குர்திஷ் மக்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட 25 நூற்றாண்டு வரலாறு, கலாசாரம், நிலப்பரப்பு, மொழி, சமயம் உண்டு. கி. பி 7-ஆம் நூற்றாண்டில் மத்திய கிழக்கில் இஸ்லாமிய மதம் பரப்பப்படுவதற்கு முன்னர் அவர்கள் யஜிதிசம் (Yazidism) என்னும் மதத்தைப் பின்பற்றினர்.
அவர்களது புனித நூல் கரும் புத்தகம் என்று அழைக்கப்படும். இன்றும் அவர்களது மதம் நடைமுறையில் உண்டு. உலகிலேயே அதிக மக்களைக் கொண்ட நாடில்லாத ஒரு தேசிய இனமாக தாம் இப்போது இருப்பதாக குர்திஷ் மக்கள் பரப்புரைச் செய்கின்றார்கள்.
உலகெங்கும் மூன்று கோடி குர்திஷ் மக்கள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. முதலில் குர்திஷ் இன மக்கள் அரபு மக்களால் வெற்றி கொள்ளப்பட்டு ஆளப்பட்டார்கள். பின்னர் மங்கோலியர்களாலும் உதுமானியப் பேரரசினாலும் தொடர்ந்து மேற்கு ஐரோப்பியர்களாலும் அவர்கள் ஆளப்பட்டனர்.
மட்டரகமான அடிமட்ட எல்லை
பிரான்ஸின் சார்பில் ஜோர்ஜஸ் பைக்கொட் என்பவரும் பிரித்தானியாவின் சார்பில் மார்க் சைக்ஸ் என்பவரும் உதுமானியப் பேரரசிடமிருந்து கைப்பற்றும் மத்திய கிழக்குப் பிரதேசத்தை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று இரகசியமாக செய்த உடன் படிக்கை சைக்ஸ்-பைக்கொட் உடன் படிக்கை (Sykes–Picot Agreement) என அழைக்கப்படுகின்றது.
இருவரும் அடிமட்டமும் பென்சிலும் வைத்து மத்திய கிழக்கின் வரைபடத்தில் தமது அதிகார எல்லைகளை வகுத்துக் கொண்டனர். உலகில் எங்குமில்லாத நேர் கோட்டு எல்லைகள் மத்திய கிழக்கு நாடுகளிடையே இருப்பதை நாம் காணலாம்.
இதன்படி சிரியாவும் லெபனானும் பிரான்ஸ் வசமானது. ஈராக், ஜோர்தான், பாலஸ்தீனம் ஆகியவை பிரித்தானியாவிற்கு சொந்தமாக்கப்பட்டது. இவர்கள் வரைந்த எல்லைகள் அங்கு வாழ்ந்த தேசிய இனங்களை அடிப்படையாக வைத்து வகுக்கப்பட்டவை அல்ல.
இதனால் பல தேசிய இனங்கள் தமது ஆட்சி உரிமையை இழந்தன. இதில் குர்திஷ் மக்களும் அடங்குவார்கள். ஷியா மற்றும் ஸுன்னி முஸ்லிம்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஒரு நாட்டில் ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டனர்.
கி. பி. 7ஆம் நூற்றாண்டில் அரபுப் படையெடுப்புக்களால் குர்திஷ் இன மக்கள் அரபு- – இஸ்லாமியப்படுத்தப்பட்டனர். ஆனாலும் அவர்கள் இன்றுவரை தமது தனித்துவத்தை இழக்காமல் போராடுகின்றார்கள்.
இப்போது குர்திஷ் மக்கள் என்றால் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஸுன்னி முஸ்லிம்கள் என்னும் அளவிற்கு நிலைமை மாற்றப்பட்டுவிட்டது. குர்திஷ் மக்களின் நாடாகிய குர்திஷ்த்தான் ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளால் கபளீகரம் செய்யப்பட்டுவிட்டது. தமது வரலாறு முழுவதும் தாம் அயலவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றார்கள்.
இனச்சுத்திகரிப்பு, இனக்கொலை, பாரிய மனிதப் புதைகுழி, வேதியியல் குண்டுகள் (இரசாயனக் குண்டுகள்), பேரழிவு விளைவிக்கும் குண்டுகள் ஆகியவை குர்திஷ் மக்களின் வரலாற்றுத் தடயங்களாகும். மொழி பாவிக்கத் தடை, மத வழிபாட்டுத் தடை, சமூக ஒதுக்கல், பொருளாதாரப் புறக்கணிப்புக்கள் ஆகியவற்றால் குர்திஷ் மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.
தமது தேசியத்திற்கு இறுதி உலை வைத்தது லௌசான் உடன்படிக்கை (Treaty of Lausanne) என்கின்றார்கள் குர்திஷ் மக்கள். இந்த உடன்படிக்கை அவர்களது சுயநிர்ணய உரிமையைப் பறித்தது.
முதலாம் உலகப் போரின் பின்னர் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கை லௌசான் உடன்படிக்கையின் மூலம் தமக்குள் பங்கு போட்டுக் கொண்டன. அதில் குர்திஷ்த்தான் துண்டாடப்பட்டு சிரியா, ஈராக், துருக்கி ஆகிய நாடுகளுடன் இணைக்கப்பட்டது.
இனக்கொலைக்கு உள்ளான குர்திஷ் மக்கள்
1990ஆம் ஆண்டுவரை துருக்கியில் குர்திஷ் மொழி பொது இடங்களில் நிறுவனங்களில் பாவிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. துருக்கியின் தென் கிழக்குப் பகுதியில் வசிக்கும் குர்திஷ் மக்கள் பல்வேறுபட்ட மொழி மற்றும் கலாசாரத் தடைகளுக்கு இன்றும் உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் மத்தியில் வேலையில்லாப் பிரச்சினை 70 விழுக்காடாக இருக்கும் அளவிற்கு அவர்கள் பொருளாதார ரீதியாக துருக்கியில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.
இருபதாம் நூற்றாண்டில் மொத்தம் 4,000 குர்திஷ் கிராமங்கள் துருக்கியப் படையினரால் அழிக்கப்பட்டு முப்பது இலட்சம் குர்திஷ் மக்கள் வீடற்றவர்களாக்கப்பட்டனர்.
1974ஆ-ம் ஆண்டு குர்திஷ் மக்கள் தமது கேர்க்குக் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் தமக்கு உரிமை வேண்டும் எனக் கோரியதால் ஈராக்கை ஆண்ட சதாம் ஹுசேய்னிற்கும் குர்திஷ் மக்களுக்கும் மோதல் வெடித்தது.
இரசாயன குண்டுத்தாக்குதல் உட்பட பலவிதமான இனக்கொலைக்கு குர்திஷ் மக்கள் உள்ளாக்கப்பட்டனர். பின்னர் சதாம் ஹுசேய்னை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு நேட்டோப் படைகளுடன் குர்திஷ் மக்களும் இணைந்து செயற்பட்டனர். குர்திஷ்த்தான் மக்களாட்சிக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. நாட்டுப்பற்றுள்ள குர்திஷ் ஒன்றியம் என்னும் கட்சி உருவானது.
ஈராக்கில் ஸுன்னி , ஷியா, குர்திஷ் ஆகிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். மூன்றில் இரண்டு பங்கு ஷியா முஸ்லிம்களைக் கொண்ட ஈராக்கின் கிழக்குப் பிராந்தியத்தில் ஸுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
சதாம் ஹுசேய்ன் சிறுபான்மையினரான ஸுன்னி முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள பிரதேசங்களை இணைத்து ஓர் இஸ்லாமிய அரசை உருவாக்க வேண்டும் எனப் போராடுகின்றது.
இது திடீரென ஈராக்கின் வட பிராந்தியத்தில் உள்ள பல நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறிவருவது முழு உலகத்தையுமே ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் எத்தனை போராளிகள் இருக்கிறார்கள் என யாருக்கும் தெரியாது.
சில கணிப்பீடுகள் பத்தாயிரம் என்கின்றன. தம்மிலும் பார்க்க பத்து மடங்கு அதிக எண்ணிக்கையைக் கொண்ட ஈராக்கின் அரச படைகளை சின்னாபின்னப்படுத்தி வருகின்றன.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பெரும் நிலப்பரப்புகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தனி நாடு கோரிப் போராடும் குர்திஷ் இனத்தின் பெஸ்மேர்கா போராளி அமைப்பு எண்ணெய் வளமிக்க கேர்குக் நகரத்தை ஒரு துப்பாக்கிக் குண்டு கூட வெடிக்காமல் கைப்பற்றிக் கொண்டது.
Iraqi Kurdish President Massoud Barzani
குர்திஷ் மக்களின் தலைவர் மஸ் ஸோட் பர்ஜானி குர்திஷ் மக்களுக்கு என்று ஒரு அரசு உருவாகிக் கொண்டிருக்கின்றது என்றார். ஈராக்கில் ஸுன்னி முஸ்லிம்களுக்கு என ஒரு அரசு, ஷியா முஸ்லிம்களுக்கு என ஒரு அரசு, குர்திஷ்களுக்கு என ஒரு அரசு என மூன்றாகப் பிளவு படும் ஆபத்து இப்போது அதிகரித்துள்ளது.
இதில் ஸுன்னி முஸ்லிம்களுக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும், ஷியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஈரானும், குர்திஷ் மக்களுக்காக துருக்கியும் ஆதரவாகச் செயற்படுகின்றன.
பலகாலமாக குர்திஷ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தை எதிர்த்து வந்த துருக்கி இப்போது அவர்களுடன் நல்லுறவை வளர்த்து வருகின்றது. ஈராக்கில் குர்திஷ் மக்களுக்கு என ஒரு அரசு உருவானால் அது துருக்கியின் நட்பு நாடாக அமைவதுடன் துருக்கிக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவும் அமையும் என்ற நிலை இப்போது உருவாகியுள்ளது.
எண்ணெய் வளமிக்க குர்திஷ்த்தான்
கேர்க்குக் நகரம் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் குர்திஷ் மக்கள் 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் திகதி கொண்டு வந்ததனால், நாள் ஒன்றிற்கு ஆறு இலட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்யக் கூடிய நிலையில் குர்திஷ் மக்கள் இப்போது இருக்கின்றார்கள். பாக்தாத்தில் உள்ள ஈராக்கிய அரசு நிலை குலைந்திருப்பதும் குர்திஷ் மக்களுக்கு பெரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
குர்திஷ் பிராந்திய அரசின் பேச்சாளர் சுயநிர்ணய உரிமை என்பது எமது அடிப்படைச் சொத்து. அதை பேச்சு வார்த்தைக்கு உட்படுத்த முடியாது என்றார். முன்னர் கேர்க்குக் நகரத்து எண்ணெய் வளத்தின் மூலம் வரும் வருவாய் முழுவதும் பாக்தாத் அரசுக்கே போய்ச் சேர்ந்தது.
பின்னர் அதில் ஒருபகுதி குர்திஷ் மாநில அரசுக்கு வழங்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து பாக்தாத் ஆட்சியாளர்கள் குர்திஷ் மாநில அரசுக்கு நிதி கொடுப்பதை நிறுத்தி இருந்தனர். இதனால் குர்திஷ் மாநில அரசு பெரும் நிதித் தட்டுப்பாட்டுடன் இருந்தது.
பயன்படுத்தப்பட வேண்டிய வாய்ப்பு
ஈராக்கில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தின் பின்னர் ஈராக்கிற்குப் பயணம் செய்த அமெரிக்க அரசு செயலர் ஜோன் கெரி, குர்திஷ் மக்கள் தனிநாடாகப் பிரிந்து செல்வதை விட்டு ஈராக்கில் ஷியா, ஸுன்னி , குர்திஷ் மக்களைக் கொண்ட ஓர் அரசு அமைக்க வேண்டும் என்றும் அதில் குர்திஷ் மக்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
குர்திஷ் மாநில அரசு அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணி வருகின்றது. அமெரிக்காவும் ஈரானும் ஈராக்கில் ஒன்றிணைந்து செயற்பட முயன்று கொண்டிருக்கையில், சிரிய விமானங்கள் ஸூன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தின.
சிரிய விமானத் தாக்குதல் ஈராக்கில் அரசு நிலைகுைலந்து விட்டது என்பதை உறுதி செய்கின்றது. இதே வேளை, இஸ்ரேலிய விமானப் படைகள் சிரிய அரச படைகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தின. இப்படிப்பட்ட குழப்பமான சூழ் நிலையில் குர்திஷ் மக்கள் ஒற்றுமையாக நின்று தம் படைவலிமையை அதிகரித்து தம் சுதந்திரத்தை வென்றெடுக்கக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாகியுள்ளது.
-வேல் தர்மா-
EXCLUSIVE: Iraqi Kurdistan leader Massoud Barzani says ‘the time is here’ for self-determination (CNN, June 23, 2014)
http://cnn.it/1uYWJxH
“Iraqi Kurdish President Massoud Barzani gave his strongest-ever indication on Monday that his region would seek formal independence from the rest of Iraq.
“Iraq is obviously falling apart,” he told CNN’s Christiane Amanpour in an exclusive interview. “And it’s obvious that the federal or central government has lost control over everything. Everything is collapsing — the army, the troops, the police.”
“We did not cause the collapse of Iraq. It is others who did. And we cannot remain hostages for the unknown,” he said through an interpreter.
“The time is here for the Kurdistan people to determine their future and the decision of the people is what we are going to uphold.”
Iraqi Kurdish independence has long been a goal, and the region has had autonomy from Baghdad for more than two decades, but they have never before said they would actually pursue that dream.
But the latest crisis, in which Sunni extremists have captured a large swath of Iraqi territory on the border of Iraqi Kurdistan, seems to have pushed the Kurds over the edge.
“Now we are living [in] a new Iraq, which is different completely from the Iraq that we always knew, the Iraq that we lived in ten days or two weeks ago.”
“After the recent events in Iraq, it has been proved that the Kurdish people should seize the opportunity now — the Kurdistan people should now determine their future.”
Barzani said that he would make that case to U.S. Secretary of State John Kerry when they meet in Erbil Tuesday; America is a close Kurdish ally, but opposes independence for the region…”