பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்தோ வார இதழ் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை புகுந்த அல்,கய்தா தீவிரவாதிகள் 2 பேர் வார இதழின் ஆசிரியர் உட்பட 12 பேரை சுட்டுக் கொன்றனர்.
அந்த வாலிபர்கள் பிரான்சை சேர்ந்த செய்யது கவாச்சி (34), செரிப் கவாச்சி (32) சகோதரர்கள் என்பதும், ஏமன் நாட்டில் தீவிரவாத பயிற்சி பெற்றவர்கள் என்பதும் விசாரணையில் தெரிந்தது.
இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே பாரிசில் உள்ள காவல் நிலையத்தில் பெண் போலீசை அமெடி கவுலிபே (32) என்ற தீவிரவாதி சுட்டுக் கொன்றான்.
நேற்று முன்தினம் கவாச்சி சகோதரர்கள் ஒரு பெண்ணை காரில் கடத்தி டேம்மார்ட்டின் டி கோலே நகரில் உள்ள வணிக கட்டிடத்துக்குள் புகுந்தனர்.
பாதுகாப்பு படை வீரர்களும், போலீ சார் அங்கு குவிக்கப்பட்டனர். அதே சமயத்தில், தீவிரவாதி அமெடி கவுலிபே, பாரிசின் சூப்பர்மார்க்கெட்டில் 5 பிணைக் கைதிகளை பிடித்து வைத்து மிரட்டினான்.
அங்கும் போலீசார் குவிக்கப்பட்டனர். நள்ளிரவு வரை நடந்த துப்பாக்கி சூட்டில் அல்,கய்தா சகோதரர்களும், அமெடி கவுலிபேவும் கொல்லப்பட்டனர். கவாச்சி சகோதரர்கள் கடத்திய பிணைக்கைதி உயிருடன் மீட்கப்பட்டார்.
அமெடி கவுலிபே, 4 பிணைக்கைதிகளை சுட்டுக் கொன்றான். கடந்த 3 நாளில் 17 பேரை கொன்ற 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதால் பாரிசில் நிலவி வந்த பதற்றம் ஓய்ந்தது.
இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் பிரான்கோசிஸ் ஹாலன்டி முக்கிய அமைச்சர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
PORTAL-Hayat-Boume
அவர் பாரிசில் மீண்டும் ஒரு தாக்குதலை அரங்கேற்ற இருப்பதாகவும் உளவுத்தகவல்கள் வெளியாகி உள்ளன. தப்பிய பெண் தீவிரவாதியை தீவிரமாக தேடி வருகிறோம்‘ என கூறி உள்ளார்.