ஜெனிவா: சுவிட்சர்லாந்தில் இரண்டு இலகு ரக விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டதில் 6 பயணிகள் படுகாயம் அடைந்தனர். சுவிட்சர்லாந்தின் வடக்கு கிழக்கில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது (SG) செங்  காலன் நகரம். இந்த நகரின் மீது ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 இலகு ரக விமானங்கள் பறந்தன.

நடுவானில் அந்த விமானங்கள் மோதிக் கொண்டன. இதையடுத்து ஒரு விமானம் புனித காலன் நகரில் விழுந்து நொறுங்கியது. இதில் அந்த விமானத்தில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மற்றொரு விமானம் அருகில் உள்ள சிட்டர்டார்ப் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த 2 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். எந்த சூழலில் இந்த விபத்து நடந்தது என்பது குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை.
நடுவானில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் ஆச்சரியம்; 11 செ.மீ உயரமுள்ள நாய்!

Tamil_News_249869942666

இங்கிலாந்தில் ஒரு ஐபோன் உயரத்தை விட குறைவாக, 11 செ.மீ.  உயரத்துடன் உள்ள நாய்  மிக மிக சிறிய நாய் என்ற பெருமையைப்  பெற்றுள்ளது.

இதன் தலை கோல்ப் பந்து அளவில் உள்ளது. இந்த நாயை  அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

தலைநகர் லண்டனில்  வாழும் 46 வயது பெண் ரோஸ்மேரி மெக்லின்டன். இவரது கணவர்  அந்தோணி, பஸ் ஓட்டுனராக உள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த மார்ச் 30 ஆம் திகதி  ஒரு குப்பைத் தொட்டி அருகிலிருந்து இந்த நாயைக் கண்டெடுத்துள்ளனர்.

இதையடுத்து,  அந்த நாயை வீட்டிற்கு எடுத்து வந்து, உணவு ஊட்டிய போதும் அதனால் சாப்பிட  முடியவில்லை. பிறகு ஒரு இங்க் பில்லரின் உதவியுடன் நாய்க்கு பாலை ஊட்டி வருகின்றனர்.

பிறக்கும் போதே மிக சிறியதாகப் பிறந்ததால், மற்ற நாய்கள் இதனை அருகில் சேர்ப்பதில்லை.

எனினும், தற்போது அது ஆரோக்கியமாக இருப்பதுடன்,  முன்பைவிட  அதன்  உயரம் கொஞ்சம் அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version