எதி­ர­ணியின் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நூறுநாள் வேலைத்­திட்­டத்தில் போரினால் பாதிக்­கப்­பட்ட விதவை­க­ளுக்கு தகுந்த பாது­காப்பும் , வாழ்­வா­தா­ரமும் பெற்றுக் கொடுக்­கப்­படும் என வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் தங்­க­ளு­டைய சொந்த காணி­க­ளி­லி­ருந்து விரட்­டி­ய­டிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரணம் பெற்றுக் கொடுக்­கப்­படும் எனவும் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெற்­ற­வுடன் நாட்டில் ஜன­நா­யகம் நிலை­நி­றுத்­தப்­பட்டு சுமுகநிலை ஏற்­பட்­ட­வுடன் இனப்­பி­ரச்­சினைத் தீர்­வு­கு­றித்து அனைத்துத் தரப்­பி­னரும் தெரிந்து கொள்ளும் வகையில் பகிரங்க­மாகப் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்திரன் செவ்­வியில் தெரி­வித்தார்.

அவ­ரது செவ்வி முழு­மை­யாகக் கீழே தரப்­ப­டு­கி­றது.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் எதி­ர­ணியின் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு ஆத­ர­வ­ளிப்­பது என எடுக்­கப்­பட்ட முடிவு ஏகோ­பித்த முடிவா? இவ­ருக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு முன்னர் அவ­ருடன் ஒப்­பந்தம் ஏதேனும் செய்து கொள்­ளப்­பட்­டுள்­ளதா?

பதில்: கூட்­ட­மைப்பின் முடிவு ஏக­ம­ன­தான முடி­வாகும். நாம் எதி­ரணி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் எவ்­வித ஒப்­ப­ந்தங்­களும் செய்து கொள்­ள­வில்லை.

கேள்வி: ஒப்­பந்­தங்கள் ஏதும் இல்லை என்றால் எவ்­வாறு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­தீர்கள். தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்த்து ஆர­த­வ­ளிக்கத் தீர்­மா­னித்­தீர்­களா?

பதில்: தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை மட்டும் பார்க்கவில்லை. அவரின் பிர­தான நிலைப்­பாடு எவ்­வாறு இருக்­கின்­றது என்­பதைப் பார்த்தோம்.

இந்த நாட்டில் ஜன­நா­யகம் இல்­லாமல் போயுள்­ளது, ஏகா­தி­பத்­தியம் தலை­வி­ரித்து ஆடு­கின்­றது, ஊடக சுதந்­திரம் இல்­லாமல் ஒழிக்­கப்­பட்­டுள்­ளது.

சிவில் அமைப்­புகள் இயங்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தின் அதி­காரம் குறைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. எதிரணி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன இவை­ய­னைத்­தையும் மீள முறை­யாக இயங்கச் செய்ய உறுதி பூண்­டுள்ளார்.

இவை அனைத்­தையும் மாற்றி அமைப்­ப­தற்கு முத­லா­வ­தாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை ஒழிக்க வேண்டும்.

18ஆம் திருத்­தத்தை இல்­லாமல் செய்து 17ஆம் திருத்­தத்தை மீண்டும் கொண்­டு­வர வேண்டும். தேர்தல் முறை பரீசீலிக்கப்பட வேண்டும். இந்த மூன்று விட­யங்­க­ளையும் முதல் நூறு நாட்­களில் நிறை­வேற்­று­வது இவரின் பிர­தான இலக்கா­க­வுள்­ளது.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ 2005ஆம் ஆண்டு நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­ப­தி­பதி முறை­மையை ஒழிப்பேன் என்று தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஆனால் அதை ஒழிக்­க­வில்லை. 2010ஆம் ஆண்டு அதன் அதி­கா­ரங்­களைக் குறைப்பேன் என்று கூறினார். ஆனால் குறைக்கவில்லை. மாறாக 18ஆம் திருத்­தத்தின் மூலம் அதி­கா­ரங்­களை அதி­க­ரித்­தி­ருக்­கின்றார்.

அவர் வாக்­கு­றுதி அளித்­த­படி எதுவும் செய்­ய­வில்லை. இம்­முறை அப்­படிச் செய்வேன் என்று கூடச் கூற­வில்லை. ஆகையால் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் இரு­வரின் நிலைப்­பாட்­டிலும் பாரிய வித்­தி­யாசம் காணப்­ப­டு­கின்­றது.

நாட்டில் ஒரு ஜன­நா­யக சூழல் உரு­வாக வேண்­டு­மாக இருந்தால் நாடு தற்­போது செல்லும் திசை­யி­லி­ருந்து தடுத்து நிறுத்­தப்­பட வேண்டும். அது எதிர்த் திசைக்கு மாற்­றப்­பட வேண்டும். அப்­படி செய்வேன் என்று கூறி இருக்கும் ஒரே வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மட்­டுமே.

கேள்வி : கடந்த சில நாட்­களின் முன்னர் சந்­தி­ரிகா அம்­மையார், ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் கூட்­ட­மைப்பு தலைவர்களுக்கும் இடையில் இர­க­சிய சந்­திப்­பொன்று இடம்­பெற்­றுள்­ள­தாக பத்­தி­ரி­கை­களில் செய்தி வெளி­யாகி இருந்­தது. இது எந்தளவு உண்­மை­யா­னது?

பதில்: எந்­த­வி­த­மான உண்­மையும் இல்லை. அவ்­வாறு நாங்கள் எந்­த­வி­த­மான சந்­திப்­பையும் நடத்­த­வில்லை.

கேள்வி: கூட்­ட­மைப்­பி­ன­ருக்கும் எதி­ர­ணியின் பொது வேட்­பா­ள­ருக்­கு­மி­டையில் இது­வரை பேச்­சு­வார்த்­ததை நடத்­தப்­ப­ட­வில்­லையா? நாங்கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் இது­தொ­டர்­பா­கவும் ஏதேனும் ஒப்­பந்­தங்கள் செய்து கொள்­வீர்­களா எனவும் வின­வினோம். அவர் இல்லை என்று பதி­ல­ளித்தார். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: அவரே கூட்­டங்­களில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இரண்டு தட­வைகள் பகி­ரங்­க­மாகப் பேசி­யி­ருப்­ப­தாக கூறியிருக்­கிறார்.

ஆனால் நாங்கள் எந்­த­வி­த­மான ஒப்­பந்­தங்­களும் செய்து கொள்­ள­வில்லை. ஆனால் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­கின்றோம். பேச்­சு­வார்த்­தையின் அடிப்­படை என்­ன­வென்று கூறினால் நாங்கள் இனப்­பி­ரச்­சினை தீர்வு குறித்து தகுந்த சூழல் ஒன்று உருவாக்­கப்­பட வேண்டும்.

நாங்கள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் பத்து வரு­டங்­க­ளாகப் பேசி­யி­ருக்­கின்றோம். அது­மட்­டு­மல்ல விசே­ட­மாக கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக இது தொடர்பில் பேசி­யி­ருந்தோம்.

ஆனால் செய்­வ­தாக உறு­தி­ய­ளித்த எந்த விட­யத்­தையும் அவர் செய்­ய­வில்லை. மாறாக எங்­க­ளுக்கு எதி­ரான திட்­டங்­களை வகுத்து அதை நடை­மு­றை­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கிறார். அது நிறுத்­தப்­பட வேண்டும்.

அவரின் கைக­ளிலும் அவரின் குடும்­பத்தின் கைக­ளிலும் முழு­மை­யான அரச அதி­காரம் இருப்­பதன் கார­ணத்­தினால் எமக்­கொரு ஜன­நா­யக இடை­வெளி கூட இல்­லாமல் போய்­விட்­டது.

அதனால் அதை மீண்டும் பெற­வேண்­டி­யது தான் முத­லா­வது படி. தீர்­வு­களைப் பற்றிப் பேசு­வ­தற்கு முதலில் எமது நாடு ஒரு ஜன­நா­யக நாடாக இருக்கப் போகின்­றதா இல்­லையா? என்­பது தான் இன்று எம் நாட்டை எதிர் நோக்­கி­யுள்ள முதல் கேள்வி.

ஆகையால் எல்­லா­வற்­றிற்கும் முதலில் ஏகா­தி­பத்­தியத்தை நோக்கி போய்க் கொண்­டி­ருக்கும் நாட்டை திசை திருப்பி மீண்டும் ஜன­நா­யகம் கொண்ட நாடாக உரு­வாக்­கு­வ­துதான் எங்­களின் முதற் கடமை.

கேள்வி: ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ, பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான சார தேரர் ஆகியோர் வடக்கில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரில் 50 சத­வீ­த­மா­னோரை வாபஸ் பெறு­வது உட்­பட பல்­வேறு கோரிக்கைகளுக்கு பொது­வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கூட்­ட­மைப்­பி­ன­ருடன் இர­க­சிய ஒப்­பந்தம் மேற்கொண்டுள்ளதாக பிரசார கூட்­டங்­களில் கூறி­வ­ரு­கின்­றனர். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில் : எந்த வித­மான ஒப்­பந்­தமும் கிடை­யாது. ஆனால் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நூறு நாள் வேலைத்­திட்­டத்தில் போரினால் பாதிக்­கப்­பட்ட வித­வை­க­ளுக்கு தகுந்த பாது­காப்பும், வாழ்­வா­தா­ரமும் பெற்றுக் கொடுப்­ப­தாக வாக்­கு­றுதி வழங்கப்­பட்­டுள்­ளது.

தங்­க­ளு­டைய சொந்த நிலங்­களில் இருந்து விரட்­டி­ய­டிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை பெற்றுக் கொடுப்­ப­தா­கவும் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

கேள்வி: இக்­க­ருத்து உங்­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்­தையில் சொல்­லப்­பட்­டதா? அல்­லது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் காணப்­ப­டு­கின்­றதா?

பதில் : அவ­ரு­டைய நூறுநாள் வேலைத்­திட்­டத்தில் இவை அனைத்தும் கூறப்­பட்­டுள்­ளது. வடக்கு கிழக்கில் புல­னாய்வுப் பிரி­வி­னரின் தலை­யீட்டை இல்­லாமல் செய்வேன் என்றும் கூறப்­பட்­டுள்­ளது.

வடக்­கிலும் கிழக்­கிலும் சிவில் ஆட்சி முறையை மீளக்­கொண்டு வருவேன் என்றும் கூறி­யுள்ளார். இரா­ணுவம் இரா­ணு­வத்­திற்­கு­ரிய செயலில் மட்டும் தான் ஈடு­படும் அதைத் தவிர்த்து வேறு எந்த நட­வ­டிக்­கை­யிலும் ஈடு­ப­டுத்­தப்­பட மாட்­டாது என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

இவை அனைத்தும் முற்­போக்­கான விட­யங்கள். எமது மக்­க­ளுக்கு இவற்றைச் செய்­வா­ராக இருந்தால், இன்று மக்கள் எதிர்­நோக்­கி­யி­ருக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு ஒரு நிவா­ரணம் கிடைக்கக் கூடிய சாத்­தி­யக்­கூறு காணப்­ப­டு­கின்­றது.

கேள்வி: முதல் படி­யாக இந்த நாட்டில் ஜன­நா­ய­கத்தைக் கொண்டு வர­வேண்டும். அதன் பிறகு தான் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண­வேண்டும் என்­கின்­றீர்­களா?

பதில்: முத­லா­வ­தாக மக்கள் இயல்பு வாழ்க்­கைக்கு திரும்ப வேண்டும். அதன் பிறகு கொண்­டு­வ­ரப்­போகும் தேசிய நல்­லி­ணக்க அர­சாங்­கத்தின் மூலம் இந்த நாட்­டிற்­கொரு புதிய அர­சி­ய­ல­மைப்பு சட்டம் உரு­வாக்­கப்­படும் என ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒரு உறுதி மொழியை வழங்­கி­யி­ருக்­கின்றார்.

இப்­ப­டி­யான ஒரு ஜன­நா­யக சூழல் கிடைக்­கு­மாக இருந்தால் அப்­போது நாங்கள் நீண்ட கால இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை அந்த புதிய அர­சி­ய­ல­மைப்பு திட்­டத்தின் மூலம் உரு­வாக்­கு­வ­தற்கு எங்­களால் முடிந்­த­வற்றை அந்த வேளையில் செய்­வ­துடன் எமது நிலைப்­பாட்­டையும் தெரி­விப்போம்.

கேள்வி: நூறு நாள் திட்­டத்தின் பின் உரு­வாக்­கப்­படும் தேசிய அர­சாங்­கத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அங்கம் வகிக்­குமா?

பதில் : அது குறித்து நாங்கள் இன்னும் தீர்­மா­னிக்­க­வில்லை. நாங்கள் பொது எதிர்க் கட்­சி­களின் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­தி­ட­வில்லை.

தற்­போது தான் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிப்­ப­தென தீர்­மா­னித்­தி­ருக்­கின்றோம். ஆனால் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு இன்னும் நான்கு நாட்­களே இருக்கும் கார­ணத்­தினால் அவ­ருடன் மேடையில் ஏறி பிர­சாரம் செய்­வது தொடர்­பா­கவும் இன்னும் தீர்­மா­னிக்­க­வில்லை.

ஜனா­தி­பதித் தேர்­தலில் எதி­ர­ணியின் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி பெற்ற பின்னர் ஏற்­படும் முன்­னேற்­றத்­தின்­படி நாங்கள் அடுத்­த­டுத்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்வோம். அத்­தோடு நாங்கள் பின் கதவால் போய் இர­க­சிய ஒப்பந்தம் எதுவும் செய்­து­கொள்ள வில்லை.

அப்­படிச் செய்யும் எண்­ணமும் எமக்­கில்லை. ஏனெனில் இந்த பிரச்­சினை தீர­வேண்­டு­மாக இருந்தால் அது முறைப்­ப­டியும் வெளிப்­படைத் தன்­மை­யோடும் எல்லா நாட்டு மக்­க­ளுக்கும் தெரிந்த வகையில் பேச்­சு­வார்த்­தைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

நாட்­டி­லுள்ள எல்லா மக்­களும் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய தீர்­வொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். அவ்­வாறு உரு­வாக்­கப்­படும் தீர்­வுதான் நிலைத்து நிற்கும்.

அதே­நே­ரத்தில் அர­சாட்சி அதி­கா­ரங்­களில் சகல மக்­க­ளுக்கும் அதில் பங்கு இருக்க வேண்டும். எண்­ணிக்­கையில் சிறு­பான்­மை­யாக இருக்கும் கார­ணத்­தினால் அதை அடைய முடி­யாமல் சில மக்­களும், எண்­ணிக்­கையில் பெரும்­பான்­மை­யாக இருப்­பதால் தங்­களின் கைகளில் மட்டும் அதை வைத்துக் கொள்ள நினைக்கும் மக்­களும் இருக்க முடி­யாது. ஆகையால் நியா­ய­மான ஒரு நிலைப்­பாடு என்­பதை பெரும்­பான்­மை­யின மக்­களும் ஏற்­றுக்­கொள்­வார்கள். ஆகவே அப்­ப­டி­யான ஒரு சூழலில் எங்­களை நாங்கள் அர்ப்­ப­ணித்து இருக்­கின்றோம்.

Share.
Leave A Reply

Exit mobile version