இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த மேவின் சில்வா அவா்கள் தென்மராட்சி சுதந்திரக்கட்சி அமைப்பாளருடன் குடாநாட்டின் பல இடங்களுக்கும் விஜயத்தை மேற்கொண்டாா்.அத்துடன் நல்லுாா், நயினாதீவுக்கும் சென்று வழிபட்டுள்ளாா்.
தென்மராட்சிப் பகுதி மக்கள் பிரதிநிதிகளையும் சமூக அமைப்புக்களையும் சந்தித்துக் கலந்துரையாடிய மேவின் சில்வா அவா்கள் யாழ்ப்பாணத்தில் தற்போது தலைதுாக்கியுள்ள ரவுடிசியம், கொலை, கொள்ளை, கற்பழிப்புக்களைத் தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்துள்ளாா்.