மும்பையில் இருந்து பிரசெல்ஸ் சென்ற விமானம் நடுவானில் சென்றபோது விமானி தூங்கியதால் 5000 அடி விரைவாக கிழே இறங்கியுள்ளது. சம்பத்தின்போது உடன் இருந்த துணை பெண் விமானி டேப் லெட்டில் பிசியாக இருந்துள்ளார்.

ஜெட் ஏர்வேக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று மும்பையில் இருந்து பிரசெல்ஸ் சென்றது. விமானம் அங்காரா வான்பகுதியில் சென்றபோது சுமார் 5000 அடி விரைவாக கிழே இறங்கியுள்ளது.

இது தொடர்பாக பதில் அளிக்க விமானபோக்குவரத்து இயக்குநகரம் இரண்டு விமானிகளுக்கும் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் விமானம் ஓட்டும்போது விமானி தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரம் அவருக்கான ஓய்வு எடுக்கும் நேரம் என்றும் கூறப்படுகிறது. அப்போது பெண் துணை விமானியும் தூங்கிவிட்டாரா என்று அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

ஆனால் பெண் விமானியோ நான் சம்பவம் நடந்தபோது டேப் லெட்டில் பிசியாக இருந்தேன் என்று பொறுப்பற்ற பதிலை தெரிவித்துள்ளார். விமானம் உயரத்தில் இருந்து கிழே இறங்கியதை கவனிக்கவில்லை. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விமானம் கிழே இறங்கியது தொடர்பாக அங்காரா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அழைப்பு விடுத்ததை அடுத்து விமானிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஜெட் ஏர்வேயும் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்காக இரண்டு விமானிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எபோலா நோய் தீவிரம்; இரண்டே நாளில் 56 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி!

4663_content_14-ebola-death-600

ஜெனீவா: ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களில் 56 பேராக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படி. எபோலா நோய்த்தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் 56 பேர் கடந்த இரண்டே நாட்களில் பலியானதாகவும், இதன் மூலம் உலகளாவிய அளவில் இந்நோயின் தாக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 1,069 ஆக உயர்ந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவில் 32 பேரும், சியெரா லியோனில் 19 பேரும், கினியாவில் 4 பேரும், நைஜீரியாவில் ஒருவரும் என மொத்தம் 56 பேர் கடந்த இரண்டே நாட்களில் எபோலாவினால் பலியானதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தியில் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.

மேலும், மேற்கு ஆப்ரிக்காவில் இந்நோய்க்கு மேலும் 128 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நோயின் அறிகுறிகளை இலகுவாக கண்டறிய முடியாததன் காரணமாக வெகு விரைவில் இந்நோய் பரவி வருவதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, இந்நோய் ஏனைய நாடுகளுக்கு பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன் விமான நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எபோலா நோயினால் பாதிப்க்கப்பட்ட 10 இலட்சத்துக்கு அதிகமானவர்கள் தமக்காக உணவு உட்பட அத்தியாவசிய பொருட்களை பெருவதில் மிகவும் சிரமம் அடைந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்ற நாட்டினருக்கு நோய் பரவுக்கூடிய அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நோய் தடுப்புக்கான வழிகளை உடனடியாக மேற்கொள்ளக்கூடிய நிலை தற்போது இல்லை எனவும் அசாதாரண நடவடிக்கைகளை எடுப்பதனால் மட்டுமே நோய் பரவுவதை தடுக்க இயலும்.

தடுப்பு நடவடிக்கைகளை மிகவும் கவனத்துடன் மேற்கொள்ளாவிட்டால், விரைவில் அதிக அளவிலான மனித இழப்புகளை சந்திக்க நேரிடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version