வடபகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சிக்கு காரணம் என்ன என்பதை அறிவதற்காக வடபகுதி அரசியல்வாதிகள் சிலரிடம் எம்மால் கேட்கப்பட்ட கேள்வியும் பதில்களும் இங்கே தரப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண முதலமைச்சிடம் கேட்கப்பட்ட கேள்வி –

வடக்கு மாகாண முதலமைச்சராக வந்த பின் ஓா் ஆண்டுக்குள்ளேயே வடபகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. செங்கோல் ஆட்சி புரியும் மன்னன் உள்ள நாட்டில் மாதம் மும்மாரி பொழியுமாம். ஆனால் நீங்கள் பதவியேற்றபின் அப்படி ஒன்றும் நடக்கவில்லையே. ­ இது பற்றி உங்கள் அபிப்பிராயத்தை தருவீா்களா?

பதில் – இந்த வறட்சி பற்றி நான் சொல்லத் தேவையில்லை. இது வடபகுதியில் மட்டுமல்ல நாட்டில் அனைத்து பகுதியிலும் இருக்கும் நிலை. அத்துடன் நான் முதலமைச்சாரகப் பொறுப்பெடுத்திருந்தாலும் ஆட்சி அதிகாரம் எல்லாம் என்னிடம் இல்லை. ஆகவே நான் பதவியேற்ற பின் வந்த வறட்சி என்று நீங்கள் குறிப்பிடத் தேவையில்லை. என்னிடம் முழு அதிகாரத்தையும் இலங்கை அரசாங்கம் தந்தால் வடபகுதியில் மாதம் முப்பது மாரி பெய்ய வைக்க என்னால் முடியும். அத்துடன் வடபகுதியில் இருக்கும் இராணுவத்தினா் வடபகுதியை விட்டு அகன்ற உடனேயே மழை சிறப்பாகப் பெய்யும். ஏனெனில் அவா்கள் மிகவும் பாவம் செய்தவா்கள்.

கேள்வி – நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்றதுபோல் நீங்கள் இருப்பதற்காகவாவது மழை பொழியாதா? அத்துடன் படையினா் பாவம் செய்தவா்கள் என்றால் வடபகுதியைப் படையினா் கைப்பற்றிய பின்னா் ஒரு போதும் மழை பெய்திருக்க மாட்டாதே?

பதில் – நான் கொழும்பு சென்று எனது வீட்டினுள் இறங்கியவுடன் மழை பொழிவது வழமை. அதை நீங்கள் அங்கு வந்து பார்க்க வேண்டும். எனது உடல் இங்கே இருந்தாலும் உள்ளம் கொழும்பில் தான் இருக்கின்றது. ஆகவே அங்கே மாதம் மும்மாரி பொழிகின்றது. வடபகுதியைப் படையினா் கைப்பற்றிய பின்னா் ஆங்காங்கே சில நல்லவா்கள் இருந்திருப்பார்கள். அதுதான் மழை பொழிந்திருக்கும். ஆனால் தற்போது அவா்கள் இல்லாது போய்விட்டார்கள் என்று நினைக்கின்றேன்.

கேள்வி – நீங்கள் வடக்கு மாகாணசபையைக் கைப்பற்றிய பின்னா் அவா்கள் இல்லாமல் போய்விட்டார்களா? அல்லது ஓடிப்போய் விட்டார்களா?

பதில் – நீங்கள் வடபகுதியின் வறட்சியைப் பற்றியே என்னைப் பேட்டி காண வந்துள்ளீா்கள். ஆகவே அரசியலை இதற்குள் தயவு செய்து புகுத்த வேண்டாம்.

கேள்வி – சரி ஐயா! நான் வறட்சி பற்றியே உங்களுடன் கதைக்க இருக்கின்றேன். தற்போது ஏற்பட்டுள்ள இந்த வறட்சி பற்றியும் வடபகுதியில் குறிப்பாக வன்னி, யாழ்ப்பாணத்தில தீவகம் போன்ற பகுதிகளில் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுகின்றாகத் தெரிகின்றது. இதற்கு உங்கள் மாகாணசபை என்ன தீா்வு எடுத்துள்ளது.?

பதில் – வட பகுதி வறட்சி நிலவரம் பற்றியும் அதற்கான தீா்வு பற்றியும் எனது விவசாய அமைச்சா் உங்களுக்கு சரியான விபரங்களைத் தருவார். அவரை நீங்கள் சந்தித்து இது தொடா்பாக அறிந்து கொள்வது நல்லது என நினைக்கின்றேன். அத்துடன் எனக்கு இன்று பல நிகழ்வுகள் இருக்கின்றன. பல இடங்களில் என்னைத் திறப்பு விழாவுக்காக அழைத்துள்ளார்கள். ஆகவே நான் அங்கு செல்லவும் அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளவும் நேரம் தேவையாக உள்ளது.

கேள்வி – சரி ஐயா! வடக்கு மாகாணசபையில் நீங்கள் முதலமைச்சாரக உள்ளீா்கள் என்பதற்கு இவ்வாறான திறப்புவிழாக்களே நினைவு படுத்தக் கூடியதாக இருக்கின்றது. அல்லாது விடின் வடபகுதி மக்கள் உங்களை மறந்து விடுவார்கள். இத்துடன் நான் இந்தப் பேட்டியை முடித்துக் கொள்கின்றேன்.

பதில் – நன்றி.

அடுத்து வருவது வடக்கின் விவசாய அமைச்சருடனான வடக்கின் வறட்சி பற்றிய நோ்காணல். தொடா்ந்து காத்திருங்கள்….

தொடரும்

Share.
Leave A Reply

Exit mobile version