தீர்மானத்துக்கு முரணான கருத்து வெளியிட்டமை மற்றும் தீர்மானத்துக்கு முரணான முறையில் பிரசாரம் மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், தமிழரசுக்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவாகரன் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், சனிக்கிழமை (10) தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது,
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக பதவியில் இருந்தும் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் இடைநீக்கியுள்ளதாக அறிவிக்கவுள்ளோம்.
அடுத்த கட்டமாக இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் மிக விரைவில் நடைபெறவுள்ளது.
விசாரணையின் பின்னர் குறித்த உறுப்பினர்களின் பதவி மற்றும் உறுப்புரிமை நீக்குவது தொடர்பாக மத்திய செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அனந்தியின் பின்னணி….
அனந்தி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தாலும்.. “அவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி” கட்சித் தலைவர் குமார் பொன்னம்பலத்தின் கட்டுப்பாட்டில் தான் இயங்கியவர்.
அனந்திக்கு புலம்பெயர் புலியாதரவு அமைப்புக்களும், புலியாதரவாளர்களுமே ஆதரவளித்து, பெருந்தொகையான பணம் செலவழித்து .. அவரை வடமாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்வதற்கு உதவியவர்கள்.
அந்த திமிரில் தான் அனந்தி கூட்டமைப்பு தலைமைக்கு கட்டுப்படாமல் இயங்கியவர். அனிந்தி கூட்டமைபிலிருந்து நீக்கப்பட்டமைக்கு சிவாஜிலிங்கமும் முக்கிய காரணகர்த்தாவாக இருப்பார். அவர்தான் அனிந்தியை தூண்டிவிடுபவர்.
கூட்டமைபிலிருந்து புலியாதரவாளர்களை விலக்கி வைப்பதே கூட்டமைப்புக்கும், தமிழர்களுக்கும் நன்மை பயக்கும்.
இந்த செய்தியானது... அனந்தியை கூட்டமைப்புக்குள் கொண்டு வந்து சேர்த்த எம்.பி சிறிதரனுக்கும், புலம்பெயர் புலியாதரவாளர்களுக்கும், அதிர்ச்சி செய்தியாக இருக்கும்.