பல ஆண்­டு­க­ளாக எதிர்­பார்க்­கப்­பட்ட, ஐ.நா. விசா­ரணை இப்­போது தொடங்கி விட்­டது. போர் முடிந்து ஐந்து ஆண்­டு­க­ளுக்குப் பின்னர், ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள இந்த விசா­ர­ணையின் அறிக்கை அடுத்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும்.

போரின் இறுதி ஏழு ஆண்டு கால சம்­ப­வங்கள் குறித்து விசா­ரித்து – ஆய்வு செய்து – அது­பற்­றிய அறிக்­கையை மிகவும் குறு­கிய காலத்­துக்குள் சமர்ப்­பிக்க வேண்­டிய நிலையில் உள்­ளது இந்த விசா­ரணைக் குழு. இந்த விசா­ர­ணையில் மிக முக்­கி­ய­மான சவால், இதற்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள குறு­கிய காலத்­துக்குள் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு முடிப்­பது தான்.

இரண்டு அடுக்கு விசா­ரணைக் குழுவை நிய­மித்­ததன் மூலம், ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை, தனது பொறுப்பை செம்­மை­யாக நிறை­வேற்­றி­யுள்ளார்.

ஆனால், இந்த விசா­ரணைக் குழு தமக்­க­ளிக்­கப்­பட்­டுள்ள கால வரை­ய­றைக்குள், ஏழு ஆண்­டு­கால மீறல்­களைப் பதிவு செய்து, ஆராய்ந்து விசா­ரணை நடத்தி, அறிக்­கை­யாக்கி – சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் யார்? என்­பதைச் சுட்­டிக்­காட்டும் அறிக்கை ஒன்றைத் தயா­ரித்து சமர்ப்­பிப்­பது ஒன்றும் அவ­்வ­ளவு சுலபமான காரி­ய­மில்லை.

இது ஒரு சவால்­மிக்க பணி என்­பதை, ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை நிய­மித்த மூன்று நிபு­ணர்­களில் ஒரு­வ­ரான, அஸ்மா ஜஹாங்கீர் ஏற்றுக் கொண்­டுள்ளார். ஆனாலும், தேவை கருதி அந்தப் பணியை அவர்கள் ஏற்றுக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அவர்­களின் விசா­ர­ணையும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது.

அதே­வேளை, இது­வ­ரைக்கும், சர்­வ­தேச விசா­ரணை ஒன்றின் மூலமே தமி­ழர்­க­ளுக்கு நீதி கிடைக்கும், நியாயம் பிறக்கும் என்று கோரி வந்­த­வர்கள் எல்லோ­ருமே இப்­போது, அடுத்த கட்டம் பற்றிச் சிந்­திக்கத் தொடங்கி விட்­டனர்.

அதா­வது, இந்த விசா­ர­ணைக்குத் தேவை­யான சாட்­சி­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி, போர்க்­குற்­றங்கள், அநீ­திகள் இழைக்­கப்­பட்­டதை நிரூ­பிப்­பதால் மட்டும் நியாயம் கிடைத்து விடாது என்­பது பல­ருக்கும் புரியத் தொடங்­கி­யுள்­ளது.

இந்த விசா­ர­ணைகள் அடுத்த ஆண்டுத் தொடக்­கத்தில் முடி­வுக்கு வரு­வதால், மட்டும் எல்லாம் நடந்து விடப் போவ­தில்லை. ஏனென்றால், இது ஒரு விசா­ரணை மட்­டுமே தவிர, நீதி­மன்றம் அல்ல. இந்த விசா­ரணை அறிக்கை ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை­யிடம் கைய­ளிக்­கப்­படும்.

அந்த அறிக்­கையை, வைத்து ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையோ- அல்­லது ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­ கமோ, எதையும் செய்­து­விட முடி­யாது.

சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை நீதி­மன்றில் நிறுத்­தவோ அல்­லது அவர்­க­ளுக்கு எதி­ராக எத்­த­கைய நட­வ­டிக்­கையும் எடுக்­கவோ, ஐ.நா மனித உரி­மைகள் பேரவையைச் சார்ந்த எவ­ருக்கும் அதி­கா­ர­மில்லை.

panki-moonஏன், ஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூனுக்கும் கூட அதற்­கான அதி­காரம் கிடை­யாது.

இலங்­கையில் போரின் போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­பட்ட போர்க்­குற்­றங்கள் குறித்து விசா­ரித்து, தமக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக, 2010ஆம் ஆண்டு, ஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூன் ஒரு நிபுணர் குழுவை நிய­மித்­தி­ருந்தார் என்­பது நினை­வி­ருக்­கலாம்.

இந்­தோ­னே­சி­யாவின் முன்னாள் சட்­டமா அதி­பரும், ஐ.நா நிபு­ணர்­களில் ஒரு­வ­ரு­மான மர்­சூகி தருஸ்மன், தலை­மை­யி­லான அந்தக் குழுவின் அறிக்­கையில், போர்க்­குற்­றங்கள் இடம்­பெற்­ற­தற்கு நம்­ப­க­மான ஆதா­ரங்கள் இருப்­ப­தாகக் கூறப்­பட்­டி­ருந்­தது. ஆனால், அதை வைத்து, பான் கீ மூனால் எந்த நடவ­டிக்­கை­யையும் எடுத்­தி­ருக்க முடி­ய­வில்லை.

கிட்­டத்­தட்ட இரண்டு ஆண்­டுகள் வரை அந்த அறிக்­கையை வைத்து எதுவும் செய்ய முடி­யாத நிலையில் தான், அவர் அதனை, ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளைக்கு அனுப்பி வைத்தார்.

அந்த அறிக்­கையை, ஐ.நா. பாது­காப்புச் சபைக்கு அவர் அனுப்பி வைத்­தி­ருக்க முடியும். அங்­குதான், அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­கான எல்லாத் தீர்­மா­னங்­களும் எடுக்­கப்­படும். அதற்­கான அதி­கா­ரங்கள் பாது­காப்­புச்­ச­பை­யிடம் தான் உள்­ளன.

ஆனால், பாது­காப்புச் சபையில் அந்த அறிக்­கையை சீனாவும் ரஷ்­யாவும் இணைந்து நிரா­க­ரித்து விடக் கூடிய சூழல் இருந்­தது. எனவே, அந்த அறிக்கை அப்­ப­டியே, குப்பைக் கூடைக்குள் போடப்­பட்டு விடக் கூடாது என்­ப­தற்­கா­கவே அதனை, தன்னை விட அதி­காரம் குறைந்த நவீ­தம்­பிள்­ளை­யிடம் அனுப்பி வைத்தார்.

நவ­நீ­தம்­பிள்­ளைக்கு அந்த அறிக்­கையை பான் கீ மூன் அனுப்பி வைத்­ததை அவ­ரது கையா­லா­காத்­தனம் என்று கூறு­வதை விட, சாது­ரி­ய­மான நகர்வு என்று குறிப்­பி­டு­வதே பொருத்­த­மா­னது.

ஏனென்றால், நவ­நீ­தம்­பிள்­ளையின் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­யகம் அந்த விசா­ரணை அறிக்­கையை வைத்து, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் ஊடாக அடுத்த கட்­ டத்­துக்கு விசா­ர­ணை­களை நகர்த்தும் வாய்ப்பைக் கொண்­டி­ருந்­தது.

அங்கு வீட்டோ என்ற சிறப்பு அதி­காரம் யாருக்கும் இல்­லாத கார­ணத்­தினால், விசா­ர­ணை­களை அடுத்த கட்­டத்­துக்கு நகர்த்த அதுவே பொருத்­த­மான வழி என்­பதை பான் கீ மூன் கண்­ட­றிந்­தி­ருந்தார்.

அப்­போது பான் கீ மூன் அந்த அறிக்­கையை வைத்து எதுவும் செய்ய முடி­யா மல் இருந்­தது போலவே, இந்த அறிக்­கையை வைத்து, வரப்­போகும், ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் இள­வ­ரசர் சையிட் அல் ஹுஸை­னுக்கும் ஏற்­படப் போகி­றது.

இந்­த­ளவு நெருக்­க­டிகள் கொடுக்­கப்­பட்டும் இலங்கை அர­சாங்கம், துணிந்து நிற்­கி­றது என்றால், ஐ.நா.வின் அடுத்த கட் டம் தமக்குச் சாத­க­மாக அமையும் என்ற துணிச்­சலில் தான்.

அதா­வது, எத்­த­கைய விசா­ர­ணையை மேற்­கொண்­டாலும் இறு­தியில், மேல் நட­வ­டிக்கை என்று எடுக்கும் போது அதற்குப் பாதுகாப்புச் சபை அங்­கீ­காரம் அளிக்க வேண்டும்.

ஆனால், பாது­காப்புச் சபையில், சீனாவும், ரஷ்­யாவும் ஒரு­போதும், இலங்­கைக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பற்கு அனு­ம­திக்கப் போவ­தில்லை.

அதுதான் இன்று இலங்­கைக்கு உள்ள மிகப் பெரிய பலம்.

அதுவே போரின் போது இடம்­பெற்ற மீறல்­க­ளுக்கு நியா­யத்­தையும் நீதி­யையும் தேடும் மக்­களின் பக்­கத்தில் உள்ள மிகப் பெரிய பல­வீனம்.

எனவே, தற்­போது முன்­னெ­டுக்­கப்­படும், விசா­ர­ணை­களால் நியாயம் கிடைத்து விடும் என்ற கேள்வி எழு­வதில் சந்­தே­க­மில்லை.

அவ்­வா­றாயின், இந்த விசா­ரணை மூலம், சம்­பந்­தப்­பட்ட குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­படும் நிலை உரு­வா­காமல் போய் விடுமாதண்டனையில் இருந்து அவர்கள் தப்­பி­விடும் நிலை ஏற்­ப­டுமா என்ற கேள்­விகள் எழு­கின்­றன.

தற்­போது பொறுப்­புக்­கூ­ற­லையும், தண்­டனை விலக்­க­ளிப்பு நிலை முடி­வுக்கு வர வேண்டும் என்றும் வலி­யு­றுத்தும் மேற்­கு­ல­கினால், அதை சர்­வ­தேச அளவில் செயற்­ப­டுத்த முடி­யாமல் போகுமா? நிச்­ச­ய­மாக இது மிகப் பெரி­ய­தொரு கேள்வி தான்.

ஏனென்றால், இது­வரை இந்த சர்­வ­தேச விசா­ர­ணையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சி­களின் போது எதிர்­கொள்­ளப்­பட்ட தடைகள் எல்லா­வற்­றையும் விடப் பெரிய தடை, பாது­காப்புச் சபை­யில்தான் வரப் போகி­றது.

அந்தத் தடையைத் தாண்­டினால், தான், போரின் போது குற்­ற­மி­ழைத்­த­வர்­களை தண்­டிக்­கவோ, நீதியின் முன் நிறுத்­தவோ முடியும்.

இல்­லாது போனால், இது­வ­ரை­யான எல்லா முயற்­சி­களும் வீணாகிப் போய்­விடும்.

அந்தத் தடையைத் தாண்­டு­வ­தற்கு, சீனா­வி­னதும் ரஷ்­யா­வி­னதும் தயவு தேவை.

ஆனால் அந்த நாடுகள், அப்­படி ஒன்றும் தயவு தாட்­சண்­யத்­துக்கு இரங்­கு­ப­வை­யல்ல.

இத்­த­கை­ய­தொரு நிலையில், சர்­வ­தேச சமூகம், இந்த விசா­ரணை அறிக்­கையை தூக்கிக் குப்­பையில் போட்­டு­விட முடி­யாது.

அநீதி நிகழ்ந்­தி­ருக்­கி­றது என்­பது நிரூ­பிக்­கப்­பட்ட பின்­னரும், அதனை மௌன­மாக ஏற்றுக் கொண்­டி­ருக்­கு­மே­யானால், இது­வ­ரை­யான எல்லா முயற்­சி­களும், கேள்­விக்­குள்­ளாக்­கப்­படும்.

அதே­வேளை, அப்­ப­டி­யா­ன­தொரு நிலையில், இலங்கை அரசாங்கத்தின் மீது தடைகளைக் கொண்டு வந்து மேற்குலகம் தனது பழியைத் தீர்க்க முனையலாம்.

ஆனால், அது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணமாக அமையுமா?

அவர்களுக்கு வழங்கப்படும் மிகச் சிறந்த நீதியாக அது இருக்குமா?

அவ்வாறானதொரு நிலை ஏற்படுமானால், அது, தமிழ்மக்களை பெரிதும், அவநம்பிக்கைக்கு உள்ளாக்கி விடக் கூடும்.

சர்வதேசம் மீதான அவர்களின் நம்பிக்கையும் உடைந்து போய்விடும்.

இத்தகைய நிலையில், சர்வதேச விசாரணை என்பது எதுவரை பயணம் செய்யும் என்பது குறித்தும், அதன் இயலுமை எத்தகையது என்பது குறித்தும் மிகையான நம்பிக்கையை தமிழர்களிடம் ஏற்படுத்துவதை தவிர்ப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

Share.
Leave A Reply

Exit mobile version