சோமாலிய நாட்டின் அதிபர் மாளிகையை தாக்க முயற்சி செய்த மூன்று அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது.

அதனால் மூன்று குற்றவாளிகளையும் பொதுமக்கள் முன்னிலையில் கம்பத்தில் கட்டிவைத்து சோமாலிய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். இந்த மரண தண்டனையால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சோமாலிய நாட்டில் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி மூன்று தீவிரவாதிகள் அதிபர் மாளிகையை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் தாக்கினர். Mogadishu என்ற பகுதியில் இருந்த அதிபர் மாளிகையை அவர்கள் தாக்கும்போது அந்த பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மூன்று பேர் பலியாகினர்.

மேலும் பலர் காயமடைந்தனர். பின்னர் சோமாலிய ராணுவத்தினர் அதிரடியாக களத்தில் இறங்கி அதிபர் மாளிகையை தாக்க முயன்ற மூன்று தீவிரவாதிகளையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் நடந்த விசாரணையில் அவர்கள் மூவரும் அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதன்பின்னர் மூவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை Mogadishu நீதிமன்றத்தில் நடந்து வந்தது நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் அதிபர் மாளிகையை தாக்கிய மூவருக்கும் மரண தண்டனை வழங்குவதாக நீதிபதி தீர்ப்பளித்தார். இன்று காலை Mogadishu நகரில் பொதுமக்கள் முன்னிலையில் மூவரையும் முகத்தில் துணியை வைத்து மறைத்து கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டனர்.

பின்னர் சோமாலிய ராணுவத்தை சேர்ந்த மூன்று ராணுவ வீரர்கள் ஒரே நேரத்தில் மூவரையும் சுட்டு கொன்று மரண தண்டனையயை நிறைவேற்றினர். இந்த காட்சி சோமாலிய நாட்டு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. உலகின் பல நாடுகள் மரண தண்டனையை எதிர்த்து வரும் நிலையில் இந்த மரணதண்டனை நிறைவேற்றத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version