செங்குத்தாகத் தரையிறங்கக் கூடிய V-22 Osprey tilt-rotor விமானம்
பட்டினி ஒரு புறம் கொடூரமான ஐ.எஸ்.ஐ.எஸ் மதவாதப் போராளிகள் மறுபுறம் என யஷிதியர்கள் முப்பதினாயிரம் பேர் சின்ஜார் மலையில் தவித்துக் கொண்டிருக்கையில் அமெரிக்கக் கடற்படையினரின் சிறப்புப் பிரிவினர் நூற்றுக்கு மேற்பட்டோர் செங்குத்தாகத் தரையிறங்கக் கூடிய V-22 Osprey tilt-rotor விமானங்களில் போய் இறங்கினார்கள்.
அவர்களுக்கு உடவியாக பிரித்தானிய SAS படையினரும் சினூக் உழங்கு வானூர்திகளில் (Chinook helicopters) அங்கு சென்றுள்ளனர். அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகளுக்கு குர்திஷ்படையினர் ஐ.எஸ்.ஐ.எஸ் மதவாதப் போராளிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு வழங்குகின்றனர்.
சின்ஜார் மலையில் முன்பு நேட்டோப் படையினர் பாவித்துக் கைவிட்ட சிறிய விமானப்படைத் தளம் ஒன்று இப்போது மீளவும் பாவனைக்கு உட்படுத்தப்படுகின்றது. இதில் இந்தத் தளத்தில் இருந்து யஷிதியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படவுள்ளனர்.
அரபு நாடுகளின் பல நூற்றுக் கணக்கான இனக் குழுமங்கள் வாழ்கின்றன. இவற்றின் ஒன்று யஷிதி (Yazidi) இனக்குழுமம். குருதிஷ் மொழி பேசும் இவார்களுக்கு என ஒரு தனித்துவ மத வழிபாடு உண்டு. இந்த வழிபாட்டை பேய் வழிபாடு என மற்ற அரபுக்கள் கருதுகின்றனர்.
இவர்களின் மதம் புரதானை பாரசீக மதமான ஷொரொஸ்ரியனிசம் (Zoroastrianism), யூதர்களின் மதம், கிறிஸ்த்தவம், இஸ்லாம் ஆகியவற்றின் கலவை எனச் சொல்லப்படுகின்றது. ஆனால் இவர்கள் உருவ வழிபாட்டில் நம்பிக்கை உடையவர்கள். இவர்கள் மயிலை வழிபடுகின்றார்கள்.
இவர்களுக்கு நரகம் சாத்தான் போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. இவர்களின் இனத்தவர்கள் யாராவது வேற்று மதத்தவரைத் திருமணம் செய்தால் அவர்களை ஒதுக்கி வைப்பார்கள்.
தனித்துவமான யஷிதியர்கள்.
யஷிதியர்கள் பெரும்பாலும் ஈராக்கின் வட பிராந்தியத்தில் உள்ள மலைப்பிராந்தியங்களில் வாழ்ந்து வருகின்றனர். ஈராக்கில் மொத்தம் ஐந்து இலட்சம் யஷிதியர்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சிலர் துருக்கி, சிரியா, ஜோர்ஜியா, ஆர்மீனியா ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றார்கள். ஈராக்கில் வாழும் யஷிதியர்கள் மற்ற அரபுக்களால் நெடுங்காலமாகக் கொடுமைப்படுத்தப் பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு எதிரான கொடுமை ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் இசுலாமிய அரசின் கீழ் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. இவர்கள் இசுலாமிய மதத்திற்கு மாறவேண்டும் அல்லது கொல்லப்படுவீர்கள் என ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டினார்கள்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்குப் பயந்து யஷிதியர்கள் சின்ஜார் மலைக்குத் தப்பி ஓடினர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரின் கொடுமைகளுக்குப் பயந்து பல யஷிதியப் பெண்கள் மலையில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
சியா சுனி மோதல் நிறைந்த ஈராக்.
ஈராகில், சுனி, சியா, குர்திஷ் ஆகிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். மூன்றில் இரண்டு பங்கு சியா முசுலிம்களைக் கொண்ட ஈராக்கின் கிழக்குப் பிராந்தியத்தில் சுனி முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். சதாம் ஹுசேய்ன் சிறுபான்மையினரான சுனி முசுலிம் இனத்தைச் சேர்ந்தவர்.
ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாட்டுப் படைகள் அங்கிருந்து விலகும் போது ஈராக்கில் ஒரு “மக்களாட்சியை” உருவாக்கினர். ஈராக்கில் 2006-ம் ஆண்டில் இருந்து நௌரி அல் மலிக்கி தலைமை அமைச்சராக இருக்கின்றார்.
ஊழல் மிகுந்த இவரது ஆட்சியில் சுனி முசுலிம்கள் புறக்கணிக்கப்பட்டும் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றனர். இதனால் சுனி முசுலிம்களிடையே தீவிரவாதம் தலை தூக்கியது.
ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் அமைப்பு உருவானது. ஐ.எஸ்.ஐ.எஸ் அபூபக்கர் அல் பக்தாடி தலைமையில் இயங்கும் ஒரு சுனி முசுலிம் அமைப்பாகும். Islamic State of Iraq and Syria என்பதன் சுருக்கமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகும்.
இது அல் கெய்தாவின் கிளை அமைப்பு, இணை அமைப்பு எனப் பல மேற்கத்தைய ஊடகங்கள் பரப்புரை செய்தாலும் இதற்கும் தமக்கும் எந்தத் தொடர்பு இல்லை என அல் கெய்தா மறுத்துள்ளது.
.ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் தலைவர் ஒரு யூதர்
அபூபக்கர் அல் பக்தாடி எனப் பெயர் மாற்றிய யூத உளவாளி அல் கெய்தாவைப் பிளவு படுத்த்தி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை உருவாக்கினார் என்றும் சொல்லப்படுகின்றது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயல்களைச் சாக்காக வைத்துக் கொண்டு ஈராக்கில் மீண்டும் படைத்தளம் அமைக்க முனைப்புக் காட்டுவதாகத் தெரிகின்றது. இதனால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு அமெரிக்காவால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒன்று என்ற ஐயமும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவால் ஈராக்கில் படையினரை வைத்திருக்க முடியவில்லை.
2011-ம் ஆண்டு அமெரிக்கா ஈராக்கில் இருந்து வெளியேறும் போது ஒரு தொகைப் படையினரை அங்கு வைத்திருக்க விரும்பியது. அப்படைகள் செய்யும் குற்றங்களை அமெரிக்கச் சட்டப்படி விசாரிப்பதா அல்லது ஈராக்கிய சட்டப்படி விசாரிப்பதா என்ற இழுபறி ஈராக்கிய அரசுக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் இருந்ததால் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து முற்றாக வெளியேறின.
இதற்குக் காரணம் ஈராக்கியத் தலைமை அமைச்சர் நௌறி அல் மலிக்கி ஈரானின் வற்புறுத்தலின் பேரில் அமெரிக்கப் படைகளை முற்றாக ஈராக்கில் இருந்து வில்கச் செய்தார்.
இப்போது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு செய்த தாக்குதலைத் தொடர்ந்து ஈராக் சியா முசுலிம்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம், சுனி முசுலிம்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம் குர்திஷ் மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம் என மூன்றாகப் பிளவு பட்டுள்ளது.
ஈரான் அமெரிக்க முறுகல்
ஈரானும் அமெரிக்காவும் செய்து வந்த ஈரானின் அணுக்குண்டு உற்பத்தியும் அதற்கு எதிராக மேற்கு நாடுகள் செய்யும் பொருளாதாரத் தடை தொடர்பான பேச்சு வார்த்தை சுமூகமாகச் செல்லாமல் இழுபறியில் நிற்கின்றது.
இதனால் அதிருப்தியடைந்த ஈரானிய உச்சத் தலைவரும் மதத் தலைவருமான அயத்துல்லா அலி கொமெய்னி அமெரிக்காவுடனும் சியோனிஸ்ட்டுகளுடனும்(இஸ்ரேல்) பேச்சு வார்த்தை நடாத்துவதால் பயனில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஈராக் தொடர்பான கொள்கையிலும் நிலைப்பாட்டிலும் ஈரான் பெரும் பங்கு வகிக்கின்றது. சியா முசுலிம்களைப் பெருமான்மையாகக் கொண்ட ஈரானும் ஈராக்கும் இணைவதை அமெரிக்கா விரும்பவில்லை. இதனால் அமெரிக்க சார்பு ஆட்சியாளர்கள் ஈராக்கில் இருப்பதை அமெரிக்க உறுதி செய்ய முயல்கின்றது.
ஈராக்கியத் தலைமை அமைச்சர் நௌறி அல் மலிக்கியை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு போராளிகளின் தாக்குதலை சாக்காக் வைத்து பதவியில் இருந்து நீக்கி விட்டு விட்டு தனக்கு ஏற்புடைய ஒரு அரசிஅ ஈராக்கில் அமைக்க முயல்கின்றது.
சியா முசுலிமான ஈராக்கியத் தலைமை அமைச்சர் நௌறி அல் மலிக்கி (Nouri al-Maliki, Iraq’s prime minister) சுனி முசுலிம்களை பல துறையிலும் புறக்கணித்ததால்ட சுனி முசுலிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நாட்டில் இரத்தக் களரியை ஏற்படுத்துகிறது என அமெரிக்கா தான் ஈராக்கில் செய்யும் ஆட்சி மற்றத்திற்கு நியாயம் கற்பிக்கின்றது.
2014-ம் ஆண்டு டிசம்பர் முடிவுடன் ஆப்கானிஸ்த்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறவிருக்கின்றன. அதன் பின்னர் அமெரிக்கப்படையினருக்கு ஒரு பயிற்ச்சிக் களம் அவசியம். அது ஈராக்கா?
பிந்திக் கிடைத்த செய்திகள்:
ஈராக்கியத் தலைமை அமைச்சரி நௌறி அல் மலிக்கி பதவி விலகியுள்ளார். நாட்டின் எல்லாத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு அரசு உருவாக்கும் முகமாக ஹைதர் அல் அபாடி புதிய தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலில் பதவி விலக் மறுத்த அல் மலிக்கி பின்னர் பதவி விலகி புதிய தலைமை அமைச்சருடன் ஒத்துழைப்பேன் என அறிவித்துள்ளார். புதிய அரசுக்கு அமெரிக்கா படைத்துறை ஒத்துழைப்பை வழங்குவாதாக அறிவித்துள்ளது.
ஈராக்கிய நிலைமை தொடர்பாக ஆராய ஐரோப்பிய ஒன்றியம் ஒரு அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளது. அமெரிக்கப்படையினர் யஷிதியர்களை விடுவிக்க வேண்டி அளவிற்கு அவர்கள் மோசமான நிலையில் இல்லை என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
ஈராக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் சின்ஜார் மலையில் ஒளித்திருக்கும் யஷிதியர்களை விடுவிக்கும் படை நடவடிக்கை தேவை இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-வேல் தர்மா-
June 17, 2014: If the lines between Shiaa and Sunni areas of Iraq were blurred, the militants on both sides of the conflict are doing their best to clarify them. Here Shiaa residents of Tal Affar, a previously mixed sect town in northern Iraq, flee toward Sinjal in newly consolidated Kurdish territory.