அண்­மையில் யாழ்ப்­பா­ணத் தில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின், பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு இடை­யி­லான உயர்­மட்டக் கூட்டத்தில், வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் வெளி­யிட்ட கருத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி, கடு­மை­யான சர்ச்­சைகள் எழுந்­துள்­ளன.

குறிப்­பாக, ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ரெலோ ஆகிய கட்­சிகள் தான், தமது கோபத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.

இத­னுடன் தொடர்­பு­டைய கட்­சி­யாக இருந்த போதிலும், புளொட் எந்தக் கரு த்­தையும் இந்தப் பத்தி எழு­தப்­படும் வரையில் வெளி­யி­ட­வில்லை.

கொள்கை ரீதி­யாக தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் மட்­டுந்தான் இணைந்­தி­ருக்க முடி­யு ­மே­யொ­ழிய, வன்­மு­றை­யோடு சம்­பந்­தப்­பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ்.,ரெலோ, புளொட் ஆகிய கட்­சி­க­ளுடன் அவ்­வாறு இணைந்­தி­ருக்க முடி­யாது என்று முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் வெளி­யிட்ட கருத்­துத்தான், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இடம்­பெற்­றுள்ள தமி­ழ­ரசுக் கட்சி தவிர்ந்த பிற கட்­சி­களின் கோபத்­துக்கு காரணம்.

அவ­ரது இந்தக் கருத்து, வேண்­டு­மென்றே வெளி­யி­டப்­பட்­டது அல்ல.

தமி­ழ­ரசுக் கட்­சியின் சார்­பாக நடந்து கொள்­கி­றீர்கள் என்று, பாரா­ளு­மன்ற உறு ப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் தெரி­வித்த குற்­றச்­சாட்­டுக்­கான பதி­லா­கவே அது அமைந்­தி­ருந்­தது.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் இந்தக் கருத்து, வன்­மு­றையில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என்று முன்னாள் போராளி இயக்­கங்­க­ளாக இருந்த தம்மை குறைத்து மதிப்­பிடும் வகையில் இருப்­ப­தாக இந்தக் கட்­சிகள் கோபத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உயர்­மட்டக் கூட்­டத்தில், உரை­யா­டப்­பட்ட விடயம், இப்­போது ஊட­கங்­களினூடாக ஒரு­வ­ரை­யொ­ருவர் குற்­றஞ்­சாட்டி மோதிக் கொள்ளும் அள­வுக்கு வந்­தி­ருக்­கி­றது.

அது­மட்­டு­மன்றி, மாகா­ண­சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம், முத­ல­மைச்சர் இது­போன்ற கருத்­துக்­களை வெளி­யி­டு­வதை இத்­துடன் நிறுத்திக் கொள்ளாவிடின், மோச­மான விளை­வுகள் ஏற்­படும் என்று செய்­தி­யா­ளர்­களைக் கூட்டி எச்­ச­ரித்­தி­ருக்­ கிறார்.

முன்னாள் போராளி இயக்­கங்­களின் சார்பில் வடக்கு மாகா­ண­ச­பையில் 14 பேர் இருப்­ப­தா­கவும், தமி­ழ­ரசுக் கட்­சிக்கு 17 பேர் தான் உள்­ளனர் என்றும், அவர்களில் பலரும் நடு­நிலை வகிக்கக் கூடி­ய­வர்கள் என்றும், தாம் ஒன்று கூடி முடி­வெ­டுக்க நேரிடும் என்றும் அவர் மிரட்டும் தொனியில் கூறியிருக்கிறார்.

இதன் மூலம் அவர் சொல்ல வந்த செய்தி என்­ன­வென்றால், முத­ல­மைச்­சரை எச்­ச­ரிப்­பது என்­பது தான்.

இது­போன்ற பார­தூ­ர­மான கருத்­து­க ளும், விமர்­ச­னங்­களும் இன்­றைய நிலை யில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குத் தேவையா என்­பதே முக்­கி­ய­மான வினா­வாகும்.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் வெளி­யிட்ட கருத்து, கூட்­ட­மைப்பில் அங்கம் வகித்­தி­ருக்கும் கட்­சி­க­ளுக்கு பிடிக்­க­வி ல்லை என்றால், அதனை அந்தக் கூட்­டத்­தி­லேயே வெளி­யிட்டுத் தீர்வு கண்­டி­ருக்க வேண்டும்.

ஆனால், உயர்­மட்டக் குழுக் கூட்­டத்தில் பேசப்­பட்ட விட­யத்தை, அர­சி­ய­லாக்கி, ஊட­கங்­களில் பர­ப­ரப்­பாகத் தம்மைப் பேச வைக்க எத்­த­னித்­தது முறையற்ற அணு­கு­மு­றை­யாகும்.

தாம் அவ்­வாறு கூறி­யதை விக்­னேஸ்­வரன் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். ஏன் அவ்­வாறு கூறினேன் என்றும் விப­ரித்­தி­ருக்­கி றார். கொள்கை ரீதி­யாக தமிழரசுக் கட்­சி­ யுடன் தான் இணைந்­தி­ருக்க முடியும் என்­பது அவ­ரது முதல் நிலைப்­பாடு.

அத்­தோடு அவர் நிறுத்திக் கொண்­டி­ருந் தால், இந்­த­ள­வுக்குச் சர்ச்சை வளர்ந்­தி­ருக்­காது. வன்­மு­றை­யோடு சம்­பந்­தப்­பட்ட, ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ, புளொட் ஆகிய கட்­சி­க­ளுடன் கொள்கை ரீதி­யாக நான் இணைந்­தி­ருக்க முடி­யாது என்­பது அவ­ரது இரண்­டா­வது நிலைப்­பாடு.

அது தான் சர்ச்­சைக்கு கார­ண­மா­னது.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் கடந்­தா ண்டு அர­சி­ய­லுக்கு இழுத்து வரப்­ப­டு­வ­த ற்கு முன்னர், உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­ச­ராகப் பதவி வகித்­தவர்.

அர­சி­ய­லுக்கு வர முன்னர், நீதித்­து­றை யில் பணி­யாற்­றிய காலத்தில், சம்­பா­தித் துக் கொண்ட பெயரைத் தக்­க­வைத்துக் கொள்­வ­தற்கு அவர் விரும்பியிருக்­கலாம்.

அதா­வது, முன்னர் போராளி அமைப்­பு­க­ளாக இருந்த இயக்­கங்­க­ளுடன், கொள்கை ரீதி­யாக இணைந்து செயற்­ப­டு­வது, தனது நீதித்­துறைப் பத­விக்­கா­லத்து புக­ழுக்கு களங்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்று அவர் கரு­தக்­கூடும்.

இப்­போது அர­சியல் கட்­சி­யாக இருந்­தா லும், இந்த அமைப்­புகள் முன்னர், ஆயுதப் போராட்­டத்தில் பங்­கெ­டுத்­தவை என்­பதை மறுக்க முடி­யாது. அந்தக் கால­கட்­டத்தில், அவை சட்­ட­பூர்­வ­தன்­மையைக் கொண்­டி­ருந்­த­வை­யு­மல்ல.

ஆனால், பிற்­கா­லத்தில், பொது­மன்­னிப் பின் ஊடாக, அர­சியல் வழிக்குத் திரும்­பி ­யுள்­ளன.

அர­சி­யலில் ஒன்­றாகச் செயற்­பட்­டா லும், கொள்கை ரீதி­யாக அவர்­க­ளுடன் இணைந்­தி­ருக்க முடி­யாது என்­பதை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் வெளிப்படுத்­தி­யி­ருக்­கிறார்.

அது அவ­ரது தனிப்­பட்ட- யாரும் தலை­யீடு செய்ய முடி­யாத கருத்து.

அதே­வேளை, தாம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­லுள்ள எல்லாக் கட்­சி­க­ளு­ட னும் இணைந்து செயற்­ப­டு­வ­தா­கவும், பேதம் பார்க்­க­வில்­லை­யென்றும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­லுள்ள எல்லாக் கட்­சி­களும், இணைந்து கேட்­டு க்­கொண்டால் மட்­டுமே, தாம் முத­ல­மைச் சர் வேட்­பா­ள­ராக போட்டியிடுவேன் என்று அவர் கூறி­யதை ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ போன்ற கட்­சிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

அது உண்­மை­யே­யா­யினும், தமி­ழ­ரசுக் கட்­சியே அவரை முத­ல­மைச்சர் வேட்­பா­ ள­ராக முன்­மொ­ழிந்து அர­சி­ய­லுக்குக் கொண்டு வந்­த­தென்­பது மறுக்­க­முடி­யாத உண்மை.

அவர், முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக அறி­மு­க­மாக முன்­னரே, தமி­ழ­ரசுக் கட்­சி யின் அர­சியல் மேடையில், ஏறி­யி­ருந்தார் என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, தமி­ழ­ரசுக் கட்சி சார்ந்து அவர் செயற்­பட விரும்­பி­யதைத் தவ­றெனக் கருத முடி­யாது. தமி­ழ­ரசுக் கட்­சியின் கொள்கை அவரை ஈர்த்­தி­ருக்­கலாம்.

அந்த விட­யத்தில், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் தனிப்­பட்ட கருத்தின் மீது, ஏனைய கட்­சிகள் கொண்­டுள்ள முரண் ­பாடு எந்­த­ள­வுக்கு சரி­யா­னது என்ற கேள்வி உள்­ளது.

அதை­விட, இந்த விவ­கா­ரத்­துக்குள், ரெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்ற கட்­சிகள், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னையும் இழுத்து வந்து தேவை­யற்ற குழப்­பத்தை ஏற்­ப­டுத்த முனைந்­துள் ­ளன.

தேர்தல் பிர­சா­ரத்தின் போது, பிர­பா­க­ரனை மாவீரன் என்று புகழ்ந்­ததைச் சுட்­டிக்­காட்டி, கேள்வி எழுப்­பப்­பட்­டது அப த்­த­மான விடயம்.

ஏனென்றால், விக்­னேஸ்­வரன் இந்தக் கட்­டத்தில் பிர­பா­கரன் குறித்து கருத்து வெளி­யி­ட­வு­மில்லை, தான் அவ்­வாறு புகழ்ந்­ததை நிரா­க­ரிக்­க­வு­மில்லை.

அதே­வேளை, ஆயுதம் ஏந்­தி­ய­வர்கள் எல்­லோ­ருமே பிர­பா­க­ர­னா­கி­விட முடி­யாது என்­பதை, கூட்­ட­மைப்பில் உள்ள கட்­சிகள் புரிந்­து­கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள், தமக்­காக யாரெல்லாம் போரா­டி­னார்­களோ அவர்­களின் தியா­கங்­களை மறக்­க­வில்லை, அதனை மதிக்­கி­றா ர்கள் என்­பதில் மாற்றுக் கருத்துக்கும் இட­மில்லை.

பிர­பா­க­ரனைச் சுட்­டிக்­காட்­டிய விவ­கா­ரத்தில், காந்­தி­ய­டிகள், நேதாஜி, சுபாஸ் சந்­தி­ரபோஸ் மீது பெரும் மதிப்பு வைத்­தி­ருந்தார். ஆனால், அவ­ரது கொள்கையை ஏற்­க­வில்லை என்­பதை குறிப்­பிட்டுக் காட்­டி­யி­ருக்­கிறார் விக்­னேஸ்­வரன்.

பிர­பா­கரன் மீது மதிப்புக் கொண்­டுள்ள அனை­வ­ருமே, அவ­ரது கொள்­கையை ஏற் றுக் கொள்ள வேண்டும் என்­பது அவ­சி­ய­மில்லை. அதையே அவர் சுட்­டிக்­காட்­டி ­யுள்ளார்.

எவ்­வா­றா­யினும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள், இப்­போது தோன்­றி­யுள்­ளது இது­போன்ற சர்ச்சை தேவை­யற்­ற­தொன்று.

ஏனென்றால், இது தமி­ழரின் அர­சியல் அபி­லா­சை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான கொள்­கையின் ஒரு அம்­ச­மல்ல.

அத­னுடன் தொடர்­பு­டைய விட­யமும் அல்ல. அவ­ர­வரின் தனிப்­பட்ட விருப்பு வெறுப்­பு­களை அர­சி­ய­லாக்கி, எச்­ச­ரிக்கை விடுக்­கின்ற அள­வுக்கு எல்லை மீறு­வது, அபத்தமான அரசியல் போக்காகும்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத் தின் மீது முரண்பாடுகள் இருந்தால், அதனை உரிய இடத்தில் வெளிப்படுத்து வதே முறையானது,  ஏனென்றால், அவர் 1 இலட்சத்து 32 ஆயிரம் விருப்பு வாக்குகளால் தெரிவான ஒருவர்.

அத்தகைய மக்கள் அபிமானம் பெற்ற வெளியுலக மதிப்புப் பெற்ற ஒருவரை, தமிழரின் அரசியல் நலனுக்குச் சாதகமான வகையில் பயன்படுத்திக் கொள்ள முனை வதே புத்திசாலித்தனமானது. இன்றைய நிலையில், தமிழர்களுக்குத் தேவை அதிக மான நண்பர்களே தவிர, பகைவர்களல்ல.

நண்பர்களைப் பகைத்துக் கொள்வது இன்றைய நிலையில் புத்திசாலித்தனமான அணுகுமுறையுமல்ல.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் அனைத்துமே, தமக்கான பொறுப்பையும் கடமையையும், உணர்ந்து செயற்பட்டால், இதுபோன்ற கோழிச் சண்டை, வேலிச்சண்டைகளில் நேரத்தைச் செலவிட நேரமிருக்காது என்பதே உண்மை.

-கபில்-


ISIS–இன் இராணுவ வெற்றிகளும், சிரியா ஈராக் மீதான அமெரிக்க தரை நகர்வு திட்டங்களும் !!

Share.
Leave A Reply

Exit mobile version