அண்­மைய நாட்­க­ளாக உலாவி வந்த ஒரு வதந்­திக்கு, முற்­றுப்­புள்ளி வைத்­தி­ருக்­கிறார் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை. இலங்கையில் போரின் போது இடம்­பெற்ற மீறல்கள் குறித்து விசா­ரிக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ரணைக் குழு­வுக்கு, இந்தி­யாவோ  அல்­லது  தாய்­லாந்தோ வீசா வழங்க மறுக்­க­வில்லை என்று அவர் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

சில வாரங்­க­ளாக இந்த விவ­காரம்  ஊட­கங்­களில் பர­வ­லா­கவும் பர­ப­ரப்­பா­கவும் பேசப்­பட்டு வந்­தது. ஏனென்றால், இந்த விசா­ரணைக் குழுவை நாட்­டுக்குள் நுழைய அனு­ம­திக்கப் போவ­தில்லை என்று இலங்கை அர­சாங்கம் திட்­ட­வட்­ட­மாக கூறி­விட்­டது.

இத்­த­கைய நிலையில், இலங்­கைக்கு வெளியில் இருந்தே, விசா­ர­ணை­க­ளையும் மேற்­கொள்ள வேண்­டிய நிலை ஐ.நா. விசா­ரணைக் குழு­வுக்கு ஏற்பட்டுள்­ளது. இந்த விசா­ர­ணையின் முக்­கிய பங்கு சாட்­சி­யங்­களைத் திரட்­டு­வ­தாகும்.

அதனை இலங்­கைக்குள் இருந்து மேற்­கொள்ள முடி­யாது போனால், அயல் நாடு­களில் இருந்து மேற்­கொள்­வதே சுல­ப­மா­னது.

இந்த விசா­ரணைக் குழு­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட நிபுணர் குழுவின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான, பாகிஸ்­தா­னிய மனித உரிமை ஆர்­வலர்  அஸ்மா ஜஹாங்கீர், சில வாரங்­க­ளுக்கு முன்னர்  அளித்த பேட்டி  ஒன்றில், இவ்­வாறு  விசா­ர­ணைக்கு அனு­மதி மறுக்­கப்­ப­டு­வது ஓன்றும் தமக்குப் புதிய விடயம் அல்ல என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஏற்­க­னவே இது போன்ற சூழ்­நி­லை­களில், விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்­டதைச் சுட்­டிக்­காட்டி, தேவைப்­பட்டால் சாட்­சி­களை அயல் நாடு­க­ளுக்கு அழைத்து விசா­ரிப்போம், சில­வே­ளை­களில் ஜெனீ­வா­வுக்கும் வர­வ­ழைப்போம் என்றும் தெரி­வித்­தி­ருந்தார்.

இலங்­கையில் இருந்து சாட்­சி­களை ஜெனீ­வா­வுக்கு அழைத்து சாட்­சி­யங்­களைப் பெறு­வது ஒன்றும் அவ்­வ­ளவு இல­கு­வான காரி­ய­மல்ல. அதற்கு பெரும் பொருட்­செ­லவு ஏற்­படும். எனவே, அயல் நாடு­க­ளுக்கு அழைத்து  விசா­ர­ணை­களை  மேற்­கொள்­வ­தற்கு  வாய்ப்­புகள் இருப்­ப­தாக பர­வ­லாக நம்­பப்­பட்­டது.

குறிப்­பாக இந்­தி­யாவில் அதற்கு வாய்ப்­புகள் அதிகம் என்று கரு­தப்­பட்­டது. காரணம், போரில் இருந்து தப்­பி­ய­வர்கள் பலர், இந்­தி­யாவில்  கூடதங்கியுள்ளனர்.

எனவே, ஐ.நா. விசா­ரணைக் குழு இந்­தி­யாவில், இருந்து விசா­ர­ணையை மேற்­கொள்ளும், சாட்­சி­யங்­களைத் திரட்டும் என்ற பர­வ­லான நம்­பிக்கை காணப்பட்­டது.

இத்­த­கைய கட்­டத்தில் தான், இந்­தி­யாவும் ஏனைய தெற்­கா­சிய நாடு­களும், விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு ஐ.நா. விசா­ரணைக் குழு­வுக்கு வீசா வழங்க மறுத்து விட்­ட­தான செய்­திகள் ஊட­கங்­களில் வெளி­யா­கின.

இந்தப் புர­ளியை முதலில் கிளப்பி விட்­டது இலங்கை அர­சாங்கம் தான்.

தெற்­கா­சிய நாடுகள் ஐ.நா. விசா­ரணைக் குழு­வுக்கு வீசா வழங்க மறுத்­தமை, இலங்­கைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்­றி­யென்றும் மனித உரிமை ஆணைக்­குழு உறுப்­பினர் ஒருவர் கூறி­யி­ருந்தார்.

இலங்­கையில் மனித உரிமை ஆணைக்­குழு எவ்­வாறு அர­சியல் மயப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்­பதை இந்த ஒரு விட­யமே வெளிப்­ப­டுத்தி நிற்­கி­றது.

இலங்கை அரசின் கட்­டுப்­பாட்டில் உள்ள ஊட­கங்­களில் பரப்­பப்­பட்ட இந்தச் செய்­திக்கு ஒரு அடிப்­படை நோக்கம் இருந்­துள்­ளது என்­பது தெளி­வா­கவே தெரிகி­றது.

அதா­வது, இந்­தியா வீசா வழங்­க­வில்லை என்று முன்­னரே கூறி­யதன் மூலம், இந்­தி­யா­வுக்கு இக்­கட்­ட­மான சூழலை ஏற்­ப­டுத்த முனைந்­தி­ருக்­கி­றது அரசாங்கம்.

இத­னையும் மீறி, வீசா வழங்­கப்­பட்டால், எதற்­காக வழங்­கப்­பட்­டது என்ற கேள்வி புது­டில்­லியை நோக்கி எழுப்­பப்­படும்.

சாதா­ர­ண­மாக, ஐ.நா. விசா­ரணைக் குழு, வீசா எடுத்துக் கொண்டு இந்­தியா சென்­றி­ருந்தால், அது சர்ச்­சை­யாக உரு­வெ­டுக்­காது.

இப்­ப­டி­யான செய்தி வெளி­யான நிலையில், ஐ.நா. குழு­வுக்கு இந்­தியா வீசா வழங்­கினால், அது கேள்­வி­களை எழுப்பும். அதனால், இந்­தியா விசா வழங்கப் பின்­ன­டிக்கும்  அல்­லது  வழங்­காமல் கூட போகலாம். அவ்­வாறு  இந்­தியா  எந்த நகர்வை மேற்­கொண்­டாலும் அது இலங்­கைக்கு சாத­க­மான விட­ய­மாகும்.

எனவே தான், புது­டில்­லியை இக்­கட்டில் மாட்டி விடு­வ­தற்­காக திட்­ட­மிட்டுக் காயை நகர்த்­தி­யது கொழும்பு.

இதனால் தான், புது­டில்­லியில், இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சின் பேச்­சாளர், சையட் அக்­ப­ரு­தீ­னிடம் இது­பற்றி ஒவ்­வொரு முறை வின­வப்­பட்ட போதும், சரி­யாகப் பதி­ல­ளிக்­காமல் நழு­வினார்.

ஒரு­போதும் அவர், “ஐ.நா. விசா­ரணைக் குழு விசா­வுக்கு விண்­ணப்­பிக்­கவும் இல்லை, நாம் மறுக்­க­வு­மில்லை” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்­டாகப் பதி­ல­ளித்­தி­ருக்­க­வில்லை.

அவ்­வாறு அவர் கூறி­யி­ருந்தால் இந்த விவ­காரம் இந்­த­ள­வுக்கு நீண்­டி­ருக்­காது.

இந்­திய ஊட­கங்­களில் இந்தச் செய்தி வெளி­யா­காத நிலையில், அது­பற்றித் தம்மால் கருத்து வெளி­யிட முடி­யாது என்று தொடங்கி, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில், இந்­தியா வெளிப்­ப­டுத்­திய நிலைப்­பாடு என்ன என்று விப­ரித்து, ஐ.நா. குழு விசா­வுக்கு விண்­ணப்­பித்தால், இவற்­றை­யெல்லாம் கருத்தில் கொண்டு முடி­வெ­டுக்­கப்­படும் என்று பூட­க­மாக குறிப்­பிட்­டி­ருந்தார், இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சின் பேச்­சாளர் சையட் அக்­ப­ருதீன்.

அதா­வது வெளிப்­ப­டை­யாக பதிலை அளிக்­காமல், அவர், நீட்டி முழக்­கி­யது, இந்­தி­யாவும் எதையோ வெளிப்­ப­டுத்தத் தயங்­கு­கி­றது என்ற உண்­மையை புலப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

உண்­மையில், இந்­தியா கூட, இந்த விவ­கா­ரத்தில் ஒரு மயக்க நிலை நீடிப்­ப­தையே விரும்­பி­யது எனலாம்.

ஆனால், இப்­போது நவ­நீ­தம்­பிள்ளை, இந்த கேள்­வி­க­ளுக்கு முடிவு கட்­டி­யி­ருக்­கிறார்.

அதா­வது ஐ.நா. நிபுணர் குழு­வினர், எந்­த­வொரு நாட்­டுக்கும் செல்­வ­தற்கு விசா கோரி விண்­ணப்­பிக்­க­வில்லை என்று அவர் தெளி­வாக கூறி­யி­ருக்­கிறார்.

இத்­த­கைய நிலையில், இலங்கை அர­சாங்கம், இந்த விவ­கா­ரத்தில் குழப்­பத்தை விளை­விக்க முயன்­றி­ருப்­பதும், இந்­திய அர­சாங்கம் அதனைத் தொடர விரும்­பி­யி­ருப்­பதும் வெளிப்­ப­டை­யா­கி­யி­ருக்­கி­றது.

இந்­தி­யாவின் தரப்பில் இருந்து, வெளி­யா­கி­யுள்ள கருத்­துகள், ஐ.நா. விசா­ரணைக் குழுவை அது வர­வேற்­காது என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தாக இருக்­கின்ற நிலையில், ஐ.நா. குழு இந்­தி­யா­விடம் விசா கோரும் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

இலங்­கைக்கு வெளியில் உள்ள ஆதா­ரங்­களை, ஒன்று திரட்டி போர்க்­குற்­றங்­களை நிரூ­பிக்க முடியும் என்று திட்­ட­வட்­ட­மாக கூறி­யி­ருக்­கிறார் நவ­நீ­தம்­பிள்ளை.

அதா­வது, ஐ.நா. விசா­ரணை  என்­பது குறித்த ஒரு நாட்­டுக்குச் சென்று தான் மேற்­கொள்ள வேண்டும் என்ற அவ­சி­ய­மல்லை என்றும், அவ்­வாறு அம­திக்கப்ப­டாத சந்­தர்ப்­பங்­க­ளிலும் கூட வெற்­றி­க­ர­மான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டுள்­ளதை வட­கொ­ரியா, சிரியா விவ­கா­ரங்­களை வைத்து உதா­ரணம் காட்­டி­யி­ருக்­கிறார் அவர்.

தற்­போ­துள்ள நவீன தொடர்­பாடல் வச­தி­களை ஐ.நா. அதிகம் நம்­பு­வ­தா­கவும் தெரி­கி­றது.

நவ­நீ­தம்­பிள்­ளையின் இந்தக் கருத்து இலங்கை அர­சாங்­கத்­துக்கு அதிர்ச்­சியைக் கொடுத்­துள்­ள­தென்­பதால் தான், அவர் முன்­கூட்­டியே தீர்­மானம் எடுத்துச் செயற்­ப­டு­வ­தா­கவும், பக்­கச்­சார்­பாக செயற்­ப­டு­வ­தா­கவும், அரசாங்கம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.

அதேவேளை, ஐ.நா. விசாரணைக் குழு இந்தியாவிடம் விசாவுக்கு விண்ணப்பித்து, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டால், இந்தியாவின் நடுநிலைமையும் கூட கேள்விக்குள்ளாக்கப்படும்.

ஏனென்றால், இலங்கைக்கு எதிரான விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது இந்தியா. ஆனால், இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு இந்தியா ஆதரவளித்தது.

எனவே, ஒரு விசாரணைக் குழுவை நியாயமானது என்று கூறி வாக்களித்த இந்தியாவினால், இன்னொரு விசாரணைக்குழுவை நியாயமற்றது என்று நாட்டுக்குள் அனுமதிக்க மறுப்பது சிக்கலானது.

அவ்வாறானதொரு சங்கட நிலை இந்தியாவுக்கு உருவாகுமா இல்லையா என்பது, ஐ.நா. விசாரணைக் குழுவின் அடுத்தகட்ட நகர்வுகளில் தான் தங்கியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version