பிரான்சின் நகைச்சுவை மற்றும் பகடி இதழான “சார்லி ஹெப்டோ”வின் அலுவலகங்கள் மீது முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்திருக்கின்றனர்.

paris-shooting-gun_3156785b

பாரிசிலிருந்து வெளிவரும் இந்த சஞ்சிகை கடந்த காலங்களில் இஸ்லாமியவாதிகளால் இலக்குவைக்கப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதல் உள்ளூர் நேரப்படி காலை நடந்தது. முகமூடி அணிந்த ஆயுததாரிகள் அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைந்து தானியங்கி ஆயுதங்களை வைத்து சுடத்தொடங்கினர்.

குறைந்தது 50 குண்டுகள் சுட்டுத்தீர்க்கப்பட்டன என்று செய்திகள் கூறுகின்றன. தாக்குதலை நடத்தியவர்கள் பின்னர் ஒரு காரில் தப்பியோடிவிட்டனர்.

தாக்குதலை நடத்தியவர்களைப் பிடிக்க பெரும் போலிஸ் நடவடிக்கை ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது.

பிரெஞ்சுத் தலைநகர் முழுவதும் அதி உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.

அதிபர் பிரான்சுவா ஒலோந்து இந்த தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருக்கிறார். இதன் பின்னர் அவர் அரசின் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்துவார்.

ஏதாவது செய்தியை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது சார்லி ஹெப்டோவுக்கு வழக்கமாகிவிட்டது. அண்மையில் அந்த வார இதழ் உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி பற்றி கார்டூன் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தான் இன்று சார்லி ஹெப்டோ அலுவலகத்தில் கொடூரத் தாக்குதல் நடந்துள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version