கௌதம் மேனன் படத்திற்காக அஜீத், த்ரிஷா திருமணம் செய்து கொள்ளும் காட்சி படமாக்கப்பட்டது. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்து வரும் படம் தல 55. இது படத்தின் தற்காலிக தலைப்பு ஆகும். இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தில் அஜீத் 20 வயது வாலிபராக வருகிறார். இதற்காக மெனக்கெட்டு உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளாராம்.
த்ரிஷா, அனுஷ்காவுக்காக கெட்டப்பை மாற்றிய அஜீத்
தல 55 படத்தில் அஜீத் த்ரிஷாவுக்காக ஒரு கெட்டப்பும், அனுஷ்காவுக்காக ஒரு கெட்டப்பும் போடுகிறாராம். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் தல 55. படத்திற்கு இன்னும் பெயர் வைக்காததால் ரசிகர்கள் படத்தை தல 55 என்கிறார்கள்.