மாஸ்கோ: இந்த செல்ஃபி படுத்தும் பாடு ரொம்ப டார்ச்சராக இருக்கிறதப்பா. யாரைப் பார்த்தாலும் மொபைலை கையில் வைத்துக் கொண்டு நமக்கு நாமே என்று படம் எடுத்து படுத்தி எடுக்கிறார்கள்.இப்படித்தான் ரஷ்யாவில் ஒரு ஆசிரியை செல்ஃபி எடுத்து அதை நெட்டிலும் போட்டு இப்போது வேலையையும் பறி கொடுக்கப் போகிறார். இவரது வேலை போகக் காரணம், இவர் எடுத்த செல்ஃபி இவரது நிர்வாணமாகும்.இதை நெட்டில் போட்டதை இப்போது அவரது சக ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், மாணவர்கள் என அனைவரும் பல ரவுண்டு பார்த்து விட்டனர். இதனால் ஆசிரியையைய வேலையை விட்டு நீக்க பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.

ஆனால் இதில் என்ன தவறு இருக்கிறது. இதற்காக வேலையை விட்டுத் தூக்கினால் தூக்கி விட்டுப் போகட்டும் என்று ஆசிரியை அலட்சியமாக இருக்கிறார்.

Elena-Kornyshonkova

இசை ஆசிரியை
இந்த ஆசிரியையின் பெயர் எலீனா கோர்னிஷோன்கோவா. வயது 40. மேற்கு டெவர் நகரில் உள்ள கோனகோவ் என்ற பகுதியைச் சேர்ந்தவர். இசை ஆசிரியையாக இருந்து வருகிறார்.
செல்ஃபி படங்கள்  (நமக்கு நாமே எடுக்கும்  படம்)
இவர் நிர்வாண கோலத்தில் தனது செல்ஃபி படங்களை எடுத்து ரஷ்யாவின் பேஸ்புக் வடிவமான விகான்டேக்கில் போட்டுள்ளார். தனக்கு நெருக்கமானவர்கள் மட்டும்தான் இதைப் பார்ப்பார்கள் என்று அவர் நினைத்துள்ளார்.
எல்லோரும்    பார்த்துட்டாங்களே
ஆனால் இவர் போட்ட படங்களை   இவரது    ஒட்டு மொத்தப்   பள்ளியுமே  பார்த்து விட்டது. மாணவர்களும்  கூட பார்த்து விட்டனர்.

ராஜினாமா செய்யுங்க
இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் எலீனாவைக் கூப்பிட்டு ராஜினாமா செய்யுமாறு கூறியுள்ளது. ஆனால் அவர் மறுத்து விட்டார். நிர்வாணத்தில் என்ன தவறு இருக்கிறது. நான் மற்றவர்களை மிகக் கெளரவமான முறையில் வாழ்ந்து வருகிறேன். நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி விட்டார். இதையடுத்து ஒரு வாரத்தில் ராஜினாமா செய்யாவிட்டால் டிஸ்மிஸ் செய்வோம் என்று பள்ளி நிர்வாகம் எச்சரித்துள்ளதாம்.
ஸ்பெயினில் எடுத்த படம்
இந்தப் படங்களை விடுமுறையில் ஸ்பெயின் போயிருந்தபோது எடுத்தாராம் எலீனா. தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் காட்டத் திட்டமிட்டு போட்டிருந்தாராம். .ஆனால் தவறாக பப்ளிக் படமாக இது போய் விட்டது. ஆசிரிய எலீனா அவரது பள்ளியில் நல்லாசிரியை என்ற பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share.
Leave A Reply

Exit mobile version