ஹைதராபாத்: தனது காதலிக்கு தான் வளர்த்து வந்த நாய் பிடிக்கவில்லை என்பதால் ஒரு வினோதமான விளம்பரத்தை இன்டர்நெட்டில் கொடுத்து குசும்பு செய்துள்ளார் அவரது காதலர்.

இதுதொடர்பாக தனது நாயின் பாவம் போன்ற முகத்துடன் கூடிய படத்தைப் போட்டு அதைப் பற்றி வர்ணித்து விட்டு இப்படிப்பட்ட நாயைப் போய் வெறுக்கிறாரே என் காதலி என்றும் அவர் சொல்லியுள்ளார்.

இந்த விளம்பரம் இப்போது பேஸ்புக்கிலும் காமெடியாக வலம் வர ஆரம்பித்துள்ளது. ஜாலிக்காகவே இப்படிப்பட்ட விளம்பரத்தை அந்தக் காதலர் கொடுத்துள்ளார். சரி அந்த விளம்பரத்தைப் படிங்க…

17-1408260950-dog-600

என் நாயைப் பிடிக்கலை
“என் காதலிக்கு எனது நாயைப் பிடிக்கவில்லை. எனவே நீங்க, யாராவது வாங்கிக் கொள்ளத் தயாரா….

நல்ல வசதி
நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த, ப்யூர்பிரெட் அவள். நான்கு வருடமாக நான் வைத்திருக்கிறேன்.
விளையாட்டுன்னா உசுரு
விளையாடப் பிடிக்கும். ஆனால் முறையாக பயிற்சி பெறவில்லை.
நீளமா முடி இருக்கும்
முடி நீளமாக இருக்கும். நன்றாக பராமரிக்க வேண்டும். விரல் நீளமாக இருக்கும். ஆனால் அதை வெட்டினால் பிடிக்காது.
பூனை பிடிக்கும்
எப்புவுமே பூனைன்னா உயிர். விலை உயர்ந்த சாப்பாடுதான் ரொம்பப் பிடிக்கும்.
உர் முகம்
நாள் முழுக்க வேலை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தால் முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்ளும். அதேசமயம், நீங்கள் டயர்ட் ஆகி விட்டீர்கள் என்றால் உங்கள் அருகேயே இருந்து நன்றாகப் பார்த்துக் கொள்ளும்.
கடிக்காது..
ஆனால் நரகம் உங்களைக் கடிக்காது. ஆனால் நரகம் போல உணர்வை ஏற்படுத்தி விடும்.
30 வயசு….!!
எனவே, யாருக்காவது விருப்பம் இருந்தால், இந்த 30 வயதுடைய, சுயநலமான.. எனது காதலியை விலைக்கு வாங்கி விடுங்களேன்… அப்பவாவது நானும் எனது நாயும் மட்டும் ஜாலியாக இருக்க முடியும்..” அடப் பக்கி.. பப்பிக்காக.. பழகிய பப்பிம்மாவையே விற்கத் துணிஞ்சுட்டாரே இந்த தோஸ்த்து!
Share.
Leave A Reply

Exit mobile version