இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். சிம்ரனின் தோழியாக ஜோடி படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் வந்தவர் த்ரிஷா.

thrisa 1அதன் பிறகு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். அதிலும் அவருக்கும் விஜய்க்கும் இடையிலான கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட்டானது.

உடனே கல்யாணம் செய்யும் ஐடியாவே இல்லை: த்ரிஷா தமிழ் தவிர தெலுங்கிலும் ஒரு ரவுண்ட் வந்தார். 10 ஆண்டுகளுக்கு த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

நயன்தாராவை போன்று இல்லாமல் த்ரிஷாவின் மார்க்கெட் ரொம்பவே டல்லடித்துவிட்டது. திருமணம் த்ரிஷாவுக்கு அவரது அம்மா உமா மாப்பிள்ளை தேடுகிறார். அவர் விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்ற செய்தி மட்டும் பலமுறை வெளியாகிவிட்டது.

ஆனால் அவருக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை. அஜீத் த்ரிஷா தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

வதந்தி த்ரிஷாவுக்கு சீக்கிரமே திருமணம். அவர் விரைவில் செட்டிலாகப் போகிறார் என்ற செய்தி கோலிவுட்டில் பரவ அது அவரின் காதுகளுக்கும் சென்றுள்ளது. நம்பாதீங்க எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை.

அதனால் என்னை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்க வேண்டாம் என்று இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் தெரிவித்து வருகிறார் த்ரிஷா. 31 வயது த்ரிஷாவுக்கு 31 வயதாகிவிட்டதாலும் அவரது மார்க்கெட் படுத்துவிட்டதாலும் தான் அவ்வப்போது அவரது திருமணம் பற்றிய செய்திகள் வெளியாகின்றன என்று கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version