிகள் இந்தத் தீர்­மா­னத்தில் திருப்­தி­ய­டைந்­த­தாகத் தெரி­ய­வில்லை.

விவ­சா­யி­களின் நிலைப்­பாடு


யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற கூட்­டத்திற்கு முதல் இர­ணை­மடு கமக்­காரர் அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களைச் சந்­தித்துப் பேசிய போது சம்பந்தரிடம் அவர்கள் தமது நிலைப்­ பா­டு­ களைத் தெளி­வாக எடுத்துக் கூறி­யி­ருந்­தார்கள்.

அத்துடன், இர­ணை­மடு   பிரச்­சி­ னையை முதன்­மைப்­ப­டுத்தி  கிளி­நொச்­சிக்கு மகா­வலி நீரைக் கொண்டு வரு­வ­தற்­கான  ஒப்­பு­தலை இந்தப் பிரதே­சத்து விவ­சா­யி­க­ளி­ட­மி­ ருந்து பெறு­கின்ற நோக்­கத்தில் அரச தரப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் தங்­க­ளுடன் பேச்சுக்கள்நடத்தியிருந்­த­தையும், அதற்குத் தாங்கள் எந்­த­வி­த­மான பதி­லையோ உறு­தி­ மொ­ழி­யையோ வழங்கவில்லை என்­ப­தையும் அவர்கள் சம்­பந்­த­ருக்குக் கூறி­யி­ருந்­தார்கள்.

அதே­நேரம், தமிழ் மக்­களின் தலை­வர்­க­ளா­ கிய கூட்­ட­மைப்­பி­னரும் தமது விட­யத்தில் போதிய அக்­கறை செலுத்திச் செயற்­ப­டு­வ­தாகத் தெரியவில்லை என்றும், அவர்­களும் தங்­களைக் கைவிடப் போகின்­றார்­களோ என்று தங்களுக்குச் சந்­தே­க­மாக இருக்­கின்­றது என்­ ப­தையும் இர­ணை­மடு விவ­சா­யிகள் அவ­ரிடம் தெளி­வாக எடுத்­துக்­கூ­றி­யி­ருந்­தனர்.

ஆயினும், யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற கூட்­டத்தில் மூன்­றரை மணித்­தி­யா­லங்­க­ளுக்கு மேலாக   இர­ணை­மடு குளம் தொடர்­பாக   நடை­ பெற்ற விவா­தத்­தின்­போது, விவ­சா­யி­க­ளி­னு­ டைய பிர­தி­நி­திகள் கலந்து கொண்டு கருத்து தெரி­விப்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

அத்­துடன், விவா­தத்­தின்­போது தெரி­விக்­கப்­ப ட்ட கருத்­துக்கள் மற்றும், இர­ணை­மடு குளம் தொடர்­பான நிபுணர் குழு அறிக்கை பற்­றியும், அது தொடர்பில் தனது கருத்­தையும் சுமார் அரை மணித்­தி­யாலம் முத­ல­மைச்சர் செய்த சமர்ப்­ப­ணத்­தையும், பிரச்­சி­னையில் நேர­டி­ யாக சம்பந்தப்பட்­ட­வர்கள் என்ற வகையில் விவ­சா­யிகள் கேட்­ப­தற்கும் அனு­ம­திக்­கப்­ப­ட­ வில்லை.

ஆனால், கூட்­டத்தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா னம் குறித்து, யாழ்ப்­பா­ணத்­திற்கு அழைத்­தி­ருந்த விவ­சாயப் பிர­தி­நி­தி­க­ளிடம்    தலைவர் சம்­பந்தன் நேர­டி­யாகத் தகவல் தெரி­வித்­தி­ரு க்­கின்றார். அத்­துடன், விவ­சா­யி­க­ளுக்கு எந்­த­ விதமான பாதிப்பும் ஏற்­பட­மாட்­டாது.

அவ்­வா­ றான ஒரு முடிவை தாங்கள் எடுக்­க­மாட்டோம் என்ற உறு­தி­மொ­ழி­யையும் அவர் விவ­சாய பிர­தி­நி­தி­க­ளிடம் தெரி­வித்­தி­ருந்தார். நிபுணர் குழு அறிக்­கையின் அடிப்­ப­டையில் மேலும் ஒரு குழு அமைத்து ஆசிய அபி­வி­ருத்தி வங்­ கி­யுடன் பேச்­சுக்கள் நடத்­து­வ­தற்கும் தீர்­மா­ னிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகத் தங்­க­ளிடம் சம்­பந்தர் கூறி­ய­தாக இர­ணை­மடு கமக்­காரர் அமைப்­ புக்­களின் சம்­மே­ளன செய­லாளர் முத்து சிவ­ மோகன் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறி­யுள்ளார்.


‘கூட்­டத்தில் எடுக்­கப்­பட்­ட­தாக எங்­க­ளுக்குத் தெரி­விக்­கப்­பட்ட தீர்­மா­னத்தை நாங்கள் கேட் டுக்கொண்டோம். எனினும், எங்­க­ளுக்கு அதில் பூரண திருப்தி ஏற்­ப­ட­வில்லை. வெறும் உறு­ தி­மொ­ழி­களை நம்பி நாங்கள் எந்த ஆவணத்­ திலும் இந்தத் திட்டம் தொடர்பில் கையெ­ ழுத்து வைக்கப் போவ­தில்லை.

இர­ணை­ மடு குளத்தைப் புன­ர­மைத்து, எங்­க­ளு­டைய வயல் நிலங்­க­ளுக்குத் தேவை­யான நீரைத் தரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முதலில் எடுங்கள். அடுத்த கட்­ட­மாக ஏனைய விட­ய ங்கள் பற்றி தீர்­மா­னிப்போம். அது­வ­ரையில் இர­ணை­மடு குளத்தில் இருந்து யாழ்ப்­பா­ணத்­ திற்குத் தண்ணீர் கொண்டு செல்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் குளத்­திலோ அல்­லது    கிளி­நொ ச்சி மாவட்­ட­திற்­குள்­ளேயோ மேற்­ கொள்ளக் கூடாது என்று நாங்கள் அவர்­க­ளுக்குத் தெ ரி­வித்­து­விட்டு வந்­தி­ருக்­கின்றோம்” என இர­ ணை­மடு கமக்­காரர் அமைப்­புக்­களின் சம்­மே­ளன செய­லாளர் முத்து சிவ­மோகன் தெரி­வித்­துள் ளார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­த­ரனின் கருத்து

இர­ணை­மடு குளத்தில் இருந்து யாழ்ப்­பா­ ணத்­திற்குக் குடிநீர் கொண்டு செல்­கின்ற திட்­ ட­மா­னது பல தீமை­யான பின்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்தக் கூடி­யது என்று தொடக்­கத்தில் இருந்து பாராளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் எதிர்ப்புத் தெரி­வித்துவந்­தி­ருந்தார்.

எதிர்­கால பாதிப்பு குறித்து அவர் பல இடங்­க­ ளிலும் தனது கருத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். அண்­மையில் யாழ்ப்­பா­ணத்தில் அவர் நடத்­ திய செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போது ஒரு நீண்ட விளக்­கத்தை அளித்­தி­ருந்தார்.

யாழ்ப்­பா­ணத்­திற்குக் குடிநீர் வழங்­கு­வ­தற்கு எத்­த­னையோ மாற்றுத்திட்­டங்கள் இருக்­கின்ற போதிலும், இர­ணை­மடு குளத்தில் இருந்து, அர­சியல் உள்­நோக்­கத்­திற்­கா­கவே குடி­நீரைக் கொண்டு செல்­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­ கொள்ளப்­பட்­டி­ருப்­ப­தாக அவர் வலி­யு­றுத்­தி­ யி­ருந்தார். இர­ணை­மடு குடி நீர்த் திட்­டத்தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­பது போன்று வரு­டந்­ தோறும் இர­ணை­மடு குளத்தில் 30 அடிக்கு மேற் ­பட்ட நீரைச் சேமிக்க முடி­யாது என்­ பது அவ­ரு­டைய வாதம்.

ஐந்து அல்­லது ஆறு வரு­டத்­திற்கு ஒரு தட­வைதான் இர­ணை­ மடு குளம் நிறைந்து   வான்பாய்­வது வழக்கம். ஆகவே, யாழ்ப்­பா­ணத்திற்குக் குடிநீர் வழங்­ கினால் இந்த வரு­டத்தைப் போன்று குளம் தண்­ணீ­ரின்றி வரண்டு கிடப்­பதைக் காரணம் காட்டி, யாழ்ப்­பா­ணத்திற்குக் குடிநீர் வழங்க வேண்­டிய அத்­தி­யா­வ­சிய தேவையை வலி­யு­ றுத்தி சுட்­டிக்­காட்டி, மகா­வலி நீரை இர­ணை­ மடு குளத்­திற்குக் கொண்டு வரு­வ­தற்­கான நட­ வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்கொள்ளும்….,

அதன் ஊடாக வன்னிப்­பி­ர­தே­சத்­திற்கும் யாழ். குடா­நாட்­டுக்கும் சிங்­களக் குடி­யேற்­றங்­க­ ளையும் சாதா­ர­ண­மாக அர­சாங்கம் கொண்டு வந்து சேர்க்கும் என்று அவர் எடுத்துக்கூறி, இதன் கார­ண­மாக இர­ணை­மடு குளத்தில் இருந்து யாழ்ப்­பா­ணத்­திற்குக் குடிநீர் வழங்கும் நட­வ­டி­க்­கையை அனு­ம­திக்கப்போவ­தில்லை என அவர் உறு­தி­பட தெரி­வித்­தி­ருந்தார்.

அத்­துடன் யாழ்ப்பாணத்தில் நடை­பெற்ற கூட்­டத்தில் விவ­சா­யி­களின் கருத்­துக்கள் கவ­னத் தில் எடுக்­கப்­ப­டா­விட்டால், அவ­சி­ய­மானால், எதி ர்ப்பை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக தனது பத­வி யை இரா­ஜி­நாமா செய்­யயும் தயங்­கப்­போ­வ­தில்லை என்று பாராளு­மன்ற உறுப்­பினர் சிறி­தரன் தெரி­வித்­தி­ருந்­த­தா­கவும் தக­வல்கள் கசிந்­தி­ருந்­தன.

ஆனால் யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற கூட்­டத்தில் விவ­சா­யி­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­ ப­டாத வகை­யிலும், இந்தத் திட்­டத்திற்கென ஒதுக்­கப்­பட்­டுள்ள நிதி திரும்பிப்போகாமல் தடுக்கும் வகை­யிலும், இர­ணை­ம­டு­வுடன் ஏனைய குடி­நீர்த்­திட்­டங்கள் பற்­றியும் ஆராய் ந்து முடிவெடுக்கப்படும் என்றும் கூட்­டத்தில் முடிவு செய்­யப்­பட்­டி­ருப்­பதை அவரும் ஏற்­று க்­கொண்டு செய்­தி­யா­ளர்­க­ளிடம் இந்தத் தீர்­ மானம் குறித்து கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

கூட்­ட­மைப்பின் தீர்­மானம் குறித்து  இர­ணை­மடு விவ­சா­யிகள் திருப்தி அடை­ய­வில்­ லையே என்று அவ­ரிடம் கேட்­ட­தற்கு திருப்தி, அதி­ருப்தி என்­ப­தற்கு அப்பால், சில விட­யங்­ களில் விட்டுக் கொடுப்­புக்­க­ளுடன் தீர்­மா­ னங்கள் எடுக்கப்­பட வேண்­டி­யி­ருப்­ப­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.

‘விவ­சா­யி­க­ளு­டைய கருத்­துக்­களை நாங்கள் நிரா­க­ரிக்­க­வில்லை. ஒரு நிபுணர்குழு நிய­ மிக்­கப்­பட்டு, அத­னு­டைய அறிக்கை வெளி­ வந்திருக்கின்­றது. அந்த அறிக்கை எல்லோர் முன்­னி­லை­யிலும் இன்று ஆரா­யப்­பட்டு அனை­வ ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­ றது.

அத்­ துடன், விவ­சா­யி­க­ளுக்கு எந்­த­வி­த­ மான பாதிப்­புக்­களும் ஏற்­ப­ட­மாட்­டாது என்று கட்­ சியில் உள்ள எல்­லோ­ராலும் ஏக­ம­ன­தாக உறுதி மொழி முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆகவே, இதற்கு மாறாக அல்­லது விவ­சா­யி­க­ ளுக்கு எதிராக எந்த காரி­யங்­களும் நடைபெற­ மாட்­டாது என்று தான் நான் நம்­பு­கிறேன்’ என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறி­தரன் தெரி­வித்­ துள்ளார்

‘அத்­துடன் வெளிப்­ப­டை­யாக எல்லா விட­ யங்­க­ளையும் வெளியில் சொல்ல முடி­யாத ஒரு நிலை கட்சி அங்­கத்­த­வர்­க­ளுக்கு இருக்­ கின்­றது. அதன் கார­ண­மாக ஓர் அர­சியல் ரீதி­யாக – இரா­ஜ­தந்­திர ரீதி­யாக சில சொற்­ ப­தங்கள் அதிலே (தீர்­மா­னத்­திலே) பயன்­ப­டுத்­ தப்­பட்­டி­ருக்­கின்­றன. அதே நேரத்தில் இர­ணை­ மடு திட்டம் தொடர்பில் இன்னும் முடி­வுகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றே சொல்ல வேண் டும்.

ஏனென்றால் இவ்­வ­ளவு காலமும் ஆசிய அபி­வி­ருத்தி வங்­கியின் முக­வர்­க­ளான அதி­ கா­ரி­க­ளி­டமே பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­ டி­ருக்­கின்­றன. இனி­மேல்தான் ஆசிய அபி­வி­ருத்தி வங்­கியின் இலங்­கைக்­கான இணைப்பதிகாரியுடனோ அல்­லது அது சம்­பந்­தப்­பட்ட உய­ர­தி­கா­ரி­க­ளு­டனோ பேச்­சுக்கள் நடத்­தப்­ப­ ட­வில்லை. இனி­மேல்தான் அவர்கள் பேசப் போகின்­றார்கள்.

அதுவும் முத­ல­மைச்சர்  தலை­மையில் பேசப் போகின்­றார்கள். ஆகவே, இப் ­போ­தைக்கு முடிவு ஏற்­ப­ட­வில்லை என்று தான் சொல்ல வேண்டும்’ என்றார் சிறி­தரன்.

ஜனா­தி­பதி ஆணைக்­குழு மீது நம்­பிக்­கை­யில்லை

இர­ணை­மடு குளத்து நீர் தொடர்­பான நிலைமை இப்­ப­டி­யி­ருக்க, காணாமல் போயி­ருப்­ப­ வர்கள் தொடர்பில் விசா­ரணை நடத்தி வரு­ கின்ற ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் நம்­பி க்கை இல்லை என்று மற்­று­மொரு தீர்­மா­ னமும் கூட்டமைப்பின் யாழ்ப்­பாண கூட்­ட த்தில் நிறை­வேற்­றப்­பட்டிருக்­கின்­றது. இந்த ஆணைக்­கு­ழுவின் நட­வ­டிக்கை குறித்து தமிழ் த்­தே­சிய கூட்­ட­மைப்பு தனது பலத்த ஏமாற்­ற த்­தையும் வெளி­யிட்­டி­ருக்­கின்­றது.

‘இந்த ஆணைக்­குழு கிளி­நொச்சி மாவட்ட செய­ல­கத்தில் பகி­ரங்க விசா­ர­ணைக்­காக வந் ­தி­ருந்­த­போது, அரு­கா­மையில் இன்­னு­மொரு கூட்­டத்தை நடாத்தி, ஆணைக்­குழு முன்னால் முறைப்­பாடு செய்ய வந்­த­வர்­களைத் தடுத்து, மற்ற கூட்­டத்தில் பணம் கொடுத்து, மரண சான்­றி­தழ்கள் வழங்­கிய சம்­ப­வத்தை நாங்கள் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம். இந்த விடயம் இந்த ஆணைக்­கு­ழுவின் கவ­னத்­ திற்குக் கொண்டு வரப்­பட்­ட­போ­தும்­கூட, எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

வேண்­டு­மென்றே, ஆணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­யங்கள் வழங்கப்படுவதானது தடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. மேலும் இந்த ஆணைக்கு­ழு­வுக்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கின்ற சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தைச் சேர்ந்த அரச சட்ட உரைஞர் சமிந்த அத்­து­கோ­ரள என்­ப­வர்தான், காணாமல் போயி­ருப்­ப­வர்கள் தொடர்பில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருக்­கின்ற ஆட்­கொ­ணர்வு மனுக்கள் தொடர்­பான வழக்­கிலும், அது­ பற்றி எழுந்­துள்ள விசார­ணை­யிலும் இராணு­ வத்தின் சார்பில் ஆஜ­ராகி, சர­ண­டைவு என்ற ஒன்று இடம்­பெ­றவே இல்லை என்று வாதா­டு­கின்­றவர்.

இது சட்­டத்தின் கீழ் பாரிய நோக்­ கத்தின் முரண்­பாடு ஆகும். ஆகை­யி­னாலே, தற்­போ­ தைக்கு இந்த இரண்டு கார­ணங்­களின் நிமித்­த­ மாக, இந்த ஆணைக்­கு­ழுவின் செயற்­ பாட்டில் நம்­ப­கத்­தன்மை இல்­லை­யென்று நாங்கள் ஏக­ ம­ன­தாக தீர்­மானம் ஒன்று நிறை­ வேற்­றி­யி­ ருக்கின்றோம்’ என்று பாராளு­மன்ற உறுப்­ பினர் சுமந்­திரன் விளக்­க­ம­ளித்­துள்ளார்.

காணாமல் போயி­ருப்­ப­வர்கள் தொடர்பில் பொறுப்பு கூறு­வ­தற்­காக உள்ளூர் பொறி­முறை என்ற பெயரில் கற்­ற­றிந்த பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைக்­ க­மை­வாக, விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்­ காக ஜனா­தி­ப­தி­யினால் மெக்ஸ்வெல் பர­ண­க­ மவின் தலை­மையில் ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இந்த ஆணைக்­கு­ழு­வுக்கு பத்­தா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட முறைப்­பா­டுகள் எழுத்து மூல­மாகச் செய்­யப்­பட்­டுள்­ளது. இவற்றில் தெரிவு செய்­யப்­பட்ட முறைப்­பா­டுகள் தொடர்­பான சாட்­சி­யங்­களை கிளி­நொச்சி மற்றும் யாழ்ப்­பாணம் ஆகிய மாவட்­டங்­களில் இந்த ஆணைக்­குழு பதிவு செய்­தி­ருக்­கின்­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் குறிப்­பிட்­டுள்ள அரசசட்­டத்­த­ரணி சமிந்த அத்­துக்­கோ­ரள என்­ப­வரே, இந்த விசா­ர­ணை­க­ளின்­போது அரச தரப்பின் சட்ட ஆலோ­ச­க­ராகப் பணி­யாற்றி வரு­கின்றார். இந்த முரண்­பட்ட நிலைப்­பா­டா­னது, ஜனா­தி­ பதி ஆணைக்­கு­ழுவின் நேர்­மை­யான செயற்­ பாட்டை கேள்­விக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றது.

அத்­துடன் இந்த ஆணைக்­கு­ழுவின் விசா­ ரணை முறை­களும், ஆணைக்­கு­ழு­வினர் எழு ப்­பு­கின்ற கேள்­வி­களும், சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்­ காக முன்­வந்­த­வர்­களின் மனங்களைக் காயப் படுத்தியிருப்பதாகவும்,அதனால் அவர்களில் பலர் ஆவேசமடைந்ததாகவும் அவர்களே தெரிவி த்திருக்கின்றனர்.

எனவே, இரணைமடு குடிநீர்த் திட்டமும்சரி, ஜனாதிபதி ஆணைக்குழுவும்சரி இன்றைய நிலைமையில் முக்கிய விடயங்களாகவே இருக்கின்றன. இந்த விடயங்கள் குறித்து கவ னம் செலுத்தி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது உயர்மட்ட கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றியிருப்பதுவும் சரி யெனவே படுகின்றது.

இருந்­தாலும், இன்னும் இரண்டு தினங்­களில் ஜெனி­வாவில் ஐ.நா. மனித உரிமைப் பேர­ வையின் கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில், அதில் இலங்­கைக்கு எதி­ராக அமெ­ ரிக்க இந்த முறையும் தீர்­மானம் ஒன்றைக் கொண்டு வர­வுள்ள சூழலில், கூட்­ட­மைப்பின் இந்தக் கூட்­டத்தில் எது­வுமே ஆரா­யப்­ப­ட­ வில் லை என்­பது வியப்­பாக இருக்­கின்­றது.

சர்­வ­தேச நாடு­களும், சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் இந்தப் பிரே­ரணை தொடர்­பாக மிகுந்த அக்­க­றையும் ஆர்­வமும் கொண்டு செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால் இந்தத் தீர்­மா­னத்­துடன் நேர­டி­யாகத் தொடர்­பு­டைய பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­ தி­நி­தி­க­ளாக, அவர்­களின் அர­சியல் தலைவர்­ க­ளாக இருக்­கின்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­ பினர் அது­பற்றி ஆர்­வ­மற்­றி­ருப்­ப­தாகத் தோற் றமளிப்பது நல்லதாகப் படவில்லை.

இன்­றைய சூழ்­நி­லையில் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு என்ன? அவர்கள் ஐ.நா. மாநாட்டு நேரம் என்ன செய்யப்போகி ன்­றார்கள்? என்ன சொல்லப் போகின்­றார்கள் என்­பதை அறிந்து கொள்­வ­தற்கு மக்கள் இன்று மிகுந்த ஆர்­வ­மு­டை­ய­வர்­க­ளாக இருக்­கின்­ றார்கள்.

அதே­நேரம் பாதிக்­கப்­பட்­டுள்ள தமிழ் மக்­க ளின் நேசசக்­தி­களும், அர­சியல் உற­வு­க ளும், சர்­வ­தே­ச­மும்­கூட, கூட்­ட­மைப்பு என்ன செய்­ கின்­றது. என்ன சொல்லப்போகின்து என்­பதை அறி­வ­தற்கு ஆர்­வ­மாக இருக்­கின்­றார்கள். இத்­த­ கைய மிகவும் முக்­கி­ய­மான ஒரு சந்­தர்ப்­ப த்தில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு அந்த விட­ய த்தில் கவனம் செலுத்­தா­த­து­போன்று நடந் துகொள்­ வதும், நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­ தாமல் இருப்­ப­துவும், பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களைப் பொறுத்தமட்டில், பொருத்தமானதாக வும் தெரி யவில்லை. சரியானதாகவும் படவில்லை.

செல்­வ­ரட்னம் சிறி­தரன்

Exit mobile version