தெஹ்ரான்: ஈரான் அணு உலையை வேவு பார்த்த இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரானில் உள்ள அணு உலைகளில் மின்சார உற்பத்தி மட்டுமின்றி பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களும் தயாரிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய உலகின் சில நாடுகளில் ஒன்றான இஸ்ரேல், அந்நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை எல்லாம் பறிமுதல் செய்து அழித்துவிட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றது.

ஈரான் அணு உலையை வேவு பார்த்த இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது! மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமான அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடாக அறியப்படும்  இஸ்ரேல், ஈரானின் பல பகுதிகளில் அமைந்துள்ள அணு செறிவூட்டும் நிலையங்களை ஆளில்லா உளவு விமானங்களின் மூலமாக வேவு பார்த்தும் வருகின்றது.

இந்நிலையில், ஈரானின் நட்டன்ஸ் பகுதியில் உள்ள அணு செறிவூட்டும் நிலையத்தை நேற்று வேவு பார்க்க வந்த இஸ்ரேல் நாட்டின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட பகுதியான நட்டன்ஸ் அணு செறிவூட்டும் நிலையத்தை நோக்கிச் சென்ற அந்த ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் ராணுவப் படைகள் ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Share.
Leave A Reply

Exit mobile version