அரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர் சுல்தான் சிங். ஒரு நாள் அவரது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது குரங்கு ஒன்று வந்தது.
சுல்தான் சிங்கும், அவரது மனைவியும், குரங்கிற்கு ‘நானி’ என்று பெயர் வைத்து அதை தங்கள் குழந்தை போல் பாவித்து வருகின்றனர். அதே போல் குரங்கும் சுல்தான் சிங்கின் குழந்தையை பெற்ற தாயை போல் கவனித்து வருகிறது.
இதே போல் கடந்த மாதம், ரெயில்வே உயர் மின்னழுத்தக் கம்பியில் சிக்கிய குரங்கு ஒன்று மின்சாரம் தாக்கி திடீரென ரெயில்வே தண்டவாளத்தில் விழுந்தது.
அதோடு நிற்காமல் தண்டவாளங்களுக்கிடையே தேங்கியிருக்கும் தண்ணீரில் அதை முக்கியது. ஒரு கட்டத்தில் அதற்கு சுய நினைவை வரச்செய்வதற்காகக் கடிக்கக் கூட செய்து தனது நண்பனையும் அது பிழைக்க வைத்தது.
வளர்ந்து வரும் நாகரிக உலகில் அடுத்தவருக்கு உதவும் குணத்தை மனித இனம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் வேளையில், மனிதர்களால் விலங்கினம் என அழைக்கப்படும் குரங்கின் குணம் நாளுக்கு நாள் மேன்மையடைந்து வருவதை எப்படி பாராட்டினாலும் மிக்க தகும்.