மைத்ரிபால சிறிசேன அவர்கள் வெற்றிபெற்றும் பட்சத்தில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவியை விட்டு போகாமல் இருந்தால் அவரை வெளியேற்ற தங்களிடம் மாற்றுதிட்டம் ஒன்று இருப்பதாகவும் அதனை இப்போது சொல்ல முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ள நிலையில்….
நேற்று கொழும்பில் நடந்த மைத்ரியின் கடைசி தேர்தல் பிரசார கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுள் இருவரில் ஒருவரான மேல் மாகாணசபை உறுப்பினறும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான பைருஸ் ஹாஜியார் நேற்று இரவு மருதானை பிரசார மேடையில் வைத்து பொது வேட்பாளரிடம் மைத்ரியிடம் ” மக்கள் நம்மோடு உள்ளனர் ஆனால் எதாவது மஹிந்த ஜில்மாட் செய்ய வாய்ப்பு உள்ளதா ? என வினவியுள்ளார்.
இதற்கு புன்னகையுடன் பைரூஸ் ஹாஜியாரிடம் பதில் அளித்துள்ள “மைத்ரி ” ஒரு ஜில்மாட் செய்ய முடியாது மஹிந்த சென்ற பாடசாலையில் நான் தான் ஹெட்மாஸ்டர் அது அவருக்கு நன்கு தெரியும்” என குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர நேற்று திரண்ட லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தினை கண்டு பிரமித்துபோன மைத்ரி பிரசார கூட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூட்ட ஏற்பாட்டாளர்களான மேல்மாகாண சபை உறுப்பினர்கள்பைரூஸ் ஹாஜியார் , முஜீபுர் ரஹ்மான் ஆகியோருக்கு தனிப்பட்ட ரீதியில் தனது நன்றியை தெரிவித்துள்ளர்.
தோல்விக்குப் பின் மகிந்தவை வெளியேற்ற சந்திரிகா வைத்துள்ள இரகசியத் திட்டம்
05-01-2014
அதிபர் தேர்தலில், தோல்விடைந்த பின்னர், பதவியை விட்டு விலக மகிந்த ராஜபக்ச முன்வராது போனால், அவரை வெளியேற்றுவதற்கு எதிரணியிடம் ஒரு இரகசியத் திட்டம் இருப்பதாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பிபிசி சந்தேசயவுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் சிறிலங்காவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் தோல்வி கண்ட பின்னரும் பதவியை விட்டு விலகாமல், மகிந்த ராஜபக்ச அடம்பிடிப்பாரேயானால், அவரை வெளியேற்றுவதற்கு எதிரணியிடம் ஒரு இரகசியத் திட்டம் உள்ளதாகவும் சந்திரிகா குறிப்பிட்டார்.
எனினும், அத்தகைய சூழலில், தாம் முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கைத் திட்டம் குறித்து விபரங்களை வழங்க அவர் மறுத்து விட்டார்.
தேர்தலில் வன்முறைகளையும், மோசடிகளையும் நிகழ்த்த அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகத் தக்க்குத் தகவல்கிடைத்துள்ளதாகவும், பொதுமக்களின் கருத்தை இதன் மூலம் தோற்கடிக்க முடியாது என்றும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.
2004ம் ஆண்டு மகிந்த ராஜபக்சவை பிரதாமராக நியமிக்க எடுத்த முடிவுக்காக தான் இப்போது வருத்தம் கொள்வதாகவும், அதுவே நாட்டின் அதிபராக மகிந்த ராஜபக்ச வருவதற்கு வழிவகுத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலம் பெயர் தமிழர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் சந்திரிகா இந்தச் செவ்வியில் கூறியுள்ளார்.