பிரபல நடிகர் சூர்யாவின் மனையும் நடிகையுமான ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பின்னர் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டில்லியில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ஜோதிகா ஒவ்வொரு ஷாட்டுக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகவும், அதனால் ஒரு நாளுக்கு எடுக்க வேண்டிய மொத்த ஷாட்டுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் கூறப்பட்டது.
இதனை அறிந்த சூர்யா, ஜோதிகாவுக்கு எச்சரிக்கை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு ஷாட்டுக்கும் அதிக நேரம் எடுத்தால் பின்னர் தயாரிப்பு செலவு அதிகமாகும் என்று ஜோதிகாவுக்கு எடுத்து கூறி ஒவ்வொரு ஷாட்டுக்கும் தேவையான அளவு நேரத்தை மட்டும் எடுத்துக்கொள்ளுமாறு எச்சரித்துள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் கதைப்படி நாற்பது வயது பெண் ஒருவர் வாழ்வில் சிறப்பான வெற்றி பெற்றதால் அவருடைய கணவரின் கோபத்திற்கு ஆளாகி அதன்பின்னர் கணவரை பிரிந்து வாழும் ஒரு பெண்ணின் கதை.
இந்த கதை குறித்து ஜோதிகா அடிக்கடி தனது கணவர் சூர்யாவிடம் விவாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் ஜோதிகா நடிக்கும் வேடட்தில் நடிகை மஞ்சுவாரியர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சங்கருக்கு இளையராஜா நோட்டீஸ்
03-01-2014
மேலும் இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர் அனுப்பியுள்ள நோட்டீசில், “கப்பல் படத்தில் எனது கட்சிக்காரர் இளையராஜாவின் ஊரு விட்டு ஊரு வந்து பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளீர்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவின் இசை – பாடல்களை இனி அகி மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனை செய்யக் கூடாது என நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றுள்ள நிலையில், அந்த அகி மியூசிக்கிடமிருந்து இந்தப் பாடலைப் பெற்று பயன்படுத்தியிருப்பது நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும். ஊருவிட்டு ஊருவந்து பாடலின் காப்பிரைட் உரிமை இளையராஜாவுக்கு மட்டுமே சொந்தமானது.
எனவே இந்தப் பாடல் திரையிலும், ரேடியோ, டிவி, விளம்பரங்களிலும் இதுவரை பயன்படுத்தியதற்கான ராயல்டியை இளையராஜாவுக்கு வழங்க வேண்டும்.
இரசிகர்கள் வீட்டில் சாப்பிட்ட லட்சுமி மேனன்
03-01-2014
இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை உள்ள கிராமங்களில் நடத்தப்பட்டுள்ளது. கிராம மக்கள் சந்தோஷமாக படப்பிடிப்பை காண வந்திருக்கிறார்கள். அப்போது கிராம மக்கள் நிறைய பேர் லட்சுமி மேனனை மதிய உணவிற்கும், இரவு உணவிற்கும் அழைத்துள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவிக்காத லட்சுமி மேனன் உடனடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று விருந்தோம்பலில் கலந்துக் கொண்டுள்ளார். கிராம மக்கள் வழக்கமாக உண்ணும் உணவை லட்சுமி மேனனுக்கு செய்து கொடுத்துள்ளார்கள், அதை விரும்பி லட்சுமி மேனன் சாப்பிட்டிருக்கிறார்.
தற்போது கொம்பன் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து வௌியீட்டுக்குத் தயாராகி இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்தை முத்தையா இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
தொடர்ந்து இந்தப் பாடலைப் பயன்படுத்துவதையும் நிறுத்தும் வகையில் படத்திலிருந்து அந்தக் காட்சியே தூக்கப்பட வேண்டும்.
தவறினால் எனது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் காப்பி ரைட் சட்டப்படி கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளைத் தொடர முடிவு செய்துள்ளார்,” என்று கூறப்பட்டுள்ளது.