இப்போது ஒரு நடிகையாகவும் மாறிவிட்டார் சரிதா நாயர். கிட்டத்தட்ட ஷகிலா ரேஞ்சுக்கு அவரைக் காட்ட ஆரம்பித்துள்ளனர். முதல் கட்டமாக அவர் ஒரு குறும்படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
‘கல்புகாரன்டே பார்யா’ (வளைகுடா நாட்டுக்காரனின் மனைவி) என்ற இந்த படத்தில் அரபு நாட்டில் பணிபுரியம் ஒரு தொழிலாளியின் மனைவியாக இவர் நடித்துள்ளார்.
கேரளாவில் தனிமையில் வசித்து வரும் அரபு நாட்டு தொழிலாளியின் மனைவி சந்திக்கும் பிரச்சினைகள் தான் இந்த படத்தின் கருவாகும்.
15 நிமிடங்கள் மட்டும் ஓடும் இந்த படம் நேற்று முன்தினம் யூ-டியூபில் வெளியானது. முதல் நாளிலேயே இந்தப் படத்தை 1.5 லட்சம் பேருக்கு மேல் பார்த்து ஹிட்டாக்கியுள்ளனர்.
Saritha Nair’s ‘film’