ஒரு வயதும் ஒரு மாதமுமேயான மகளை கல்லால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டிச் அக்குழந்தையின் தந்தையை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கல்லால் அடித்ததில் காயமடைந்த குழந்தை, நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தையின் தந்தையும் தாயும் பிரிந்து வாழ்கின்ற நிலையில், தந்தையிடம் குழந்தையைக் காண்பிப்பதற்காக இன்று அழைத்துச் சென்றபோதே, கல்லால் அடித்து குழந்தையை அவர் கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பஸ்தர் அடித்துகொலை : பெண்கள் மூவர் கைது
24-08-2014
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டகளப்பு, காவத்தமுனை பாடசாலை வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அசனார் நாசார் (வயது 38) என்பவர், மீராவோடை பவுசி மாவத்தையில் வைத்து சனிக்கிழமை இரவு (23) அடித்துகொல்லப்பட்டார்.
இவர், பவுசி மாவத்தையில் உள்ள தனது தாயாரின் வீட்டுக்கு சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயாரின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் பெண்கள் மூவர் உட்பட இரண்டு ஆண்கள் சேர்ந்து இவரை தாக்கியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதனால், தலைப்பகுதியில் காமடைந்த நிலையில் இவர் சம்பவ இடத்திலேயே உரியிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டு எருவிலில் 3 பிள்ளைகளின் தாயார் சுருக்கிட்டுத் தற்கொலை
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருவில் கிராமத்தில் கண்ணகி வித்தியாலயத்திற்கு அருகில் வசித்து வரும் இளையதம்பி யாழினி வயது (31) என்பவர் இன்று சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் திருமணம் முடித்து 3 பெண் பிள்ளைகளுக்கு தாயானவர்.
இவருடைய முதலாவது பிள்ளையின் வயது 9இ இரண்டாவது பிள்ளையின் வயது 4 கடைசிப்பிள்ளை 10 மாதக் கைக்குழந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருடைய கணவர் கட்டாரில் தொழில் புரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் தனது கணவனுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்ததாகவும்இ பின்னர் தனது 10 மாதக் குழந்தை எழுந்து அழுதபோது தாய் எழும்பாததன் காரணமாக மற்றைய இரண்டு குழந்தைகளும் எழுந்து பார்த்த போது அம்மா தூக்கில் தொங்குவதனைக் கண்டு வெளியில் தூங்கிக் கொண்டிருந்த தமது அம்மப்பாவிடம் கூறியிருக்கின்றார்கள்.
அவர் அறையை வந்து பார்த்ததும் தனது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதனைக் கண்டிருக்கின்றார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.