தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க ஒன்றுபட வேண்டும் என பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

தனது இந்த அழைப்பை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்வார்கள் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, இன்று, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை, பத்திரிப்பில், நாட்டு மக்களுக்கான தனது முதலாவது உரையை நிகழ்த்தினார்.

இது ஒரு விவசாய நாடு, தமது அரசாங்கத்தில் விவசாயத்துறையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன்போது கூறினார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரங்கள் பாராளுமன்றம், அமைச்சரவை மற்றும் நீதித்துறைக்கு மாற்றப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது உறுதியளித்துள்ளார்.

அத்துடன் நாட்டிற்கு அதிகளவு அன்னிய வருமானத்தை ஈட்டித்தருபவர்களான, வௌிநாடுகளில் பணிப் பெண்களாக உள்ளவர்களின் தனிப்பட்ட பொருளாதாரத்தை முன்னேற்றி அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

எமது நாட்டுக்கு தேவை அரசன் அல்ல உண்மையான மனிதன் என கூறிய அவர், சத்தியப் பிரமாணத்தின் போது, தான் தெரிவித்ததற்கு அமைய இதுவே தான் களமிறங்கிய முதலாவது மற்றும் இறுதியான ஜனாதிபதித் தேர்தல் எனவும் மேலும் சுட்டிக்காட்டினார்.

Maithripala_Sirisena_kandy_1

Share.
Leave A Reply

Exit mobile version