4070616d-bf8c-47cd-bc50-895136433898_S_secvpfயாழ்ப்பாணம், கரவெட்டி, வதிரி ஆண்டாள் வளவுப் பகுதி வீடொன்றில் தனித்திருந்த பெண்ணை, உள்ளாடையுடன் சென்று கட்டிப்பிடித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை (14) மாலை இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பகுதியில், திருமணமான பெண்ணொருவர், அவரது கணவர் வெளிநாட்டு வசித்து வருகின்ற நிலையில் தனிமையில் வசித்து வருகின்றார். மேற்படி பெண்ணின் வீட்டிற்கு ஓரிரு வீடுகள் தள்ளி வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 34 வயது குடும்பஸ்தர், வியாழக்கிழமை (14) மதியம் பெண்ணின் வீட்டிற்கு உள்ளாடையுடன் சென்று மேற்படி பெண்ணைக் கட்டிப்பிடித்துள்ளார்.

இதனால், குறித்த பெண் கூக்குரலிடவே, சந்தேகநபர் தப்பித்து ஓடியுள்ளார். இதனையடுத்து, அப்பெண் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (14) மாலை முறைப்பாடு பதிவு செய்தார்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

‘ஆவா” குழுவுக்கு இணையான குழு கைது: துப்பாக்கி பிரயோகம், ஆயுதங்களும் மீட்பு
15-08-2014

ஆவா குழுவுக்கு இணையாக மற்றுமொரு சமூகவிரோத குழுவொன்று நேற்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் பணம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சட்டவிரோத குழுவை கைது செய்ய முற்பட்ட போது தப்பியோட முற்பட்டதாகவும் இதனையடுத்து தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கும் மானிப்பாய் பொலிஸார், சந்தேக நபர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நால்வர் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 3 கத்திகள், 2 வாள்கள், 3 கொட்டன் பொல்லுகள், 4 மோட்டார் சைக்கிள்கள், 2 துவிச்சக்கரவண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

18, 21, 24, 25 வயதுடைய குறித்த சந்தேக நபர்கள் சாவல்கட்டு, சுதுமலை, மானிப்பாய் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் கிருஷ்ணா என்ற நபரின் வழிநடத்தலில் செயற்பட்டு வந்துள்ளதாகவும் பணம்பெற்றுக் கொண்டு கூலிக்கு வாள்வெட்டு, அடிதடி என்பவற்றில் இவர்கள் ஈடுபட்டு வந்ததுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மானிப்பாய், சுதுமலைப் பகுதியில் கடந்த மாதம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version