குவைத்தில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

தான் பணி புரியும் வீட்டிலிருந்து இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் பணி புரியும் இடத்திற்கு அழைத்து வந்து விடுவதற்காக ஒரு வாடகை வாகனம் தேவை என இலங்கை பணிப் பெண் குவைத்திலுள்ள அவரது நண்பியிடம் கேட்டுள்ளார்.

இதன்போது நம்பகரமான சாரதி என இந்தியர் ஒருவரை இலங்கை பணிப் பெண்ணுக்கு அவரது நண்பி அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த வாகன சாரதி அப் பெண்ணை, வீட்டு குடியிருப்பு ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

ஒருநாள் வரை இலங்கை பணிப்பெண்ணை பூட்டி வைத்திருந்த நபர் பின்னர் வீதியில் விட்டுச் சென்றுள்ளார்.

சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கை பணிப் பெண் அவரை அடையாளங் காண்டியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version